பூக்குழி இறங்க தயாரான ஆதிரை, நந்தினி.. பிரபுவிடம் சிக்கிய திருடன், வெளியான மூன்று முடிச்சு,மருமகள் மகா சங்கமம் ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் நந்தினியும் ஆதிரையும் சேர்ந்து ரவுடிகளை வெளுத்து வாங்குகின்றனர். உடனே குடும்பத்தினர் அனைவரும் வந்து விடுகின்றனர். ராஜா தம்பி ஆதிரை நந்தினிக்கு நன்றி சொல்ல அவர்கள் இருவரும் அவருக்கு ஆறுதல் சொல்ல அனைவரும் வீட்டுக்கு கிளம்பி வருகின்றனர். பிறகு ஒன்றாக சாப்பிட உட்கார நந்தினியும் ஆதிரையும் பரிமாறுகின்றனர். உடனே சூர்யாவும் பிரபுவும் வர, அவர்களிடம் குழந்தையை கடத்திட்டு போக வந்தாங்க ஆதிரையும் நந்தினியும் சண்டை போட்டு காப்பாத்திட்டாங்க இனிமே எங்கேயும் போகாதீங்க என்று சொல்ல இருவரும் பாப்பாவிடம் சென்று இனிமே உன் கூடவே தான் இருப்பேன் என சொல்லுகின்றனர். பிறகு அவர்களும் உட்கார்ந்து சாப்பிடுகின்றனர்.
நந்தினி ஆதிரையை உட்கார வைத்து சாப்பாடு போட அருணாச்சலம் நந்தினியை சாப்பிட சொல்லுகிறார். ஆனால் நந்தினி நான் குண்டத்து காளியம்மனுக்காக வேண்டிக்கிட்டு அக்னி குண்டத்துல இறங்கப் போறேன் பச்சைத்தண்ணி கூட பல்லுல படாம இருக்கேன் என்று சொல்ல ஆதிரையும் நானும் விரதம் இருக்கப் போவதாக சொல்லுகிறார். உடனே ராஜா தம்பி இன்னைக்கு என்ன வேண்டுனாலும் கண்டிப்பா அம்மன் அள்ளி கொடுப்பா நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க என்று சொல்லுகிறார். வேல்விழி ஏகாம்பரத்திடம் கஞ்ச பயலையும் , வாட்டர் கேன் காரியும் இன்னைக்கு நைட்டுக்குள்ள ஏதாவது பண்ணனும் என்று சொல்லுகிறார். பிரபு எழுந்து வந்துவிட ஆதிரை உடனே பின்னாலே வந்து ஏன் வந்துட்டீங்க என்று கேட்கிறார் நீ நெருப்பு மெறிக்க போறியா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார்.
உங்ககிட்ட சொன்ன பொய் தான் நான் பரிகாரம் தேடுறேன் என்று மனதில் நினைத்துக் கொள்ள, எதுவும் ஆகாதுங்க நீங்க பயப்படவோ பதற்ற படாதீங்க நீங்க சாப்பிட வாங்க என்று சொல்ல நீ சாப்பிடாம நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லுகிறார். நீ சாப்பிடாம நான் எப்படி சாப்பிட முடியும் என்று கேட்கிறார். ரூமில் சூர்யா டென்ஷனாக இருக்க அருணாச்சலம் வருகிறார். நந்தினி பச்சத் தண்ணி கூட பல்லுல படாம விரதம் இருக்கா, நம்ம எல்லாரும் சுத்த பத்தமா இருக்கணும் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் குடிக்காம இரு என்று சொல்ல என்னால் முடியாது என்று சூர்யா சொல்லுகிறார். இதுவரைக்கும் நான் உன்கிட்ட எதுவும் கேட்டதில்லை, இதுவே கடைசியா கூட இருக்கலாம் இத மட்டும் செய் என்று சொல்ல, மீண்டும் சூர்யா முடியாது என்று சொல்ல அருணாச்சலம் டென்ஷன் ஆகி நீ இப்படியே இருந்துக்க என்று சொல்லி கோவமாக போக, சூர்யா ஒரு நாள்தான் டாடி அதுக்கப்புறம் என்ன பிளாக்மெயில் பண்ணக்கூடாது என்று சொல்ல அருணாச்சலம் சரியென சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
அருணாச்சலம் நந்தினி இடம் நன்றி சொல்ல, மாதவி அசோகன் ஜன்னலில் இருந்து கவனிக்கின்றனர். என் பையன் குடியை நிறுத்த அக்கினி குண்டத்துல இறங்க முடிவெடுத்து இருக்க இது எவ்வளவு பெரிய விஷயம் என்று சொல்ல, நான் இங்கே இருக்கிற கொஞ்ச காலத்துல இந்த குடும்பத்துக்கு நல்லது நடக்கணும்னு நினைக்கிறேன் முக்கியமா சூர்யா சேர குடியில் இருந்து மீண்டும் பழைய மனுஷன் ஆகணும்னு நினைக்கிறேன் என்று சொல்லுகிறார். எல்லாமே நம்மளுக்கு இனிமே நல்லதா தான் நடக்கும் நம்புங்க என்று நந்தினி சொல்லுகிறார். தீ மிதிச்சு முடிச்ச உடனே மந்திரிச்ச தாயத்தை சூரியா சாருக்கு கட்டி விட்டுட்டா அவர் குடியிலிருந்து மீண்டு வந்துருவாரு என்று சொல்லுகிறார். நந்தினி வெளியில் வர ஆதிரையும் நந்தினியும் சந்திக்கின்றனர்.
உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் சூர்யா அண்ணன் எல்லாம் நல்ல விஷயமும் பண்றாரு ஆனா இவ்வளவு குடிக்கு ஏன் அடிக்ட் ஆகி இருக்காரு என்று கேட்க அவர் குடிக்கிறதே அவங்க அம்மாவ பழிவாங்க தான் என்று சொல்லுகிறார். சூர்யா சார் ஒரு பொண்ண லவ் பண்ணாரு அந்த பொண்ணு அந்தஸ்த்துல கம்மியா இருக்கிறதுனால அவங்க ஒத்துக்கல அதனால அந்த கோபத்துல அவங்க அம்மாவ வெறுப்பேத்த இப்படி பண்ணிக்கிட்டு இருக்காரு ஆனா இவரு குடிச்சாலும் ஒருத்தருக்கோ கெட்டது நினைக்க மாட்டாரு குடிப்பழக்கத்தை மட்டும் விட்டுட்டா அவரை மாதிரி ஒரு நல்லவரை பார்க்க முடியாது என்று சொல்லுகிறார். மாதவி ரூமில் சூர்யா குடியை நிறுத்தக்கூடாது.அப்படி நிறுத்திட்டா நம்ம டம்மி ஆயிடுவோம். சூர்யா எப்படியாவது இன்னைக்கு குடிக்கணும் என்று சொல்லி விட்டு, அசோகனிடம் ஒரு விஷயத்தை சொல்லி அனுப்புகிறார்.
கேசவன் இன்னைக்கு திருவிழாவோட கடைசி நாள் அந்த ராஜா தம்பி பேத்தி அக்னி குண்டத்தில் இறங்கக்கூடாது இங்க தூக்கிட்டு வாங்க ஏற்கனவே அடி வாங்கிட்டு வந்த மாதிரி நடக்கக்கூடாது. பிளான் மிஸ் ஆகக்கூடாது அதே மாதிரி சமபந்தி விருந்துல கள்ளச்சாராயம் விஷமா மாறனும் என்று சொல்லுகிறார். நான் என் பையனை இழந்த மாதிரி நீயும் உன் பேத்தியை இழந்து அனாதை ஆகணும் என்று சொல்லுகிறார். அசோகன் சூர்யாவிடம் வந்து உங்க அம்மா உன்னை குடிக்க கூடாதுன்னு ஆர்டர் போட்டு இருக்காங்க என்று சொல்ல, உடனே சூர்யா எத்தனை லட்சமானாலும் இன்னைக்கு குடிக்க வேண்டும் என்று சொல்லி கார்த்தியை அழைத்துக்கொண்டு சென்று விடுகிறார். திருடர்கள் அக்கினி சட்டி ரெடி செய்து அதில் நகைகளை உள்ளே வைத்து நெருப்பில் இறங்கி அப்படியே எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என்று பிளான் போடுகின்றனர்.
அசோகன் மாதவி இடம் வந்து எல்லாமே உன் பிளான் படி நடந்துடுச்சு ஒரு நாளைக்கு குடிக்க கூடாதென்று வைராக்கியமா இருந்தான் ஆனால் உங்க அம்மா தான் குடிக்க கூடாதுன்னு சொன்ன உடனே அவன் குடிச்சே தீர்வேன்னு சொல்லி கிளம்பி இருக்கான் என்று சொல்லி மாதவியை புகழ்ந்து பேசுகிறார். கேசவன் ஆட்கள் ஒரு பக்கமும் திருடர்கள் ஒரு பக்கமும் மறைந்திருந்து பார்க்க, சூர்யா,கார்த்தி உடன் காரில் ஏற, திருடர் உருண்டு சூர்யாவின் காரை நிறுத்துகின்றனர். சூர்யா அவரிடம் பேசிக்கொண்டிருப்பதற்குள் மற்றொருவர் காரில் இருக்கும் நகையை எடுக்க குண்டத்து காளியம்மனுக்கு அரோகரா என்று சொல்ல சூர்யாவிற்கு சந்தேகம் வருகிறது. இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி நிச்சயமாக அந்த தெய்வம் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றும் என சொல்ல மாதவி நந்தினி தீக்குழியில் இறங்கினால் அதை விட்டு மேல ஏறமாட்டா என்று சொல்லுகிறார்.
பிரபு திருடனை பிடித்து நகை எங்கே என கேட்க தீச்சட்டிக்குள் மறைத்து வைத்திருக்கும் விஷயத்தை சொல்லுகிறார்.நந்தினி பூக்குழி இறங்க தயாராக இருக்க ஆதிரை எங்கே என கேட்கிறார் உடனே ராஜா தம்பி என்னோடு பேத்தியையும் காணோம் என்று சொல்ல அனைவரும் பதறிப் போகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
