Pushpa 2

‘வீடியோ உலகம் இதனை கவனிக்கவும்’ என விஷால் செய்த குறும்பு

மதகஜராஜா கொடுத்த மகிழ்ச்சியில், விஷால் வழங்கிய குறும்புச் செயல் குறித்துப் பார்க்கலாம் வாங்க..

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸாகி, பரவலாக கொண்டாடப்பட்டு உள்ளது தெரிந்ததே.

ரிலீஸாகி 15 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில், இப்படம் 50 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மீண்டும் விஷாலும், சுந்தர்.சியும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக விஷால் கை நடுக்கத்துடன் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார். ஆனால், அது வைரல் காய்ச்சலால் வந்தது என விஷாலின் மருத்துவர் கூறினார்.

இந்நிலையில், விஷால் இன்று கூறியதாவது,’ ‘ஒரு நிமிடம் மறந்துவிட்டேன்’ என சொல்லி மைக்கை வாங்கி கைகளை நடுங்கும்படி ஆட்டினார். பிறகு இப்போதெல்லாம் இப்படி செய்தால்தான் வீடியோ உலகம் முழுக்க சென்று சேர்கிறது’ என தெரிவித்தார்.

முன்னதாக படத்தின் ரிலீஸுக்கு பிறகு செய்தியாளர்களை ஒருமுறை சந்தித்த அவர், எனது கைகள் நடுங்கிய வீடியோ ரொம்பவே ட்ரெண்டாகி இருந்தது. பலரும் எனக்கு ஃபோன் செய்து உடல்நிலையை விசாரித்தார்கள்’ என கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதற்கு இணையவாசிகள், விடுங்க விஷால், அப்புறம் மீண்டும் சுந்தர்.சியுடன் இணையும் படம் மதகஜராஜா 2-வது பாகமா? என கேட்டு வருகின்றனர்.