Pushpa 2

கண்டிஷன் போட்ட ரோகினி, டென்ஷனான ரோகினியின் அம்மா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகிணி கண்டிஷன் போட டென்ஷன் ஆகி உள்ளார் ரோகிணியின் அம்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி க்ரிஷ் மற்றும் அம்மாவை புது வீட்டிற்கு கூட்டி வந்து பால் காய்ச்சுகிறார். பால் காய்ச்சி முடித்த பிறகு அம்மாவிடம் பல ரூல்ஸ்களை போடுகிறார். எங்கேயுமே வெளியே போகக்கூடாது ரூம் விட்டு வெளியே வரக்கூடாது லைட் எரியக்கூடாது எட்டு மணிக்கே கிருஷ் தூங்கிடனும் என்றெல்லாம் சொல்ல டென்ஷனான அம்மா காய்கறி வாங்க கூட போக கூடாதா என்று கேட்கிறார். எங்கேயோ நீ போக வேண்டாம் வாரத்துக்கு ஒருமுறை நானே வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன் பாலுக்கு சொல்லி இருக்கேன் டெய்லி வீட்ல கொடுத்துடுவாங்க என்று சொல்லிவிட்டு க்ரிஷ் கூப்பிட்டவுடன் வெளியே சென்று விடுகிறார் ரோகினி.

SiragadikkaAasai Serial Today Episode Update
SiragadikkaAasai Serial Today Episode Update

வித்யா ரோகினி அம்மாவிடம் ரூல்ஸ் போறது உங்களுக்கு கஷ்டமா இருக்கா அம்மா என்று கேட்க கஷ்டமா இல்லமா அவ எவ்வளவு பயத்துல இருக்கான்னு எனக்கு தெரியுது. நான் முதல்ல அவளுக்கு தேடி வைத்த வாழ்க்கை தான் சரியில்ல ஆனால் இது அவளா தேடிக்கிட்டு வாழ்க்கை இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சா அவள் அந்த வீட்டில் சேத்துப்பாங்களான்னு தெரியாது அது எனக்கு பயமா இருக்கு என்று சொல்லுகிறார்.

முத்து ஒரு சவாரிக்கு சென்று விட்டு கிரிஷ் வீட்டுக்கு பக்கத்துல தானே இருக்கும் அங்க போயிட்டு வந்துரலாம் என்று சொல்லி அங்கே வருகிறார். வீடு பூட்டி இருப்பதை பார்த்துவிட்டு பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரிக்க அவர்கள் ரெண்டு நாளாக அவர்கள் ஆளில்லை என்று சொன்ன உடனே போன் பண்ணுகிறார். ரோகினி காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு இது உனக்கு ஒரு வாரத்துக்கு வருமா என்று சொல்லுகிறார் அப்போ நான் வெஜ் எடுப்பது எப்படி என்று கேட்க நான் வீக் என்டுல வாங்கி கொண்டு வந்து கொடுக்கிற என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து முத்துவின் போன் வர ரோகினி நான் சொல்வது போல் சொல்லு என்று சொல்லி பேச சொல்லுகிறார்.

முத்து எப்படி இருக்கீங்க ஆள் இல்ல உங்க வீட்டுக்கு வாசல்ல தான் நின்னுக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல ரோகிணி பதறிப்போ இந்த வாசலில் சென்று பார்க்கிறார். ஆனால் அவர் இதற்கு முன்னிருந்த வீட்டில் இருந்து பேசுகிறார் என்பது தெரிய வருகிறது. ரெண்டு நாளா ஆள் இல்லைன்னு சொன்னாங்க அம்மா உடம்பு ஏதாவது சரியில்லையா என்று கேட்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்லப்பா நாங்க நல்லா தான் இருக்கும் என் பொண்ணு வேற ஒரு ஊருக்கே கூட்டிட்டு போயிட்டா என்று சொல்ல எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்கம்மா நானும் மீனாவும் வரோம் என்று சொல்லுகிறார். ஆனால் ரோகிணி கண்ணை காண்பித்து இதுக்கப்புறம் நீங்க போன் பண்ணாதீங்க எங்கள வந்து பாக்க வேணாம் என்று சொல்லியும் இனிமேல் போன் பண்ணா நான் எடுக்க மாட்டேன் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.

முத்துவும் இதுல ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு என்று சொல்லி சென்று விடுகிறார். உடனே ரோகிணி கிருஷ் ஸ்கூலுக்கு போக வேண்டியது இருக்கு ரெடி ஆகுமா என்று சொல்லுகிறார். அண்ணாமலை அதே ஸ்கூலுக்கு பரசு வேலை சொல்லியிருந்த காரணத்தினால் அங்கு வந்து பேசுகிறார். அவருக்கு வேலையும் கிடைக்க இரண்டு வாரம் கழித்து வருமாறு சொல்லுகின்றனர். அண்ணாமலை பரசுவிற்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லிவிட்டு கிளம்ப பின்னாடியே ரோகினியும் அம்மா மற்றும் கிரிஷ் வருகின்றனர். க்ரிஷ் ரோகினியிடம் நான் உங்க வீட்ல இருக்கட்டுமா என்று கேட்க கொஞ்ச நாள் போகட்டும் நானே உன்னை கூட்டிட்டு வந்துருவேன் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த முத்து மீனா விடம் என்ன பேசுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update
SiragadikkaAasai Serial Today Episode Update