பிரண்ட்ஷிப்பை உருவாக்கவா நான் இங்கே இருக்கேன்,. கோபத்தில் தர்ஷிகா..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. ஒரு பால் நிறைந்த தொட்டியில் பல பொம்மைகள் இருக்கிறது அதை போட்டியாளர்கள் கண்டுபிடித்து எடுத்து டால் ஹவுஸ் ரூமில் வைக்க வேண்டும்.
கேம் விளையாடிய பிறகு தர்ஷிகா கேம்னா இண்டிவிஜுவலா விளையாடுங்க இல்லனா போய்டுவ என்று சொல்லி கோபப்பட்டு உள்ளே சென்று விடுகிறார்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பவித்ரா பேசிக்கிட்டு இருக்கும்போது நீ வந்ததும் தப்பு தானே என்று தர்ஷிகாவிடம் கேட்கிறார் என்கிட்ட பேசணும்னா என்ன கூப்பிட்டு தன பேசணும் எங்கேயோ கத்திக்கிட்டு இருந்தா அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா என்று கேட்கிறார்.
நான் ஒன்னும் பிரண்ட்ஷிப்பை உருவாக்க இங்கே உட்கார்ந்துகிட்டு இருக்கனா என்று கேட்கிறார். இந்த வீட்ல இருக்கிற என்னோட கேம்ம எந்த விதமான பிரண்ட்ஷிப் லவ்வும் அஃபெக்ட் பண்ணாது என்று சொல்லுகிறார் தர்ஷிகா.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram