இப்போதைக்கு சீரியல் முடியிற மாதிரி இல்லை.. பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா ஓபன் டாக்.!!
இப்போதைக்கு சீரியல் முடியற மாதிரி இல்லை என பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா பேசியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது நித்திஷ் பற்றிய உண்மைகள் பாக்கியாவுக்கு தெரியவர சுதாகரிடம் பாக்யா சவால் விடுவது போல ப்ரோமோ வெளியாகியிருந்தது.
பிறகு என்ன நடக்கப் போகிறது என்று அடுத்தடுத்த பரபரப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த சீரியலின் முடிவு குறித்து இந்த சீரியலில் செல்வி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்பம் மீனா பேசியுள்ளார்.
ஏற்கனவே கோபி இந்த சீரியல் முடிவுக்கு வரப் போகிறது என்று சொல்லி இருந்தார்.ஆனால் மீண்டும் அவரே முடிவுக்கு வரும் ஆனால் எப்போது வரும் என்று தெரியாது என்பது போல இன்னொரு வீடியோவும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் கம்பம் மீனா இப்போதைக்கு சீரியல் முடியற மாதிரி இல்ல சில திருப்பங்கள் கொண்டு வந்து கதையை தொடர்கிறார்கள் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வரப் போகிறது என்ற பேச்சுக்கள் வந்த நிலையில் தற்போது கதை மாற்றம் செய்து கொண்டு வராங்க என்று கூறியுள்ளார்.
மேலும் இனிதான் சீரியலில் எதிர்பார்க்காத பல சம்பவங்களும் நடக்கப் போகிறது என்றும் கூறியுள்ளார். இவரின் இந்தப் பேச்சு சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
