ஏசி ஓடுது, டாக்டர்கள் எங்கே?: அரசு மருத்துவமனையில் கஞ்சா கருப்பு போராட்டம்
மக்களுக்காக களத்தில் இறங்கிய கஞ்சா கருப்புக்கு, யாராவது பட வாய்ப்பு கொடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த நிகழ்வு காண்போம்..
போரூரில் இருக்கும் சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனைக்கு கஞ்சா கருப்பு, இன்று காலை 10 மணிக்கு சென்றபோது டாக்டர்கள் யாரும் இல்லை.
இதனால், ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லையா? என கஞ்சா கருப்பு கேட்டதற்கு, ‘காலை 7 மணியில் இருந்தே நாங்களும் காத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதுவரை டாக்டர்கள் வரவில்லை’ என அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனையில் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் கஞ்சா கருப்பு. ‘டாக்டர் ரூமில் ஏசி ஓடுது. ஆனால், டாக்டரை காணவில்லை. அவர் எங்கே சென்றார்? என கேட்டார் கஞ்சா கருப்பு.
மருத்துவமனை ஊழியர்கள், கஞ்சா கருப்பு மற்றும் பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றார்கள். ஆனால், காத்திருந்து காத்திருந்து கோபம் அடைந்தவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.
கஞ்சா கருப்பு மற்றும் மக்கள் நடத்திய போராட்டத்தால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ‘வேலை நேரத்தில் மருத்துவமனையில் இல்லாமல் டாக்டர் எங்கு சென்றுவிட்டார். ஒரு வேளை ஷங்கர் படத்தில் காட்டியது போன்று தன் கிளினிக்கில் இருந்திருப்பாரோ?’ என மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்ட மூதாட்டி, வேறு மருத்துவமனைக்கு அவசரமாய் அழைத்துச் செல்லப்பட்டது மக்களை மேலும் கோபம் அடைய வைத்தது.
கஞ்சா கருப்பு செய்த காரியத்தை பார்த்த சினிமா ரசிகர்கள் அவரை பாராட்டுகிறார்கள். படங்களில் தான் அவர் காமெடியன், நிஜத்தில் அவர் ஹீரோவாகி விட்டார்.
மக்களுக்காக களத்தில் இறங்கி போராடிய நீங்கள்தான் உண்மையான ஹீரோ என பாராட்டுகிறார்கள் ரசிகர்கள்.
கஞ்சா கருப்பு ஏன் அரசு மருத்துவமனைக்கு சென்றார்? படம் இல்லாமல் பணத்திற்கு கஷ்டப்படுகிறாரா? இந்த ரியல் ஹீரோவுக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கள் எனவும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.