மணிரத்னத்துக்கு நான் ஒரு பட்டம் கொடுக்கிறேன்: கமல்ஹாசன் சுவாரஸ்ய தகவல்

Web Ads

இன்று நடைபெற்ற ‘தக் லைஃப்’ விழாவில் ‘மணிரத்னம், வெறும் மணிரத்னம் அல்ல’ என கமல் பேசினார். இது பற்றிய சுவாரஸ்யம் காண்போம்..

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருக்கிறார். இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்த்துள்ளனர்.

‘தக் லைஃப்’ படத்தின் ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த அனைவரும் பங்கேற்றனர். விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:

‘நாயகன் படத்தில் இருந்து மணிரத்னத்தை பார்க்கிறேன். இன்று வரை மாறவில்லை. இவருக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறேன். கோபத்தில் வைத்தது தான். ஆனால், சொல்லலாம். ஒன்றும் தப்பில்லை.

Web Ad 2

அவர் வெறும் மணிரத்னம் இல்லை; 5.30 மணி மணிரத்னம். எல்லோரும் எனக்கு பட்டம் கொடுப்பாங்க ஆனால், நான் அவருக்கு இந்த படத்தில் இருந்து பட்டம் கொடுக்கிறேன் என கமல் கூறியபோது மேடையே சிரிப்பலையால் அதிர்ந்தது. அருகில் இருந்த நடிகர்களும் சிரிக்க தொடங்கிவிட்டனர்.

பிரம்ம முகூர்த்தத்தில் காலையில் 5 மணிக்கு வருவதுபோல், இரவெல்லாம் அதே நினைவோடு இருப்பதால் தான் அவர் காலையில் சீக்கிரம் வந்து விடுகிறார். இதற்காக அவரிடம் மறைமுகமாக சாரி கேட்டுக் கொள்கிறேன்.

மணிரத்னத்தை பற்றி நன்கு தெரியும். அதனால் தான் நாயகனுக்கு பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க காரணமாக இருந்தது. சினிமா மீது அதீத காதல் கொண்டிருப்பவர் மணிரத்னம். பேசாமல் சாதிக்க கூடியவரில் இவரும் ஒருத்தர்.

அப்போதில் இருந்தே படப்பிடிப்புக்கு 5.30 மணிக்கு வந்திடுவது ஆச்சரியத்தை தருகிறது. நடிகர்களுக்கு முன்பே இயக்குநர் வருவது வியப்புதான்’ என கமல்ஹாசன் கூறினார்.