Pushpa 2

நந்தினியை தேடி அலையும் சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பிரபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update
Moondru Mudichu Serial Today Promo Update

நேற்றைய ப்ரோமோவில் சூர்யாவை அருணாச்சலம் திட்டி அவளை போய் கண்டுபிடி என்று சொல்லிவிட்டு போகிறார். சரி நான் கண்டுபிடிக்கிறேன் என்று சூர்யா எங்க போயிருப்பா என்று யோசிக்கிறார். உடனே சூர்யா நண்பருக்கு போன் போட்டு வீட்ல ஒரு பிரச்சனை நந்தினி காணாமல் போயிட்டா என்று சொல்லுகிறார். என்னடா சொல்ற நந்தினி வீட்ல இல்லன்றதே உனக்கு தெரியாதா என்று சொல்ல நான் வழக்கம் போல குடிச்சிட்டு வந்து படுத்துட்டேன் என்று சொல்லுகிறார். உடனே சரி வா நம்ம போய் நந்தினி தேடலாம் என்று கூப்பிடுகிறார்.

பிறகு நந்தினி மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்து என்ன நடந்தது என்று யோசித்துப் பார்க்கிறார். பிறகு அங்கிருந்து வெளியே வந்து பார்க்க திருடர்கள் இரண்டு பேரும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. நந்தினி அவர்களிடம் சண்டை போடுகிறார். நீங்க பண்ண வேலைக்கு என்ன சந்தேகப்பட்டு பிரச்சனையா ஆயிடுச்சு. நகை எல்லாம் எங்கடா வச்சிருக்கீங்க என்றெல்லாம் கேட்க அவர்கள் நக்கலாக பேசுகின்றனர். என் மூஞ்சி எல்லாம் பார்த்து சந்தேகம் வராதது உங்க தப்பு என்று சொல்ல நந்தினி கோபப்படுகிறார்.

சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்க நந்தினி எதுவும் சொல்லாததால் பட்டினியா கிடக்கட்டும் நம்ம ரெண்டு பேருக்கும் மட்டும் வாங்கிட்டு வா என்று சொல்லி ஒருவரை அனுப்பி வைக்கிறார். பிறகு நந்தினி அந்த இடத்தை சுத்தி பார்த்துக் கொண்டிருக்க ஒரு தென்னை மரத்தின் பக்கத்தில் சுவர் இருப்பதை பார்க்கிறார். நந்தினி அந்த மரத்தின் பக்கத்தில் வர, ஓ மரத்தில் ஏறி குதிக்க போறயா போ போ என்று சொல்லுகிறார். நந்தினியும் மரத்தில் ஏறி சுவர் மீது ஏறி கீழே குதித்து விடுகிறார்.

சூர்யாவும் அவரது நண்பரும் எங்க போயிருக்கா தெரியலையே என்று பேசிக் கொண்டிருக்கின்றனர் நந்தினி வெளியே போய் இருக்கிறதுக்கு எங்க அம்மா தான் காரணமா இருப்பாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார. சூர்யாவின் நண்பர் கெட்டவளே ஒரு நல்லது மாதிரி நந்தினி காணாமல் போன உன்னை நீ பதறிக்கிட்டு தேடுற பத்தியா என்று சொல்ல, அப்படியெல்லாம் கிடையாது உங்க வீட்ல என்ன நாய்க்குட்டி காணாமல் போனாலும் நான் இப்படித்தான் பதறிக்கிட்டு தேடுவேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி கதறி அடித்துக் கொண்டு ஓடி வர காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று சொல்லிக் கொண்டு ஓடி வருகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் சூர்யாவையும் விவேக்கையும் பார்த்த நந்தினி விவேக் அண்ணா என்று கத்த அவர்கள் இருவருக்கும் காது கேட்காமல் இருக்கின்றனர். உடனே காரில் வந்த அந்த இரண்டு நபர்கள் நந்தினியை அழைத்துச் சென்று விடுகின்றன. நந்தினியை மீண்டும் அங்கு அழைத்து வர மினிஸ்டர் மற்றும் அர்ச்சனா இருக்கின்றனர். அந்த இரண்டு நபர்களையும் மினிஸ்டர் அடித்து துரத்திவிட்டு இதுக்கு மேல இவ்வளவு சும்மா விடக்கூடாது பண்ண வேண்டியது பண்ணிடனும் என்று சொல்லுகிறார். உடனே அர்ச்சனாவும் சரி என்று சொல்லுகிறார். நந்தினி பார்த்து என் வாழ்க்கையை கெடுத்தல்ல நீ என் கால் செருப்புக்கு கூட தகுதி கிடையாது.ஒளிச்சு கட்டாம விடமாட்டேன் என்று சொல்லுகிறார். பிறகு இருவரை கூப்பிட்டு இவளை கைய காலகட்டி டிக்கில போட்டு நான் சொன்ன மாதிரி செஞ்சுடுங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அருணாச்சலம் சூர்யாவிற்கு ஃபோன் போட்டு ஏதாவது தெரிஞ்சதா என்று கேட்க இல்ல டாடி தேடிக்கிட்டு தான் இருக்கேன் என்று சொல்லுகிறார். அவங்க வீட்டுக்கு வேணா போன் பண்ணி கேட்கலாமா வீட்டை விட்டு போனதுக்கு என்ன காரணம் டாடி என்று சொல்ல இந்நேரம் வீட்டுக்கு போயிருந்தா சிங்காரம் போன் பண்ணி இருப்பாரு வீட்டுக்கு எல்லாம் போகல என்று சொல்ல ஒருவேளை ஏதாவது ஆக்சிடென்ட் ஆயிருக்குமா டாடி என்று கேட்கிறார். அப்படியெல்லாம் இருக்காதே நானே பயந்து போயிருக்கேன் நீயும் இது மாதிரி பேசாத என்று சொல்ல, சரி டாடி நான் இன்னைக்கு நைட் ஃபுல்லா தேடுறேன் எதுவா இருந்தாலும் உங்களுக்கு இன்பார்ம் பண்றேன் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். உடனே சுரேகா மற்றும் மாதவி இருவரும் அருணாச்சலத்திற்கு சாப்பாடு கொண்டு வர நீங்கள் எல்லாம் அவளை அப்படி அசிங்கப்படுத்தாம இருந்திருந்தா அவ இங்க இருந்து போயிருக்க மாட்டா, திருட்டுப்பட்ட கட்டி பழி சொன்னா எந்த ஒரு கிராமத்து பொண்ணு இப்படித்தான் முடிவு எடுப்பாங்க என்று சொல்ல சரி விடுங்கப்பா என்று மாதவி சொல்லுகிறார். சுந்தரவல்லி எங்கே என்று கேட்க அம்மா மீட்டிங்கில் இருந்து போயிருக்காங்க சாப்பிட்டு வந்துருவாங்களாம் நம்மள டின்னர் முடிச்சுட்டு தூங்க சொன்னாங்க என்று சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அந்த நந்தினி இருக்காலே வீட்டை விட்டே போயிட்டாலாமே என்று சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் கேட்கிறார்.

மினிஸ்டரி நாட்கள் சிங்காரத்திற்கு போன் போட்டு உன் பொண்ணு நந்தினி வீட்ல இல்லையாமே என்று சொல்ல சிங்காரம் பதறுகிறார். நந்தினியை அருணாச்சலம் வீட்டு வாசப்படியில் காருக்கு பின்னாடி போட்டுவிட்டு இருவரும் மறைந்து கொள்கின்றனர் அருணாச்சலம் வீட்டிலிருந்து வெளியே வருகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றே எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update
Moondru Mudichu Serial Today Promo Update