சூர்யா,நந்தினி தங்கி இருக்கும் ரெசார்ட்க்கு வந்த அர்ச்சனா, சுந்தரவல்லி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நால்வருக்கும் முதலில் நண்டு சூப் எடுத்துக் கொண்டு வந்து வைக்கின்றனர். சூர்யா நண்டு அப்படியே சாப்பிட போக நந்தினி எப்படி சாப்பிட வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார். பிறகு பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றனர். சூர்யா சாப்பிட்டு முடித்து வெளியே வந்தவுடன் ரொம்ப காரம்டா இந்த நண்டு என்று சொல்ல அது வெறும் பெப்பர் தாண்டா ஒன்றும் ஆகாது என்று சொல்ல அவர்கள் இருவரும் உட்கார்ந்திருக்க, உனக்கு நன்றி சொல்லணும்னு நினைச்சேன் ஆனா அதுக்கான டைம் கிடைக்கல. நான் என்னைக்கு உயிரோடு இருக்கிறனா அதுக்கு காரணம் நீதான் நீ கொடுத்த ரத்தம் தான் என் உடம்புல ஓடிக்கிட்டு இருக்கு அதுக்கு தேங்க்ஸ் மச்சான் என்று சொல்ல என்னடா பேசிட்டு இருக்க என்று சொல்லுகிறார்.
பெத்தவங்களே என்ன நம்பாத போ இப்போ நான் ஒரு நல்ல வாழ்க்கை வாழறனா அதுக்கு காரணம் நீதான். என்னடா இது என்ன என்று பேச ஆரம்பிக்க,நான் பேசறது உனக்கு பிடிக்காது தான் ஆனா நானும் விஜியும் உனக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கோம். நானும் விஜியும் உன்ன மறக்க மாட்டோம் உன்ன கைவிடமாட்டோம் என்று சொல்லுகிறார். இப்ப எதுக்கு இதையெல்லாம் பேசிக்கிட்டு இருக்க என்று சூர்யா கேட்க, நான் யார்ரா உனக்கு, ஏதோ காலேஜ்ல படிச்ச பிரண்டு அவ்வளவுதான் ஆனா பெரிய பெரிய விஷயம் எல்லாம் பண்ணிட்டு ஃப்ரீயா இருக்க, எனக்கு ரத்தம் கொடுத்தப்போ என் கண்ணுக்கு நீ நண்பனா தெரியல, அம்மாவை தான் தெரிஞ்சா என்று சொல்ல, அதற்கு சூர்யா இவ்வளவு நேரம் பேசினதெல்லாம் ஓகே இப்ப பேசின பத்தியா மூட ஸ்பாயில் பண்ணிட்டேன் என்று சொல்ல, பிறகு விவேக் சமாதானப்படுத்தி விடுகிறார். விஜியும் விவேக்கும் நந்தினியை சேர்த்து வைக்க ஒரு பிளான் பண்ணனும் என்று யோசித்து என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்று சொல்லுகிறார்.
உடனே போனை எடுத்து இவர்கள் இருக்கும் ரெசார்ட்டுக்கு வரும் அட்ரெஸ்ஸை சொல்ல யாருக்கு போன் பண்ணி பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க, போட்டோகிராபர் அரேஞ்ச் பண்ணி இருக்கேன். இத பத்தி அங்கிள் கிட்ட சொன்ன அவர் உடனே அரேஞ்ச் பண்ணிட்டாரு இந்த விஷயத்தை அவங்க கிட்ட சொல்லி நந்தினியை கூட்டிட்டுவா என்று சொல்ல அப்போ சூர்யா அண்ணன் என்று விஜி கேட்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லி சொல்லுகிறார். பிறகு இரண்டு பெண்கள் வந்து இறங்க விவேக், அருணாச்சலம் சார் அனுப்புன போட்டோகிராபர் நீங்கதானே என்று சொல்ல ஆமாம் என்று சொல்லுகின்றனர். டீடைல்ஸ் நீங்க சொல்லுவீங்கன்னு சொன்னாங்க எந்த மாதிரி போட்டோ ஷூட் என்று கேட்க, ஒரு பொண்ணையும் ஒரு பையனையும் நான் கூட்டிட்டு வருவேன் அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு ஆனா என்னையும் தண்ணியும் மாதிரி சேரவே மாட்டாங்க இப்போ நம்ம எடுக்குற போட்டோல அது மாறனும் என்று சொல்ல அவ்வளவு தானே நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்லிவிடுகின்றனர்.
மறுபக்கம் விஜி நந்தினியிடம் கப்பிள்ஸ்க்கு ஃப்ரீயா போட்டோ எடுத்து தராங்களாம் நம்ம எடுத்துக்கலாம் என்று கூப்பிட சூர்யா அண்ணனும் வராரு என்று சொல்ல அவர் கூட நான் வரல என்று சொல்லுகிறார். அதெல்லாம் தேவையில்லை, ஆனால் விஜி உனக்கு தேவை இல்ல ஆனா எனக்குத் தேவைன்னு நெனச்சுக்கோ என்று சொல்லுகிறார். இதெல்லாம் ஒரு ஞாபகம் தான் இதெல்லாம் நம்ம மெமரிஸ்ல இருக்கும் என்று சொல்ல நந்தினிக்கு விருப்பமில்லாத போதும் விஜி வற்புறுத்தி அழைத்து செல்கிறார். மறுபக்கம் சூர்யா கேம் விளையாடிக்கொண்டிருக்க, ஜோடி ஜோடியா போட்டோ எடுத்துக்கலாம் என்று கூப்பிட, சூர்யா போட்டோ எடுத்து என்ன பண்ணப் போறோம் என்று கேட்டுவிட்டு சூர்யா வர மறுக்க, உடனே விவேக் ஒரு பிளானை யோசித்து, நான் ஒன்னும் நீயும் நந்தினியும் சேர்ந்து போட்டோ எடுத்துட்டு சந்தோஷப்படுறதுக்காக சொல்லல, ஏற்கனவே நீயும் நந்தினியோ ஒரு போட்டோ எடுத்து ஹாலில் மாட்டியதற்கு உங்க அம்மா எவ்வளவு டென்ஷன் ஆனாங்க. அதே மாதிரி இப்போ நீயும் நந்தினியும் விதவிதமா போஸ் கொடுத்து ஒரு ஆல்பம் எடுத்துக்கொண்டு போனா அவங்க எவ்வளவு டென்ஷன் ஆவாங்க என்று சொல்ல ஆமாமா ரொம்ப டென்ஷன் ஆவாங்க இதை சொல்லி இருந்தா நான் முதலிலேயே வந்திருப்பேனே என்று சூர்யா சொல்லி சென்று விடுகிறார். உடனே விவேக் அவ்வளவுதான் மாப்பிள்ளையை ஸ்டார்ட் பண்ணி விட்டாச்சு இதுக்கு மேல அவனே பார்த்துப்பான் என்று சொல்லுகிறார்.
போட்டோ எடுக்கும் இடத்தில் வந்துவிட்டு விவேக்கும் சூர்யாவும் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்டிருக்க, விஜி அவங்கள எடுக்க சொன்னா நீங்க என்ன போஸ் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க, போட்டோகிராபர் அசிஸ்டன்ட்டிடம் நீ அவங்க ரெண்டு பேருக்கும் போட்டோ எடுங்க இவங்கள நான் பார்த்துக்கிறேன் என்று சொல்ல,நந்தினி என்னை எதுக்கு அக்கா தனியா விட்டுட்டு போறீங்க என்று சொல்ல உன்னை யாரும் கடத்திட்டு போயிட மாட்டாங்க என்று விஜி சொல்லிவிட்டு, சூர்யாவிடம் போட்டோ ஒன்னு ஒன்னு சூப்பரா இருக்கணும் என்று சொல்ல அவ்வளவு தானே எப்படி இருக்கும் பாரு என்று சொல்லுகிறார்.சூர்யாவையும்,நந்தினியையும் ஒன்றாக நிற்க வைத்து போட்டோ எடுக்க நந்தினி தள்ளி நிற்கிறார். போட்டோ எடுக்கும் பெண் சேர்ந்து நில்லுங்க என்று சொல்ல இதுவே போதும் எடுங்க என்று சொல்லுகிறார். ஹஸ்பண்ட் பக்கத்துல நிக்க ஏன் இவ்வளவு கூச்சப்படுறீங்க என்று கேட்டுவிட்டு சூர்யாவை தோல்மேல் கை வைங்க என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் என நந்தினி சொல்லுகிறார். சூர்யா அவ்வளவுதானே என்று சொல்லி நந்தினி மேல் கைப்போட, இதுல என்ன இருக்கு என்று சொல்ல கைஎடுங்க சார் என்று நந்தினி சொல்லுகிறார்.
ஆனால் சூர்யா இப்போ எடுங்க என்று சொல்ல, நந்தினியை சிரிக்க சொல்லுகின்றனர். நீங்க சிரிச்சா ஸ்ரீதேவி மாதிரி இருப்பீங்க என்று சொல்ல, சூர்யா நீ யாரு ஸ்ரீதேவி என்று சொல்லுகிறார். அதற்கு நந்தினி அவங்க கிண்டல் பண்ண சொல்றாங்க சார் என்று சொல்ல, மேடம் நான் கிண்டலுக்கு சொல்லல நீங்க நிஜமாவே கியூட்டா அழகா இருக்கீங்க அதுவும் சார் பக்கத்துல நிக்கும் போது வேற லெவல் அழகா இருக்கீங்க என்று சொல்லுகிறார். சூர்யா இன்னும் கொஞ்சம் கிட்டவா என்று பக்கத்தில் நிற்க வைத்து ஒரு போட்டோ எடுக்கின்றனர். பிறகு போட்டோ எடுக்கும் பெண் இப்ப ரெண்டு பேரும் ஹார்டின் மாதிரி வைங்க என்று சொல்ல சூர்யா அவரது கையில் மட்டும் வைக்க, அப்படி இல்ல சார் ரெண்டு பேர் கையும் சேர்ந்து வையுங்க என்று சொல்லி போட்டோ எடுக்கின்றனர். மறுபக்கம் விஜியும் விவேக்கும் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். உடனே போட்டோ எடுக்கும் பெண் நந்தினியை தூக்க சொல்கிறார். உடனே நந்தினி கோபப்பட்டு எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க என்ற கேட்க அப்போ நீங்க அவர தூக்குங்க என்று சொல்ல உடனே சூர்யா என்ன தூக்கு என்று சொல்லுகிறார். என்னால உங்கள தூக்க முடியாது சார் என்று சொல்ல அப்போ உன்னை தூக்கணுமா என்று பேசிக் கொண்டிருக்கும் போதே நந்தினியை சூர்யா தூக்கி விடுகிறார். பிறகு அதில் சில போட்டோக்களை எடுக்கின்றனர். வேற வேற போஸ் கொடுத்து போட்டோக்களை எடுத்துக் கொண்டு இருக்க, இவர் வேற பாடா படுத்துறாரே இந்த போட்டோ எடுக்குறது வேற எப்ப முடியும்னு தெரியல என்று மனதில் நினைத்துக் கொண்டே போஸ் கொடுக்கிறார். அந்த நேரம் பார்த்து ரெசார்ட் மேனேஜர் வந்து இங்க கேம்பைண்ட் இருக்கு உங்களுக்கு ஓகேன்னா நீங்க யூஸ் பண்ணலாம் என்று சொல்ல சூர்யா ஓகே ஓகே என்று சொல்லி கன்ஃபார்ம் செய்து கொள்கிறார். அங்கு சரக்கு இருக்குமா என்று கேட்க அங்க உங்களுக்கு எல்லாமே வந்துடும் என்று சொல்ல சந்தோஷப்பட்ட சூர்யா சம்மதம் சொல்லிவிட்டு மீண்டும் போட்டோ எடுக்கிறார்.
உடனே விவேக் மற்றும் விஜி வந்துவிட, போட்டோகிராபரிடம் நான் சொன்ன மாதிரி எடுத்து இருக்கீங்களா என்று கேட்க நீங்க சொன்னதை விட நிறையவே எடுத்திருக்கோம் என்று சொன்னவுடன் விவேக் அடுத்த ஏழாவது மாசம் வளைகாப்பு பண்ணனும் என்று பேச உடனே நந்தினி வளைகாப்பா என்று கேட்டு யாருக்கு என்று ஷாக் ஆகிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு விவேக் சூர்யாவை அழைத்து சென்று விடுகிறார். மறுபக்கம் கல்யாணம் அருணாச்சலத்திற்கு மோர் கொடுக்க சூர்யாவும் நந்தினியும் வீட்ல இல்ல யாராவது அதை பத்தி கேட்டாங்களா என்று கேட்க யாரும் கேட்கவில்லை என்று சொல்லி விடுகிறார்.வீட்ல இருந்தா திட்டிக்கிட்டே இருப்பாங்க ஆனா இல்லன்னா எங்கன்னு கூட தேட மாட்டாங்க உன் கிட்ட யாராவது கேட்டா தெரியாதுன்னு சொல்லிடு என்று சொல்லிவிட்டு நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி வேலை பார்த்துக் கொண்டிருக்க, மாதவி நான் ஒன்னு சொல்ற நீங்க திட்ட மாட்டீங்களே என்று கேட்க, நீ சொல்றத வச்சு தான் இருக்கு என்று சொல்ல, நீங்க எனக்கும் சுரேகாக்கு நிறைய நகை வாங்கி கொடுத்திருக்கீங்க ஆனா நம்ம வீட்ல திருட்டு போனதுக்கப்புறம் என பேசிக்கொண்டு இருக்க, ரேணுகா சாம்பார் வைக்கவா என்று கேள்வி கேட்க எப்ப பார்த்தாலும் சாம்பார் தானா என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். உடனே மாதவி அந்த உருண்டை குழம்பு வைப்பீங்களா அதை வை என்று சொல்ல அது நந்தினிக்கு வெக்கத்தெறியும் என்று சொல்லுகிறார். அப்ப வைக்க சொல்லு என்று சொல்ல அவங்க இன்னும் வரல காலையிலிருந்து கிச்சன்ல ஆள் இல்லை என்று சொல்ல சுந்தரவல்லி முறைத்து பார்க்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
சூர்யாவை காணம்னு தேடிக்கிட்டு இருக்கோம் எங்க போயிருக்கான் என்று அருணாச்சலத்திடம் கேட்க கோவிலுக்கு போயிருப்பதாக சொல்லுகிறார்.
ஆனால் இந்த விஷயம் அர்ச்சனாவிற்கு தெரிந்து விட அவர் சூர்யா நந்தினி தங்கி இருக்கும் ரெசார்ட்க்கு வருகிறார். நந்தினி அவரைப் பார்த்து அர்ச்சனம்மா என சந்தோஷமாக கூப்பிட்டு பேசிக் கொண்டிருக்கிறார் உங்களுக்கும் சூர்யா சாருக்கும் என்னதான் பிரச்சனை என்று சொல்ல சொன்னா மட்டும் இப்ப என்ன சேர்த்து வைத்திடப் போறயா என்று அர்ச்சனா கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
