Web Ads

நந்தினி அழகில் மயங்கிய சூர்யா, சுந்தரவள்ளி கொடுத்த ஷாக்,மூன்று முடிச்சு எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichi Serial episode latest update
Moondru Mudichi Serial episode latest update

நேற்றைய எபிசோடில் சூர்யா அண்ணன் ரொம்ப கொடுத்து வச்சவரு என்று நந்தினியிடம் விவேக் மனைவி செல்லுகிறார். நான் ஒரு அன்லக்கி பர்சன் என்ன தான் வசதியாக இருந்தாலும் என் கிட்ட எதோ ஒன்னு இல்ல என்று வருத்தப்பட்டு விவேக்கிடம் பேசுகிறார் சூர்யா. அவங்கள மட்டும் என் வாழ்க்கையில் மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்லுகிறார். உன்னுடைய ரிவெஞ் லைஃபில் நந்தினி விட்டுக் கொடுத்திடாத அவ உனக்கு கடவுள் கொடுத்த கிப்ட் என்று நண்பர் சொல்கிறார். சுந்தரவல்லி இந்த விவேக் கம்பெனிக்கு கூப்பிட்டா உடம்பு சரியில்லை அப்படி இப்படி என்று சொல்லிக்கிட்டு இருக்கான். என்று புலம்ப நம்ப வேணா விவேக் வீட்டுக்கு போய் பாக்கலாமா என்று கேட்க, அவன ஃபாலோ பண்றது தான் நமக்கு வேலையா என்று சுந்தரவல்லி கேட்கிறார். அவன் வீட்ல கூட வேலை பார்த்து இருப்பான் பைல நம்ம வீட்ல போய் வாங்கிட்டு போயிடலாம் அத்தை என்று சொல்ல சுந்தரவள்ளியும் சரி என சம்மதிக்கிறார். இருவரும் விவேக்கில் வீட்டிற்கு வர, அசோகன் மட்டும் காரில் இருந்து இறங்கி விவேக் வீட்டிற்கு வருகிறார். உடம்பு சரியில்லன்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் இங்க பார்ட்டி பண்ணிக்கிட்டு இருக்கீங்களா விடமாட்டேன் என்று சொல்லி ஜன்னல் வழியாக நைசாக எட்டிப் பார்க்கிறார். ரூமில் இருவரும் சரக்கு அடித்துக் கொண்டிருப்பதை அவர் போனில் வீடியோ எடுக்கிறார். கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காத மாதவி அக்கா எவ்வளவு அழகு? ஆனா கீரிப்பிள்ளை மாதிரி இருக்கான் அவனுக்கு எப்படி கொடுத்தீங்க.. என்று கேட்கிறார். அசோகன் ரொம்ப டார்ச்சர் பண்றா என்று சொல்ல நீயும் அவன டார்ச்சர் பண்ணு என்று சொல்லுகிறார். இதனை வேகமாக எடுத்துக் கொண்டு போய் அசோகன் சுந்தரவல்லி இடம் காட்டுகிறார். இதனைப் பார்த்து சுந்தரவல்லி கடுப்பாகி போகலாம் என்று சொல்லி விடுகிறார். சுந்தரவல்லி உடனே விவேக் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக மெசேஜ் அனுப்புகிறார். இதனைப் பார்த்த விவேக் அழுகிறார். உடனே சூர்யா அந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்க இருவரும் சந்தோஷமாக குடிக்கின்றனர்.

சூர்யா மீண்டும் அப்பாயிண்ட் பண்ணதை பார்த்து சுந்தரவல்லி டென்ஷன் ஆகிறார். விவேக்கின் மனைவி இருவரையும் சாப்பிட கூப்பிடுகிறார். நீ சமைச்சா கருவேப்பிலை வாசனையே வராது இப்போ சரக்கு ஸ்மெல்ல மீறி வாசனை வருது என்று சொல்ல நான் youtube பார்த்து சமைப்பேன். ஆனா இன்னைக்கு நந்தினி சொல்றதை வச்சு சமைச்சேன் என்று சொல்லுகிறார். விவேக் நந்தினிக்கு நன்றி சொல்ல சமைச்சது அவங்க தான் அவங்களுக்கு நன்றி சொல்லுங்க என்று சொல்லுகிறார்.

பிறகு நால்வரும் ஒன்றாக உட்கார்ந்த சாப்பிடுகின்றனர். சாப்பாடு சூப்பரா இருந்துச்சு தங்கச்சி ரொம்ப நாளுக்கு அப்புறம் இவ்ளோ சாப்பாடு சாப்பிட்டு இருக்கேன் கடைசியா இவங்க ஊர்ல சாப்பிட்டது தான் என்று சொல்ல இந்த கிரெடிட்டும் இவங்களுக்கு தான் என்று சொல்லிவிட்டு இதோ வந்துடுறேன் என்று உள்ளே செல்கிறார். பிறகு ஒரு தாம்பூல தட்டில் புடவை வெத்தலை பாக்கு வாழைப்பழம் எல்லாம் வைத்து இவர்கள் இருவரும் சூர்யாவிற்கும் நந்தினிக்கும் கொடுக்கின்றனர். இது ஒரு ஃபார்மாலிட்டி என்று சொல்ல எதுக்குடா இதெல்லாம் என்று கேட்க நீ எங்களுக்கு கல்யாணமே பண்ணி வச்சிருக்க ஆனா எங்களால முடிஞ்சத நாங்க இதை பண்ணி இருக்கோம் என்று சொல்ல சூர்யாவும் சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறார்.

இப்பவே போய் ரெண்டு பேரும் இந்த டிரஸ்ஸ மாத்திட்டு வாங்க, என்று சொல்ல சூர்யாவும் இதுவும் நல்லா இருக்கே என்று சொல்லிவிட்டு நீங்க நந்தினி கழுத்துல பாவாட தாவணியில் இருக்கும் போது தாலி கட்டுனீங்க ஆனா இப்போ புடவை கட்டிகிட்டு வாங்க என்று சொல்ல நானே போய் கட்டி கூட்டிட்டு வரேன் என்று விவேக் மனைவி நந்தினியை கூட்டி செல்கிறார். சூர்யா சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் நந்தினி புடவை கட்டி வருவதை பார்த்து அழகில் வியந்து பார்க்கிறார். பிறகு விவேக் மனைவி குங்குமத்தை கொடுத்து அண்ணா நந்தினிக்கு வச்சு விடுங்க என்று சொல்லுகிறார்.

சூர்யா பொட்டு வைக்க வர நந்தினி ஒதுங்கி போக அவர் வா காமினி என்று வைத்து விடுகிறார். இப்ப போய் கண்ணாடி பாருங்க தேவதை மாதிரி இருக்கீங்க என்று விவேக் மனைவி சொல்லுகிறார். இனிமே பாவாடை தாவணி கட்ட விடாதீங்க புடவையை கட்ட சொல்லுவாங்க என்று சொல்லுகிறார். பிறகு அங்கிருந்து சொல்லிவிட்டு கிளம்பி காரில் வருகின்றனர்.

ஏன் எப்பவுமே சைலன்ட்டா வர என்று கேட்க அவங்க சொன்னதுனால தான் குங்குமம் வச்சேன் என்று சொல்ல அப்ப யார் சொல்லி என் கழுத்துல தாலி கட்டுனீங்க என்று கேட்டவுடன் சூர்யா அதிர்ச்சியாகிறார். பிறகு எனக்கு குடிக்கிறது மட்டும் தான் தெரியும். அந்த நேரத்துல என் மனசுக்கு என்ன படுதோ அதுதான் நான் செய்வேன் என்று சொல்லுகிறார். பிறகு ஒரு துணி கடையில் காரை நிறுத்த அவர் இறங்கி வந்து நந்தினியை கூப்பிடுகிறார். எதுக்கு நான் இறங்கணும் என்று கேட்க அதுதான் விவேக் வைஃப் சொன்னாங்க இல்ல இனிமே நீங்க சாரீ தான் கட்டணும் என்று அதனாலதான் வா என்று சொல்லுகிறார் இல்ல நான் வரலை என்று சொல்ல, நீ வரலைன்னாலும் நான் ஏதாவது ஒரு புடவையை வாங்கிட்டு வரதா செய்வ அதை நீயே வந்து சூஸ் பண்ணி எடுத்துக்கோ என்று சொல்ல நந்தினியும் இறங்கி வருகிறார். கடைக்குள்ளே கூட்டி வந்து இவங்க என்னோட வைஃப் எவ்வளவு காஸ்ட்லியா இருந்தாலும் பரவாயில்லை நல்ல புடவையா காட்டுங்க என்று சொன்ன நந்தினிக்கு கலெக்ஷன்களை காட்டுகின்றனர் அந்த நேரம் பார்த்து சூர்யாவுக்கு போன் வர அவர் நீ பார்த்துக்கிட்டு வர என்று சொல்லி வெளியே வருகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Moondru Mudichi Serial episode latest update
Moondru Mudichi Serial episode latest update