சிம்புவும் திரிஷாவும் பரிசீலனை செய்ய வேண்டும்: ரசிகர்கள் அன்புக் கோரிக்கை

Web Ads

காதலிப்பவர் எல்லாம் கல்யாணம் முடிப்பதில்லை. கல்யாணம் முடித்தவர் எல்லாம் காதலிப்பதில்லை. அதாவது விஷயம் என்னன்னா..

ராணா-திரிஷா இருவருக்கும் இடையே நிகழ்ந்த காதல் கல்யாணம் வரை போகவில்லை. அந்நிலையில், ராணாவுக்கு மஹிகா பஜாஜ் மீது காதல் வந்து இருவருக்கும் கல்யாண வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது.

இச்சூழலில், திரிஷா பற்றி தற்போது ராணா கூறியதாவது, ’10 ஆண்டுகளுக்கும் மேலாக திரிஷா என் தோழியாக இருந்து வருகிறார். நாங்கள் பல காலமாக நண்பர்கள், டேட் கூட செய்தோம். ஆனால் டேட்டிங் ஒர்க்அவுட் ஆகவில்லை’ என்றார்.

திரிஷாவை காதலித்ததாக பேசப்பட்டபோதும், பிரேக்கப் ஆன போதும், அது பற்றி பேசாத ராணா, தற்போது பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திரிஷாவை பொறுத்தவரையில், எப்பொழுதுமே தன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிப் பேச விரும்பாதவர். ராணா விவகாரம் பற்றி திரிஷா பேசியதே இல்லை.

இந்நிலையில், சிம்புவும் சிங்கிளாக இருக்கிறார், திரிஷாவும் சிங்கிளாக இருக்கிறார். இருவருக்குமே விவாகரத்து மீது நம்பிக்கை இல்லை. அதனால் சிம்புவும், திரிஷாவும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என ரசிகர்கள் ஆசைப்பட, அதற்கு நெட்டிசன்ஸ், ‘இருவரும் விண்ணைத் தாண்டியதெல்லாம் போதும், முதலில் விவாகத்தின் மீது நம்பிக்கை வரட்டும்’ என தெளிவுரை வழங்கியுள்ளனர்.

தற்போதும் உச்சத்தில் இருக்கும் திரிஷா, அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி இரண்டு படங்களிலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.