சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கண் பார்வைக்கு என்ன ஆச்சு? கதறி அழும் ரோகினி.. நடக்கப் போவது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது என்ன என்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது மனோஜ்க்கு ஆக்சிடென்ட் ஆகி கண்களில் பலமாக அடிபட்டு விடுகிறது.
இதனால் குடும்பத்தினர் ஒரு பக்கம் பதற்றத்தில் கண்கலங்கி இருக்க அடுத்து என்ன நடக்கப்போகும் என்று பரபரப்பாக சீரியல் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் டாக்டர் மனோஜ்க்கு கண் கட்டு அவிழ்க்க போறோம் என்று சொல்ல உடனே விஜயா நான் தான் அவன் அம்மா என்னதான் கூப்பிட்டு இருப்பான் என்று சொல்ல அவங்க வைபை கூப்பிட்டு இருக்காரு என்று சொன்னவுடன் ரோகினி மனோஜ் கையைப் பிடித்து அழுது கொண்டே பயத்தில் பார்க்கிறார். மனோஜ் கண் கட்டை அவிழ்க்க அவர் கண் கூசுகிறது என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் ரோகினி வெளியில் வந்து கதறி அழுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் பதறிப் போக மனோஜ்க்கு பார்வை வந்ததா? இல்லையா?என்று பரபரப்பான கதைக்கள த்துடன் ஒளிபரப்பாக உள்ளது.