சசிகுமார் நடிக்கும் படத்தில், ராஷ்மிகாவுக்கு போட்டியாக, சைத்ரா அறிமுகம்?
போட்டி என்பது ஆக்டிங்கிலும் உண்டு. கிளாமரிலும் உண்டு. அவ்வகையில், கன்னடத்தில் இருந்து இன்னொரு வரவு பற்றிப் பார்ப்போம்..
சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ பட வெற்றியை தொடர்ந்து, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வெளியாக உள்ளது. இப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.
இது தவிர, மற்றொரு படம் ‘மை லார்ட்’. இந்த படத்தை ராஜு முருகன் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையான சைத்ரா ஆச்சர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
‘மை லார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சசிகுமார் மற்றும் சைத்ரா ஆச்சர் பீடி குடித்துக்கொண்டு, ஏதோ ஒன்றிற்காக காத்துக் கொண்டு இருப்பதுபோல இருந்தனர். இந்த மாறுபட்ட போஸ்டர் வைரலானது.
தற்போது, சைத்ரா ஆச்சர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஆடை எதுவும் அணியாமல், அரை நிர்வாணமாக தனது முதுகை காட்டியபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்துடன் மேலும் இரண்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த இரண்டு புகைப்படங்களில் சட்டை அணிந்து கொண்டு, அத்துடன், அதில் பட்டன் எதுவும் போடாமல் போஸ் கொடுத்துள்ளார்.
செம கிளாமராக இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் , இன்ஸ்டாகிராமிலும் வைரலாகி தெறிக்கிறது. சைத்ரா ஆச்சரை இன்ஸ்டாவில் சுமார் 3 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள். கன்னட வரவான ராஷ்மிகாவுக்கு போட்டியாக சைத்ரா களம் இறங்கியுள்ளாரோ எனவும் பேசப்படுகிறது.