‘மருதநாயகம்’ திரைப்படம் வருமா? கமல்ஹாசன் இனிய தகவல்

Web Ads

‘தக் லைஃப்’ புரமோஷனில் ‘மருதநாயகம்’ படம் பற்றியும் கமல் பகிர்ந்துள்ள தகவல் காண்போம்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இயக்கத்தில், தனது 237-வது படத்தில் நடிக்கவுள்ளார். KH237 என அழைக்கப்படும் இப்பட ஷுட் விரைவில் துவங்கவுள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னதாக 1997 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ‘மருதநாயகம்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இப்படத்தின் கதையை எழுத கமல் மற்றும் அவரின் டீம் எடுத்துக்கொண்டார்கள். சுஜாதா திரைக்கதை எழுத கமல் தயாரித்து இயக்குவதாகவும் இளையராஜா இசையமைப்பதாகவும் இருந்தது.

Web Ad 2

அன்றைய காலச்சூழலில் இந்திய திரையுலகிலேயே அதிக பொருட்செலவில் தயாராகவிருந்த படம் ‘மருதநாயகம்’ 1997 ஆம் ஆண்டு இப்பட அறிவிப்பை மிகப் பிரம்மாண்டமாக நடத்தினார் கமல். குயின் எலிசபெத் சிறப்பு விருந்தினராக படத்தின் லாஞ்சிற்கு வரவழைத்தார். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர், மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர்.

அந்த விழாவில், ‘மருதநாயகம்’ படத்திலிருந்து ஒரு பைலட் வீடியோ திரையிடப்பட்டது. அந்த வீடியோ காட்சியை எடுக்க மட்டும் கிட்டத்தட்ட 1.5 கோடி வரை செலவானதாக கூறப்பட்டது. மேலும் மொத்த திரைப்படத்தையும் எடுக்க அன்றைய நிலையில் சுமார் 90 கோடி வரை ஆகும் என சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, சில நாட்கள் ‘மருதநாயகம்’ படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

தற்போது ‘தக் லைஃப்’ பட புரமோஷனில் கலந்துகொண்டு வரும் கமலிடமும் ‘மருதநாயகம்’ படம் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், ‘இன்னும் ஒரு வருஷம் வெயிட் பண்ணுங்க, நான் சொல்றேன்’ என்றார். ஒரு வருடத்தில் கமல்ஹாசன் சொல்றேன்னு சொன்னதை தொடர்ந்து, கண்டிப்பாக நல்ல முடிவாக அவர் சொல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.!

kamalhaasan in marudhanayagam movie update