Web Ads

சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன்?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘தலைவர்-173’ படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார். இந்நிகழ்வு கோலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல்முறையாக ரஜினியுடன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

இச்சூழலில் ‘அருணாச்சலம்’ படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினியை இயக்கவுள்ளீர்கள். அதேபோல், கமலை மீண்டும் இயக்குவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுந்தர்.சி,

‘கமல் சாருடைய ‘சலங்கை ஒலி’ படத்தைபார்த்த பிறகு தான் சினிமாவிற்கு வர விரும்பினேன். அதேபோல், அவருடைய ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தை பார்த்ததற்கு பிறகுதான் எவ்வாறு திரைக்கதை எழுத வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.

அப்படி யாரால் சினிமாவுக்கு வந்தேனோ, அவரை வைத்தே ‘அன்பே சிவம்’ படத்தை இயக்கினேன். இப்போது கமல் சாருடைய தயாரிப்பில் ரஜினியின் ‘தலைவர் 173′ படத்தை இயக்கவிருக்கிறேன். அதேபோன்று, கமலை மீண்டும் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். அப்படி வாய்ப்பு கிடைத்தால், அந்தப் படத்தை மிகச்சிறப்பாக இயக்குவேன்’ என கூறியுள்ளார்.

அவ்வகையில், கமல்ஹாசன் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம். சுந்தர்.சி தற்போது நயன்தாரா நடிப்பில் ‘பொட்டு அம்மன்-2’ படத்தை இயக்கி வருகிறார். இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

director sundar c spoke about directing kamal film
director sundar c spoke about directing kamal film