Web Ads

புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

தான் இயக்கும் படத்தை, தானே தயாரிக்க முடிவெடுத்துள்ளார் ஜஸ்வர்யா. இது பற்றிய விவரம் பார்ப்போம்..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, தனுஷ் நடிப்பில் ‘3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின் மூலம் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

3 பட தோல்விக்கு பின்னர் ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார். இப்படத்தில், கெளதம் கார்த்திக், கேமியோ ரோலில் தனுஷ் நடித்தனர். இப்படமும் தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ‘லால் சலாம்’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இருப்பினும், தோல்வியை சந்தித்தது.

இப்படத்தின் தோல்விக்கு பின்னர், படத்தின் காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் தொலைந்து போனதே, தோல்விக்கு காரணம் என கூறியிருந்தார்.

இதையடுத்து சித்தார்த்தை ஹீரோவாக வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அப்படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. இந்நிலையில், தற்போது புதுமுகங்கள் நடிக்கும் சிறு பட்ஜெட் படத்தை ஐஸ்வர்யா இயக்கி, தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதன்மூலம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

‘இவர், தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்ததால், படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. ஆதலால், தானே தயாரிப்பு அவதாரம் எடுக்க தீர்மானித்துள்ளார்’ என தெரிவித்து வருகின்றனர் திரை ஆர்வலர்கள்.