27-ந்தேதி ஆஜராக வேண்டும்: மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

Web Ads

மகேஷ்பாபு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், மகேஷ் பாபுவுக்கு சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா குழும வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மாதம் 27-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா நிறுவனங்களின் விளம்பர தூதராக உள்ளார் மகேஷ் பாபு. சூர்யா டெவலப்பர்ஸிடமிருந்து மகேஷ்பாபு ரூ.5.9 கோடி பெற்றதாக தெரிகிறது. இதில், ரூ.3.5 கோடி ரொக்கமாகவும், ரூ.2.5 கோடி RTGS மூலமாகவும் பெறப்பட்டுள்ளது. இந்த பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மகேஷ் பாபு விளம்பரப்படுத்தினார். இதற்காக, அவர் அதிக ஊதியம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. சுரானா குழுமம், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனங்கள் ஒரே நிலத்தை வெவ்வேறு நபர்களுக்கு விற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. இதில், மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மகேஷ் பாபு ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வருகிறார். அப்படத்திற்கு SSMB 29 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இதன், ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்து, விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

சர்வதேச தரத்தில் ஆப்பிரிக்க காடுகளை பின்னணியாகக் கொண்டு, அட்வெஞ்சர் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.

mahesh babu summoned by ed in money laundering case