முன்பதிவில் அசத்தும் ‘கேம் சேஞ்சர்’ படம்; வசூலில் ரூ.1000 கோடியை தொடுமா?
முதல் தோல்வியை தழுவிய ஷங்கர், செம எனர்ஜியாய் சேலஞ்சாய், இதோ உருவாக்கியிருக்கும் திரைப்படம் குறித்து அப்டேட்ஸ் பார்ப்போம்..
இயக்குனர் ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தில், தவறவிட்ட வெற்றியை ‘கேம் சேஞ்சர்’ கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படம் தெலுங்கு மொழியில் உருவாகியிருந்தாலும், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது.
சுமார் 450 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.
ராம்சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதாவது, ‘அப்பா’ ராம்சரணுக்கு ஜோடியாக அஞ்சலியும், ‘மகன்’ ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானியும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், உள்பட பலர் நடித்துள்ளனர்.
திரு மற்றும் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்இப்படத்தில் வரும் 5 பாடல்களுக்காக மட்டும் சுமார் 75 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.ஆர்.ஆர். படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர், ராம்சரண் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த திரைப்படம் வருகிற10-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின், பிரீ புக்கிங் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், தற்போது சுமார் 7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளுக்கு நாள் இந்த வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“படம் ரசிகர்களை கவர்ந்து, நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் பட்சத்தில் ரூ.1000 கோடியை எளிதில் தாண்டும் இப்படம்” என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.