குஷ்புவின் மகள் அவந்திகா, ஷங்கரின் மகள் அதிதியை விட கலக்குவார்: ரசிகர்கள் கணிப்பு
குஷ்புவின் ஜெராக்ஸ்போல வசீகரிக்கும் அவந்திகா எப்போது கதாநாயகி ஆவார்? என்ற தகவல் பார்ப்போம்..
தமிழ்த் திரையுலகில் காதல் திருமணம் செய்து தொடர்ந்து பிஸியாக வலம் வரும் சுந்தர்.சி-குஷ்பு நட்சத்திர தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.
இளைய மகள் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதாக தகவல் வெளியானது. மூத்த மகள் அவந்திகா லண்டனில் படித்து வருகிறார். இவர், வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவ்வகையில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றிருக்கிறார்.
அவந்திகா விரைவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். அதற்கான முன்னோட்டமே விதவிதமான போட்டோஷூட். ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆர்வத்தை அவந்திகா சொல்லாமல் சொல்லி வருகிறார் என கணிக்கின்றனர் நெட்டிசன்ஸ்.
டீன் ஏஜ் குஷ்புவின் ஜெராக்ஸ் போல இருக்கும் அவந்திகா, கதாநாயகியாக எப்போது அறிமுகமாவார் எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஒருவேளை ஹீரோயினாக அறிமுகமானால் குஷ்புவை போல் கலக்கவும் வாய்ப்புள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பட தயாரிப்பில் குஷ்பு பிஸியாக இருக்கிறார். அதேபோல் சுந்தர்.சி தற்போது நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தை இயக்கி வருகிறார். இச்சூழலில், அவந்திகாவின் ஹீரோயின் ஆர்வத்திற்கு, வீட்டில் கிரீன் சிக்னல் கிடைத்ததாகவே தெரிகிறது.
ஒருவேளை அறிமுகமானால், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதியை தாண்டி, ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருக்கும் டஃப் கொடுப்பார் எனவும் குஷ்பு நினைவுகளுடன் தீவிர ரசிகர்கள் நம்பிக்கை தொடுக்கின்றனர். பார்க்கலாம்..