முதன்முறையாக ஜெயராம் ஜோடியாக நடிக்கும் சிம்ரன்

Web Ads

நடிகர் ஜெயராம் மற்றும் நடிகை சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம்-காம் திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

‘தேஜாவு’, ‘வித்தைக்காரன்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். The Show People சார்பில் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார். ‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய SY கௌதம்ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

பூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் Fivestar கதிரேசன், Drumsticks Productions தயாரிப்பாளர் விவேக், Shanthi Talkies தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குநர் H. வினோத், நடிகர் நட்டி, Stone Bench தயாரிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஃபேமிலி ரோம்-காம் எண்டர்டெயினராக உருவாகும் இப்படம், Gen Z, 2K மற்றும் 90-களில் வளர்ந்த தலைமுறையினருக்கு இடையேயான உறவுகள், அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகிறது. பல்வேறு தலைமுறைகளின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான புரிதலை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஜெயராம், சிம்ரன் ஆகியோருடன் ‘வாழை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக கவனம் பெற்ற பொன்வேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் தேவிகா சதீஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Web Ad 2

இப்படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்ய, அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். அருள் E. சித்தார்த் படத்தொகுப்பை கவனிக்கிறார். மகேந்திரன் கலை இயக்குநராகவும், கார்த்திக் நேதா பாடல்களுக்கு வரிகள் எழுதவும், அனுஷா விஸ்வநாதன் நடன இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

M. முகமது சுபியர் ஆடை வடிவமைப்பையும், ஷயத் மாலிக் S ஒப்பனைப் பணிகளையும் கவனிக்கின்றனர். SN அஸ்ரஃப் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், D. உதயகுமார் தயாரிப்பு நிர்வாகியாகவும், சரவணகுமார் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், சாய்ராம் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். விஜய் வெங்கடராமன் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

கன்னதாசன் DKD விளம்பர வடிவமைப்பையும், ஜெய்குமார் வைரவன் ஸ்டில்ஸ் பணிகளையும் கவனிக்கின்றனர். சதீஷ் (AIM) மக்கள் தொடர்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜ். கதிர்ஹாசன் இணை இயக்குநராக பணியாற்றுகிறார்.

படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இப்படத்தின் பூஜை விழா உற்சாகமாக அமைந்தது. திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.