Web Ads

எனக்கு அரசியல் அறிவு கிடையாது.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்.!!

எனக்கு அரசியல் அறிவு கிடையாது என்று விஜய் ஆண்டனி ஓபன் ஆக பேசியுள்ளார்.

actor vijay antony latest speech viral

actor vijay antony latest speech viral

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜய் ஆண்டனி நான், சலீம் ,பிச்சைக்காரன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜய் ஆண்டனி பேசியுள்ளார்.

அதாவது பிரபலமாகி விட்டேன் என்பதற்காக நான் அரசியலுக்கு வர முடியாது என்றும் எனக்கு அரசியல் அறிவு கிடையாது என்றும் கூறியுள்ளார். மேலும் 50 வயது ஆகிவிட்டது இனிமேல் அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை மக்களுக்கு நல்லது செய்ய அரசியல் வடிவில் அதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor vijay antony latest speech viral

actor vijay antony latest speech viral