நந்தினியை நினைத்து கண்கலங்கும் சூர்யா, கடத்தல்காரர்களிடம் இருந்து வந்த போன், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் மாதவி நந்தினி இன்னும் வராததால் டென்ஷன் ஆக இருக்க, சூர்யாவை விட நீ தான் ரொம்ப டென்ஷனா இருக்க என்று சொல்ல நந்தினி வரலைன்னா அம்மா வேற ஒரு பணக்கார பொண்ணு சூர்யாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க என்ன பண்றதுன்னு தெரியலையே என யோசித்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி கூப்பிடுகிறார். உன் முகம் எதுக்கு சோகமா இருக்கு என்று கேட்க, நந்தினி எங்க தாம்மா போயிருப்பா என்று கேட்கிறார். அவ சொந்த ஊருக்கு போயிருப்பானு தோணுது சுதாகர் கிட்ட சொல்லி இருக்கேன் என்று சொல்ல உடனே சுதாகரிடமிருந்து வாய்ஸ் நோட் வருகிறது அதில் நந்தினி ஊருக்கு வரவில்லை என சொல்லுகிறார். பிறகு அப்போ எங்க போயிருப்பா என அனைவரும் யோசிக்கின்றனர்.
நந்தினியை கட்டிப்போட்டு வைக்க, கொஞ்ச நேரத்தில் நந்தினியின் கண்ணை கட்டுகின்றனர். உடனே வட்டிக்கார பெண்மணி வந்து நந்தினியிடம் பேசுகிறார். இன்னும் ஒரு ராத்திரிதான் நாளைக்கு வீட்டுக்கு போயிடலாம் என்று சொல்லுகிறார். என்னை எதுக்கு நீங்க அடைச்சு வச்சிருக்கீங்க என்று கேட்க எல்லாம் ஒரு காரணமாத்தான் நாளைக்கு அந்த வேலை முடிஞ்சு விடும் அதுவரைக்கும் அமைதியா இருக்கணும் இல்லன்னா கைய காலை உடைத்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்று விடுகிறார். அருணாச்சலம் உட்கார்ந்து கொண்டிருக்க சூர்யா வந்து இதுக்கு அப்புறம் நந்தினி எப்படி தேடுவது என்று எனக்கு தெரியவே இல்லை என்று சொல்லுகிறார். எனக்கு உங்க பொண்டாட்டி சுந்தரவல்லி மேல தான் சந்தேகமா இருக்கு என்று சொல்லுகிறார். ஆனால் அருணாச்சலம் சுந்தரவல்லி செஞ்சி இருக்கமாட்டா என்று சொல்லுகிறார்.
அவகிட்ட இத பத்தி எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்காத முதல்ல நந்தினியை தேடி கண்டுபிடிக்கிற வேலையை பார்க்கலாம் என்று சொல்ல சரி நான் போய் வெளியே தேடி பார்த்துட்டு வரேன் டாடி என்று கிளம்புகிறார். அருணாச்சலம் வெளியில் நடந்து கொண்டிருக்க சிங்காரம் வருகிறார். என்ன சிங்காரம் என்று கேட்க, நந்தினி போன் பண்ணா எடுக்கல அது தான் நேர்ல பார்த்து பேசலாம்னு வந்தேன் என சொல்ல, அருணாச்சலம் பதட்டமாக என்னாச்சு என்று கேட்கிறார். தூங்கிட்டு இருக்கும் போல என்று சொல்லிவிட்டு என் புள்ளைய கொஞ்சம் கூப்பிடுங்க பாத்துட்டு போனா கொஞ்சம் நிம்மதியா இருக்கும் என்று சொல்ல நந்தினி என அருணாச்சலம் தயங்கி நிற்க சுந்தரவல்லி குடும்பத்துடன் வருகிறார். உடனே அருணாச்சலம் நந்தினி தூங்கிட்டு இருப்பா நீ நாளைக்கு போயிட்டு வா என்று சொல்ல உடனே சுந்தரவல்லி எதுக்கு அப்பா கிட்ட உண்மையை மறைக்கிறீங்க அவ இல்லைன்னு சொல்ல வேண்டியது தானே என்று சொல்ல சிங்காரம் என் பொண்ணுக்கு என்ன ஆச்சு என்று பயப்படுகிறார். அவர் பொண்ணு வீட்டை விட்டு ஓடி போயிட்டான்னு சொல்லுங்க என்று சொல்ல உடனே பதறிய சிங்காரம் என் பொண்ணு இங்க இல்லையா திடீர்னு இப்படி சொன்னா எப்படி என் புள்ள எங்க என் பிள்ளைக்கு என்ன ஆச்சு என்று கண்கலங்கி அழுது கொண்டே கேட்கிறார்.
நான் சொல்றேன் என சுந்தரவல்லி, வீட்ல எந்த பிரச்சனையும் இல்ல நாங்க யார்கிட்டயும் சண்டை போடல ஆனா வீட்டை விட்டு போயிட்டா என்று சொல்லுகிறார். உடனே சுரேகா அவ வெளியே போய் ஆக்சிடென்ட் ஆகி செத்துப் போயிருந்தா எங்கள தான் கேப்பாங்க என்று சொன்ன அருணாச்சலம் கோபப்பட்டு திட்டுகிறார். நீங்க வேணா போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுங்க என்று சொல்லுகிறார். உடனே சூர்யா வந்தவுடன் என் புள்ளைக்கு என்ன ஆச்சியா, என்கிட்ட யாரும் எதுவும் சொல்லலையே என்று கண்கலங்க சூர்யா அவ எங்க இருக்கான்னு தெரியல நாங்க தேடிக்கிட்டு தான் இருக்கோம் நீங்க அழாதீங்க நாளைக்கு காலைல நந்தினி வீட்ல இருப்பா என்ன நம்பி போங்க என்று சொல்லுகிறார்
நந்தினிக்கு நான்தான் பொறுப்பு வீட்ல யார்கிட்டயும் சொல்லாதீங்க என்று சொல்ல நீங்க சொல்ற தைரியத்துல தான் போறேன் சின்னய்யா தயவு செய்து என் புள்ளைய காப்பாத்தி கொடுத்துருங்க என்று சொல்ல சுந்தரவல்லி உங்க சின்னையா காப்பாத்தி கொடுத்துருவாரு போங்க என்று சொல்லுகிறார் உடனே சிங்காரம் அழுது புலம்பி கொண்டே செல்கிறார். ரூமுக்கு சென்ற சூர்யா நந்தினி உடன் இருந்த நாட்களை நினைத்து யோசித்து பார்க்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினிக்காக கருப்பன் போட்டோவுக்கு விளக்கேற்றி அவளுக்கு மட்டும் எப்படி நடக்கணும் என கண்கலங்கி வேண்டிக் கொள்கிறார். பிறகு கீழே இறங்கி வர சுந்தரவல்லி அவளுக்காக நாங்க எதுக்கு சாப்பிடாம இருக்கணும் எங்களுக்கு பசிக்காதா என்று கேட்கிறார்.
சூர்யா நந்தினி தேதி காரில் வர கடத்தி வைத்திருப்பவர்களிடம் இருந்து போன் வருகிறது உடனே எங்க இருக்க நந்தினி என்று கேட்க அதற்கு முதல்ல நாங்க சொல்றத நீ கேட்கணும் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
