ஷாப்பிங் டாஸ்க்.. டென்ஷனில் போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது. போட்டியாளர்களின் முகங்கள் இருக்கும் புகைப்படத்தில் மார்க் போட்டு கசக்கி யார் இருக்க வேண்டாம் என்று நாமினேஷன் செய்கின்றனர்.ஆனந்தி, சத்தியா, மஞ்சரி, போன்ற போட்டியாளர்களை நாமினேஷன் செய்கின்றனர்.
இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பவித்ரா மற்றும் ஆனந்த இருவரும் விஷால் மற்றும் சௌந்தர்யாவை பற்றி பேசுகின்றன.
இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் கொடுக்கப்பட்ட 8,500 பாயின்ட்சில் போட்டியாளர்கள் ஷாப்பிங் செய்ய வேண்டும். போட்டியாளர்கள் சொல்ல முத்துக்குமரன் வேகவேகமாக எழுதுகிறார்.சரியாக எழுதுகிறாரா? இல்லை சொதப்புகிறார்களா?என்பதை பார்க்கலாம்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram