
அஜித் சொன்ன ஒரு வார்த்தையால் ஒரு மாதிரியாகிவிட்டது.. மகிழ்திருமேனி ஓபன் டாக்!!
அஜித் சொன்ன வார்த்தையால் ஒரு மாதிரியாகிவிட்டது என்று மகிழ்திருமேனி கூறியுள்ளார்.

magizh thirumeni latest speech about ajith
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் த்ரிஷா ,அர்ஜுன் ,ஆரவ், ரெஜினா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மகிழ்திருமேனி அஜித் குறித்து பேசி உள்ளார்.
அதாவது ரேசிங் தொடங்குவதற்கு முன் அஜித் நான் ரேசிங் செல்வதற்கு முன் பட வேலைகளை முடித்து விட வேண்டும் ஏனென்றால் எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் நான் ஆக்சிலேட்டரை அழுத்தும் போது 100% அழுத்த வேண்டும் 90% அழுத்தி நான் விளையாட விரும்பவில்லை இந்த வேலை இருக்கு அந்த வேலை இருக்கு என்று யோசிக்க கூடாது என்று அவர் கூறியது எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

magizh thirumeni latest speech about ajith