இனியாவிடம் பேசிய சுதாகர், பாக்யாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
இனியாவிடம் சுதாகர் பேச, பாக்யாவுக்கு சந்தேகம் வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி இனியாவை வீட்டுக்கு அழைத்து போகும் விஷயத்தை சொல்ல இனியா கோபியை தனியாக அழைத்துக் கொண்டு சென்று நான் இந்த வீட்ல தான் டாடி இருக்கணும் அங்கிள் சொல்றதும் ஒரு விதத்துல கரெக்டு தானே ஆகாஷ் விஷயம் தெரியறதுக்கு முன்னாடி வரைக்கும் நித்திஷ் என்கிட்ட நல்லா தான் பழகினாரு அதுக்கு அப்புறம் தான் இப்படி ஆகிட்டாரு எனக்கு கொஞ்சம் விஷயங்கள் தெரிஞ்சுக்கணும் அதனால நான் இங்கதான் இருக்கணும் என்று சொல்லி முடிவெடுக்கிறார்.
பிறகு கோபி வந்து சுதாகரிடம் ரெஸ்டாரன்ட் விஷயத்துல பாக்யாவை ஏமாற்றி ரெண்டு ரெஸ்டாரன்ட் வாங்கிட்டீங்க நாங்க எல்லாத்துக்கும் அமைதியா இருந்தோம் எங்களுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு இவ இங்க இருக்கணும்னு ஆசைப்படுறா ஆனா இவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா அவ்வளவுதான் என சொல்லுகிறார்.உடனே சுதாகர் எங்க பொண்ணு மாதிரி பார்த்துபோ என சொல்ல கோபி சென்று விடுகிறார். கொஞ்ச நேரத்தை சுதாகர் ஹாலில் இருக்க இனியா தண்ணீர் எடுக்க வருகிறார் இனியாவை கூப்பிட்டு உட்கார வைத்து சுதாகர் பேசுகிறார். நிதீஷ் விஷயத்துல இருந்த பிரச்சனையை உங்க அப்பா கிட்ட சொல்றதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லி இருக்கலாம் என்று சொல்ல எந்த பதிலும் கிடைக்க மாட்டேங்குது சமாளிக்க தான் பாக்குறீங்களே தவிர எங்க உண்மையை சொல்ல மாட்டேங்கறீங்க என்று சொல்லுகிறார்.
சரிமா இதுக்கப்புறம் எந்த பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்லு நிதிஷ் உன்னை நல்லா பார்த்துப்பான் அதுக்கு நான் பொறுப்பு நீ போய் தூங்கு என்று சொல்ல நிதிஷ் வருகிறார்.
சுதாகர் நிதிஷிடம் ஒழுங்கா இனியா கூட சேர்ந்து வாழற வழிய பாரு போய் அவகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இனிமேல் இது மாதிரி பண்ண மாட்டேன் என சொல்ல சொல்ல நிதிஷ் சரி என சொல்லிவிட்டு மேலே போகிறார். மறுபக்கம் ஈஸ்வரி பிறந்த நாளில் எடுத்த போட்டோக்களை செழியனிடம் கொடுத்து ஸ்டேட்டஸ் வைக்குமாறு சொல்ல கொஞ்ச நேரத்தில் கோபி வருகிறார். கோபி சோகமாக வர என்னாச்சுடா கண் சிவந்து வந்திருக்கு என்று கேட்கிறார். நீயும் தூங்கலையா நானும் நைட்ல தூங்கவே இல்லை என்று சொல்லுகிறார் இனியாவின் வாழ்க்கையைப் பற்றி பெருமையாக ஈஸ்வரி பேச அவசரப்பட்டு பண்ணிட்டோம் மூணு தோணுது என்று சொல்லுகிறார் என்ன அவசரப்பட்டுடோம் என்று ஈஸ்வரி அதிர்ச்சியாக்கி கேட்க ஒன்னுல்லமா இனியா வேலைக்கு போகணும் படிக்கணும்னு ஆசைப்பட்டாய் அதனால சொன்னேன் என்று சொல்லுகிறார்.
இப்ப கூட வேலைக்கு போயிட்டு தானே இருக்கா இன்னும் படிக்க வைக்கணும்னாலும் அவங்க படிக்க வைப்பாங்க என்று சொல்ல ஈஸ்வரிக்கு போன் வர எழுந்து சென்று விடுகிறார் உடனே நீ பாக்யா கோபியின் முகம் சரியில்லாததால் என்ன விஷயம் என்று கேட்கிறார் இனியாவுக்கு ஏதாவது பிரச்சனையா எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லிவிடுகிறார். இனியா வேலைக்கு கிளம்ப நித்தீஷ் பிறந்தநாள் கிப்ட் கொடுக்கிறார். பிறகு கோபி வீட்டுக்கு வர சுதாகர் என்ன சொல்லுகிறார்?அதற்கு கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
