வடசென்னை-2 படத்தில் சிம்பு நடிக்கிறாரா?: வெற்றிமாறன் விளக்கம்..
வடசென்னை, வாடிவாசல் படங்கள் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் தெரிவிக்கையில்,
என்னுடைய அடுத்த படத்தை தாணு சார் தயாரிக்கிறார். சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். ‘வாடிவாசல்’ தாமதத்திற்கு டெக்னிக்கல் விஷயங்கள் தான் காரணம். படத்தில் நடிப்பவர்களின் பாதுகாப்பிற்காக, படத்தில் பயன்படுத்தப்பட உள்ள மிருகங்களின் பாதுகாப்பிற்காகவும், டைம் எடுப்பதனால், அதிக நாட்கள் காத்திருக்க முடியவில்லை. அதனால் தான் அப்படம் தற்போது ஆரம்பிக்கவில்லை.
வாடிவால் லேட் ஆனதால், தாணு சார் தான் சிம்புவிடம் பேசுகிறீர்களா என கேட்டார். உடனே சந்தித்து பேசினோம், சில மணிநேரங்களில் எல்லாம் முடிவானது. இந்தப் படம் வட சென்னை 2-ம் பாகமாக இருக்குமா என்கிற கேள்வியும் எழுந்து வந்தது. ஆனால், இது வட சென்னை 2 கிடையாது.
அன்புவின் எழுச்சி தான் வட சென்னை 2-வாக இருக்கும். அதில் தனுஷ் தான் நடிப்பார். ஆனால் இது வட சென்னை உலகத்தில் நடக்கும் ஒரு கதை. அந்த படத்தில் இருக்கும் சில கதாபாத்திரங்கள் இந்த கதைக்குள்ளும் இருக்கும். அதே டைம்லைன்ல இருக்கக்கூடிய ஒரு படம் தான் இது.
தனுஷ் தான் வட சென்னை படத்துடைய தயாரிப்பாளர். வட சென்னை படம், அதில் வரும் கேரக்டர்கள், அதில் இருந்து வரும் அடுத்தடுத்த பாகங்கள் என அனைத்திற்கும் அவர் தான் உரிமையாளர். அப்படி இருக்கையில் அவர் தன்னுடைய படக் கதைக்களத்தில் ஒரு படம் எடுப்பதற்கு பணம் கேட்பது சட்டரீதியாக சரியான ஒன்று.
சிம்புவுடன் பேசிய மறுதினமே தனுஷிடம் போன் பண்ணி பேசினேன். அவரிடம் இந்த படம் பற்றி சொன்னேன். இதை நான் இரண்டு விதமாக பண்ண முடியும். ஒன்று, வட சென்னை கேரக்டர்களை வைத்து பண்ணுவேன். இல்லையென்றால் இதை ஒரு ஸ்டாண்ட் அலோன் படமாக பண்ணுவேன் என சொன்னேன். நீங்க சொல்வதை வைத்து தான் நான் எதை வைத்து பண்ண வேண்டும் என்பது முடிவு செய்ய முடியும்.
வெற்றிமாறன் சொன்னதும், சார் உங்களுக்கு எது சரியாக இருக்கிறதோ அதைப் பண்ணுங்க. நான் என்னுடைய டீமிடம் பேசுகிறேன். நீங்க வட சென்னை யூனிவர்ஸில் பண்ணுவது சரியாக இருக்கும் என்று தோன்றினால் அதை செய்யுங்கள். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் என்னுடைய குழுவிடம் பேசி, தடையில்லா சான்று வழங்குகிறோம். நீங்க அதற்காக பணமெல்லாம் எதுவும் கொடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டார்.
நான் யூடியூப்பில் பார்க்கும் போது என்னைப் பற்றியும் தனுஷைப் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது மிகவும் வருத்தமாக இருந்தது. தனுஷுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் இந்த மாதிரி ஒரு வதந்தியினாலோ அல்லது ஒரு படத்தினாலோ மாறக்கூடியது கிடையாது.
சமீபத்தில் கூட எனக்கு பணத்தேவை வந்தபோது ஒரு தயாரிப்பாளர் மூலம் எனக்கு உதவினார் தனுஷ். நான் சிம்புவோடு படம் பண்ணுகிறேன் என சொன்னபோது கூட, சார் இது உங்களுக்கு கண்டிப்பா வித்தியாசமான படமா இருக்கும்னு தனுஷ் சொன்னார்.
சிம்புவும் என்னை நான்கு நாட்களுக்கு முன் சந்திக்க வந்தபோது, பிரதர், தனுஷுக்கு இந்த மாதிரி பிரச்சனை இருப்பதாக செய்திகள் பார்த்தேன். நீங்க உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். உங்களுக்கும் தனுஷுக்கு இடையேயான ஒப்பந்தம் பாதிக்காதவாறு. எது செய்ய வேண்டுமோ செய்யுங்கள் என சொன்னார்.
