Web Ads

நந்தினி சொன்ன வார்த்தை, ஆதிரை கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு, மருமகள் சீரியல் மகா சங்கமம் ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu and marumagal serial promo 25-06-25
moondru mudichu and marumagal serial promo 25-06-25

மூன்று முடிச்சு மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய எபிசோடில் ஏகாம்பரம், சூர்யா, கார்த்தி மூவரும் கோவில் பக்கத்தில் வந்து சரக்கு கிடைக்குமா என்று கேட்க அவர்கள் இங்கு எல்லாம் கிடைக்காது என்று சொல்ல, மூவரும் சரக்கு தேடி அலைய கிடைக்காததால் பக்கத்து ஊருக்கு கிளம்ப எல்லையில் போலீஸ் நிற்கின்றனர். சூர்யா போலீஸிடம் வந்து பேச அவர்கள் போகக்கூடாது என்று உறுதி ஆக சொல்ல சூர்யா நீங்க வேணா எங்களையும், காரையும் செக் பண்ணிக்கோங்க என்று சொல்ல, போலீஸ் செக் பண்ணுகின்றனர். ஆனாலும் டிஎஸ்பி அனுப்பக்கூடாது என்று சொல்லியதால் சூரியா பிரபு மீது கோபமாக வீட்டுக்கு வருகிறார். அந்தக் கஞ்ச பையனை சும்மா விடக்கூடாது அவனுக்கு தூக்கி போட்டு மிதிக்கணும் என்று சொல்ல சூர்யா கோபமாக உள்ளே போக ஏகாம்பரத்தை கார்த்தி தடுத்து இருக்கும் நம்மளுக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி நிற்போம் என வெளியில் நின்று விடுகின்றனர்.

பிரபுவிடம் வந்து எனக்கு இப்பவே சரக்கு பாட்டில் வந்தாகணும் நீ இப்போவந்து எனக்கு வாங்கி கொடு என்று சொல்ல நான் எதுக்கு வாங்கி தரணும் என்று கேட்கிறார். பிரபு முடியாது என்று சொல்லியதால் இருவரும் மாறி மாறி சட்டையை கொடுத்து அடித்துக் கொள்கின்றனர். குடும்பத்தினர் வந்து அவர்களை விலக்கிவிட முயற்சி செய்ய குழந்தைக்கு பயத்தில் பிக்ஸ் வந்துவிடுகிறது. பிறகு அவர்கள் சண்டையை நிறுத்திவிட்டு நாங்க சண்டையை போடல பாப்பா நாங்க பிரண்ட்ஸ் என்று சொல்லி இருவரும் முஸ்தபா பாட்டுக்கு டான்ஸ் ஆடுகின்றனர். உடனே பாப்பாவும் சிரித்துவிட்டு எழுந்து உட்கார்ந்து விட அவர்கள் அழைத்துச் சென்று விடுகின்றனர்.

சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் இவனால பிரச்சனை பண்ணாம இருக்க முடியாதா என்று கேட்டு விட்டு சென்று விடுகிறார். உடனே அருணாச்சலம் சூர்யாவை கண்டிக்க, பிரபுவின் அப்பாவும் பிரபுவை பிரண்டாக பழக சொல்லுகிறார். ஆனால் இவர்கள் என்னுடைய எதிரி நீதான் எனக்கு சொல்லிவிட்டு சென்று விடுகிறார். ரூமுக்கு வந்தவுடன் சூர்யாவிடம் உன்னலா குடிக்காம இருக்கவே முடியாதா என்று கேட்க, அவன் எதுக்கு என்னோட பாட்டிலை உடைக்கணும் அவன் உடைப்பான் நான் சும்மா இருக்கணுமா என்று கேட்கிறார். மறுபக்கம் பிரபு அவன்தான் பணம் இருக்கிற திமிர்ல ஆடிகிட்டு இருக்கான் என்று, அவங்க அம்மாவை மதிக்க மாட்டேங்கிறான் என்று சொல்ல, நந்தினி அந்த குழந்தைக்கு ஏதாவது ஆகி இருந்தா நீங்க தான பொறுப்பு என்று கேட்க அது எப்படி நான் பொறுப்பாகி இருக்க முடியும் எல்லாத்துக்கும் அந்த கஞ்ச பையன் தான் காரணம் என்று சொல்லுகிறார்.

எனக்கு அவனை பார்த்தால் புடிக்கல என்று சூர்யா சொல்ல பிரபுவும் அதையே சொல்லிவிட்டு சென்று விட, ஆதிரை பிரபுவிடம் நீங்க அவரோட பாட்டில ஒடச்சது தப்பு என்று சொல்ல நந்தினியும் அருணாச்சலமும் வந்து நிற்க தப்பே இல்லை என்று சொல்லுகிறார். இங்க சரக்கு கிடைக்காது என்று தான் அவங்க எல்லாத்தையும் ஊரிலிருந்து வாங்கிட்டு வந்துட்டாரு நல்லவேளை நீங்க அதை உடைச்சுட்டீங்க இல்லன்னா அவரு குடிச்சிக்கிட்டே இருப்பார் என்று சொல்ல, பிரபு நந்தினியிடம் 24 மணி நேரமும் குடிக்கிற ஒரு ஆளை எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க என்று கேட்கிறார். உடனே ஆதிரை சூரியா அண்ணன் கண்டிப்பா மாறிடுவாரு என்று சொல்லுகிறார். மறுநாள் காலையில் ஆதிரை திருவிழாவில் நடக்கும் மயிலாட்டம் பார்க்க போக போகும் விஷயத்தை சொல்ல பிரபு அதெல்லாம் இப்ப முக்கியம் கிடையாது அந்த திருடனை கண்டுபிடிக்கணும் என்று சொல்லுகிறார். அம்மன் நகையை கண்டுபிடிக்கணும் அவங்க கண்டிப்பா என் கண்ணுல மாட்டுவானுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

கார்த்தியும் சூர்யாவும் சரக்கு வாங்கியாக வேண்டும் என்று பேசிவிட்டு வெளியில் வர பிரபு இதைப் பார்த்துவிட்டு ஆதிரை இடம் இவர்களை பற்றி கோபமாக பேசுகிறார். சூர்யாவை நிறுத்தி அருணாச்சலம் கோவிலுக்கு கூப்பிட, பிரபுவும் ஆதிரையுடன் கோவிலுக்கு வர சம்மதிக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் வந்து கோவிலில் மயிலாட்டத்தை ரசித்து பார்க்கின்றனர். கொஞ்ச நேரத்தில் ஆதிரை பிரபுவும் அவர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவது போல யோசிக்க நந்தினியும் பிரபு டான்ஸ் ஆடுவது போல யோசித்துப் பார்க்கிறார். உடனே ஆதிரை என்ன யோசித்து கிட்டு இருக்கீங்க என்று கேட்க அவரே டான்ஸ் ஆனா எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன் என்று சொல்ல நானும் அப்படித்தான் யோசித்தேன் என சொன்னேன் இரண்டு பேரும் சேர்ந்து ஆடுனா எப்படி இருக்கும் என்று நந்தினி கேட்க காசா பணமா வாங்க கற்பனையில் பார்ப்போம் என்று சொல்ல சூர்யாவும் பிரபு பயங்கரமாக டான்ஸ் ஆடுகின்றனர். உடனே பிரபு திருடனை தேட சென்று விட சூர்யா சரக்கு கிடைத்தால் நல்லா இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். திருடர்கள் சாமியார் கெட்டபில் வர பிரபு எதிரில் வர, திருடன் அவரிடம் காசு கேட்க அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டு பிரபு சென்று விட அவன் கிட்ட எதுக்கு கேக்குறீங்க அவங்க கொடுக்க மாட்டான் என்று சொன்னவுடன் பிரபு இதை கவனிக்கிறார்.

உடனே அவனை துரத்திக்கொண்டு பிரபு ஓட, கொஞ்ச நேரத்தில் மறைந்து விடுகிறான். மறுபக்கம் நந்தினியும் ஆதிரையும் ராஜா தம்பி பேத்தியுடன் வர அங்கு கேசவன் ஆட்கள் புலி வேஷம் டான்ஸ் ஆடி பக்கத்தில் வந்து குழந்தையை தூக்கிச் செல்கின்றனர். ஆதிரையும் நந்தினி அவர்களது பின்னால் ஓடி வர குடும்பத்தினரும் ஓடி வருகின்றனர். நந்தினியும், ஆதிரையும் அவர்களிடம் இருந்து குழந்தையை வாங்கிய பிறகு ஆதிரை ரவுடிகளை வெளுத்து வாங்குகிறார். நந்தினி குழந்தை பயப்படக்கூடாது என்பதற்காக ரங்கராட்டினத்தில் கண்ணைக் கட்டி உட்கார வைத்து விட்டு நந்தினியும் அடி வெளுத்து வாங்குகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அருணாச்சலத்திடம் நான் இந்த வீட்டில் இருக்கிற கொஞ்ச காலத்துல சூர்யா சார் திருத்தி அவரை பழைய மாதிரி ஆக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்வதை மாதவி ஜன்னலில் நின்று கேட்டு விடுகிறார். ஆதிரை நந்தினி இடம் உங்கள பாக்கும் போதெல்லாம் என் மனசுல ஒன்னு தோனி கிட்டே இருக்கு என்று சொல்ல நான் ஏன் சூர்யா சார கல்யாணம் பண்ணனு தானே என்று நந்தினி கேட்கிறார்.

திருவிழா கொண்டாடுறியா திருவிழா உன்னை சும்மா விடமாட்டேன் கேசவன் சொல்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu and marumagal serial promo 25-06-25
moondru mudichu and marumagal serial promo 25-06-25