ஓ.டி.டி.யில் வெளியாகும் ‘அன்பே டயானா’- எந்த தேதியில் தெரியுமா?

Where Love Meets Chaos! காதல், சிரிப்பு, குடும்பம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை மையமாகக் கொண்ட feel-good ரொமாண்டிக் காமெடி திரைப்படமான ‘அன்பே டயானா’, வரும் ஆகஸ்ட் 28, 2026 முதல் Sony LIV தளத்தில் பிரத்யேகமாக டிஜிட்டல் பிரீமியர் ஆகிறது.
குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை அழகாகக் கலந்து ஒரு இனிமையான அனுபவத்தை வழங்குகிறது.
சென்னையின் பரபரப்பான பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்ட இப்படம், பழமைவாத குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனின் வாழ்க்கையில் சுதந்திரமான சிந்தனையுடன் வாழும் ஆங்கிலோ-இந்திய பெண் ஒருவர் நுழைந்த பிறகு ஏற்படும் எதிர்பாராத மாற்றங்களை மையமாகக் கொண்டுள்ளது.
முற்றிலும் மாறுபட்ட இரு உலகங்களைச் சேர்ந்த இருவர் சந்திக்கும் போது, காதல், சிரிப்பு, குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் என அவர்களது வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் உருவாகின்றன. அந்தப் பயணத்தை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் இப்படம் எடுத்துச் செல்கிறது.
பரி இளவழகன் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். குடும்பம் மற்றும் கலாச்சார எல்லைகளை கடந்து மலரும் காதலின் சவால்களை அனைவரும் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரம்யா ரங்கநாதனின் நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்து இயக்குநரும் கதாநாயகனுமான பரி இளவழகன் கூறுகையில், இப்படத்தில் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என மூன்று பொறுப்புகளை ஏற்றது தனது திரைப்பயணத்தில் மிகவும் மனநிறைவு அளித்த அனுபவம் என்று தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் கிடைத்த ரசிகர்களின் அன்பும் வரவேற்பும் தங்களை நெகிழச் செய்ததாகவும், தற்போது Sony LIV மூலம் இன்னும் அதிகமான பார்வையாளர்களை படம் சென்றடைய இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் Era Entertainments ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
காதல், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட ‘அன்பே டயானா’, முற்றிலும் மாறுபட்ட இரு உலகங்களைச் சேர்ந்த இருவர் காதலில் விழும்போது என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக எடுத்துச் செல்கிறது.
மேலும், இந்த ஆகஸ்ட் மாதம் Sony LIV தளத்தில் காதல் கதைகளின் வரிசை தொடர்கிறது. ஆகஸ்ட் 21 அன்று கிரண் அப்பாவரம் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா நடித்த ‘சென்னை லவ் ஸ்டோரி’ வெளியாகிய நிலையில், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28 அன்று ‘அன்பே டயானா’ வெளியாகிறது.
சென்னையை பின்னணியாகக் கொண்ட ‘சென்னை லவ் ஸ்டோரி’, காதல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களை எதிர்கொள்ளும் இரு இளைஞர்களின் கதையைச் சொல்கிறது. இந்த இரண்டு படங்களும் இணைந்து Sony LIV பார்வையாளர்களுக்கு காதல், சிரிப்பு, உணர்வு மற்றும் feel-good பொழுதுபோக்கை வழங்கவுள்ளன.
காதல், சிரிப்பு மற்றும் சென்னை ஸ்டைல் குழப்பம் நிறைந்த ‘அன்பே டயானா’வை ஆகஸ்ட் 28 முதல் Sony LIV-ல் காணலாம்!
