இது என் கனவு நாள்.. இந்திரஜாவின் நெகிழ்ச்சி பதிவால் குவியும் வாழ்த்து.!!
பல நாள் கனவு நிறைவேறியதாக இந்திரஜா பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் ரோபோ சங்கர். அவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் போட்டியிலிருந்து வெளியேறினர் சமீபத்தில் அவருக்கு அவர் அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் வணிகவியல் இளங்கலையில் பட்டப்படிப்பு முடித்து அதற்கான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் இது என் கனவு நாள், அம்மாவின் கனவு நனைவாகியது. என் கனவையும் விருப்பத்தையும் எப்போதும் நினைவாக்கியதற்கு அம்மாவிற்கும் அப்பாவுக்கும் நன்றி .எப்போதும் என் பின்னால் நின்று ஆதரவளித்ததற்கு நன்றி அம்மா என்று பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் குடும்பத்தினர் குழந்தை என அனைவரின் புகைப்படமும் சேர்த்து வைத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்திராஜாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram