கோபியை நறுக்கென கேள்வி கேட்ட இனியா, வாய் பேச முடியாமல் தலை குனிந்து நின்ற கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.
இனியாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி உள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா பேசியதை நினைத்து ராதிகா வருத்தப்பட்டுக் கொண்டிருக்க கோபிக்கு போன் போடுகிறார். ஆனால் கோபி போன் எடுக்காமல் கட் பண்ணி விடுகிறார். இனியாவிடம் ஏதாவது சாப்பிடறியா இனியா பீச்ல போய் நிற்கலாமா என்று கேட்கிறார். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் டாடி என்று இனியா சொல்லுகிறார். என்னடா சொல்லு என்று கேட்க இப்ப எல்லாம் நான் கொஞ்ச நாளாவே சரி இல்ல டாடி நான் உங்கள பாக்க உங்க வீட்டுக்கு வந்தப்போ நீங்க இல்லன்னு தெரிஞ்சு நான் வர தான் பார்த்தேன் ஆனா ராதிகா ஆன்ட்டி ஓட அம்மா தான் பேசுனாங்க அவங்க பேசறதுக்கு தான் நான் பதில் சொன்னா ஆனா நான் ராதிகா ஆன்ட்டிய தப்பா பேசி இருக்க கூடாது அது எனக்கு தப்புன்னு தெரியுது என்று சொல்லுகிறார்.
கொஞ்ச நாளா சோகமாவும் வருத்தமாவும் தனியாவும் இருக்குற மாதிரி பீல் ஆகுது டாடி என்று அழுகிறார். பிரியாணில கெட்டுப்போன மீட்டை எதுக்கு சேர்த்தீங்க என்று கேட்க கோபி ஒன்றும் பேசாமல் இருக்க,அது வந்து என்று ஆரம்பிக்க நீங்க இல்லன்னு சொல்ல போறீங்களா டாடி நீங்க தான் பண்ணுங்கன்னு எனக்கு தெரியும் என்று சொல்லுகிறார். அம்மா பாவம் தானே டாடி எல்லாருக்காகவும் யோசிக்கிறாங்க ஆனா நான் நீங்க எல்லாருமே அவங்கள திட்டிக்கிட்டு தான் இருக்கோம் என்று பாக்யாவிற்கு ஆதரவாக பேசுகிறார். அதற்கு கோபி நான் எப்பவும் உன் மேலயும் செழியன் மேலயும் எழில் மேலயும் பாசமா தான் இருப்பேன். அந்த பாசம் என்னைக்குமே குறையாது என்று கோபி சொல்லுகிறார். செழியனுக்கு கூட இப்போ ஒரு பிரச்சனை போய்க்கிட்டு இருக்கு அதை எப்படி சரி பண்ணனும்னு தான் பார்க்கிறேன் எழிலுக்கு என்ன பிடிக்கவே பிடிக்காது இருந்தாலும் அவனுக்கு பட வாய்ப்பு வாங்கி கொடுத்த என்று சொல்ல. ஆனா அம்மாவ வரக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க இல்லப்பா என்று கேட்க கோபி அதிர்ச்சி அடைகிறார். அண்ணனுக்கு அம்மான்னா எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு தெரியும் இல்ல அம்மா தான் படம் பண்ணனும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க ஆனா அந்த பட விழாக்கு அம்மா வரணும்னு எவ்வளவு ஆசைப்பட்டு இருக்கோம் ஆனா நீங்க இந்த மாதிரி ஒரு வார்த்தை சொல்லும் போது அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் பா அப்போ நீங்க அண்ணன வச்சு அம்மாவுக்கு பழிவாங்க நீங்களா என்று கேட்க கோபி வாய் பேச முடியாமல் நிற்கிறார்.
இது மட்டுமில்லாமல் நீங்க பண்ற ஒவ்வொரு விஷயமும் எங்களை எவ்வளவு பாதிக்குது தெரியுமா? நாங்க ஒண்ணா உக்காந்து காபி கூட பிடிக்க முடியல முதல்ல அந்த வீட்ல இருந்து நீங்க வெளியே வந்தீங்க அதுக்கப்புறம் தாத்தா உடம்பு முடியாம போனாரு, பாட்டி சிரிக்கவே இல்ல அதுக்கு அப்புறம் அமிர்தா அக்காவும் எழில் அண்ணனும் வீட்டை விட்டு போனாங்க அந்த வீட்டோட சந்தோஷமே போயிடுச்சுப்பா. என்று சொல்லி அழுகிறார். பாட்டி அரெஸ்ட்ரான விஷயத்துல அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா? ஆனா நீங்க எதுவுமே பண்ணலியே பா உங்களால அவங்க கிட்ட இருந்து பேசி கேச வாபஸ் வாங்கி இருக்க முடியும் நீங்க ஏன் பா அதை பண்ணல என்று கேள்வி மேல் கேள்வி கேட்க கோபி அமைதியாக நிற்கிறார்.
அம்மா ரொம்ப பாவம் பா நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசி இருப்பேன் ஆனா அப்படி நடக்கல அம்மா உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்ததுல எந்த தப்பும் கிடையாது என்று சொல்லுகிறார். நீங்க டான்ஸ் கம்பெட்டிஷன்ல கலந்துக்கிட்டதை வீட்டுக்கு சொல்ல வேணாம்னு சொன்னீங்க அதே மாதிரி நானும் இருந்தேன் ஜெயிச்சதுக்கு அப்புறம் ஒரு எக்சைட்மெண்ட்ல நேரா உங்ககிட்ட வந்து கட்டி புடிச்சு சந்தோஷப்பட்டேன் ஆனா அம்மாவை அந்த விஷயம் ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கு. எல்லாரும் என்ன செல்பிஷ்னு சொல்றாங்க ஏன்னா அம்மாவால முடியலன்னா அப்பாகிட்டயும் அப்பாவால முடியல அம்மா கிட்டயும் கேக்குறேன்னு சொல்றாங்க வேற யாருகிட்டப்பா கேட்க முடியும் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா இந்த தப்பு என் மேல வராது இல்ல என்று சொல்லி அழுகிறார்.
நீங்க எப்ப அந்த வீட்டை விட்டு போனீங்கன்னா அதோட சந்தோஷம் ஃபுல்லா எடுத்துக்கிட்டு போயிட்டீங்க நானு, செழியன் அண்ணா, எழில் அண்ணா, பாட்டி என யாருமே சந்தோஷமா இல்ல நீங்க அந்த வீட்ல இருக்கும்போது நிம்மதியா இல்லன்னு சொன்னீங்க இல்ல டாடி ஆனா நீங்க அந்த வீட்ல புடிக்காத வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருந்தீங்கன்னு எங்களுக்கு எந்த நாளுமே தோணல சந்தோஷமா தானே இருந்தீங்க ஆனா இப்ப நீங்க வாழ்கிற வாழ்க்கை தான் நிம்மதி இல்லாத வாழ்க்கையா எங்களுக்கு தோணுது போங்கடா டேய் நீங்க போய் சந்தோஷமா இருங்க என்று சொல்லி அழுது கொண்டே இனியா கீழே உட்காருகிறார். பாக்யா போன் போட கோபி எடுத்து பேசி நாங்க பீச்சுல இருக்கோம் இனிய விளையாடிகிட்டு இருக்கா அதனால தான் நான் போன் எடுத்தேன் நான் போன் பண்றேன்னு சொல்லி வைத்து விடுகிறார் கோபி.
பிறகு பாக்யா வீட்டில் என்ன சொல்கிறார்? அதற்கு ஈஸ்வரியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.