Pushpa 2

இனியா சொன்ன வார்த்தை, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!!

இனியா சொன்ன வார்த்தையால் ராதிகா முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

baakiyalakshimi serial today episode update 19-12-2024
baakiyalakshimi serial today episode update 19-12-2024

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா பாக்யாவின் வீட்டிற்கு வந்து கோபியுடன் பேசிக் கொண்டிருக்க பக்கத்தில் இனியா இருக்கிறார். நாளைக்கு வீட்டுக்கு வர முடியுமா கோபி என்று கேட்க என்ன விஷயம் என்று கேட்கிறார். நாளைக்கு மயூவோட பிறந்தநாள் அவங்கள ரொம்ப எதிர்பாப்பா என்று சொன்ன ஐயோ மறந்து போயிட்டேன் என்று சொல்லிவிட்டு நாளைக்கு இனியாவோட டான்ஸ் கம்பெட்டிஷன் இருக்கு என்று சொல்லுகிறார்.

டான்ஸ் காம்பெட்டிசன் இப்ப போன உன்னோட ஹெல்த் பாதிக்காதா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் ஆகாது பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். உடனே அங்கு ஈஸ்வரி வந்து உட்கார ராதிகா எழுந்து வந்து விடுகிறார். உடனே இனியா நான் போன் பேசிட்டு வரேன் என்று சொல்லி வெளியே வந்து ராதிகாவை கூப்பிடுகிறார்.

நீங்கள் ஏன் என்னோட டாடி டான்ஸ் காம்பிடிசன் வருவதை தடுக்குறீங்க என்று கேட்க நான் தடுக்கல அவரோட நல்லதுக்காக தான் சொன்னேன் என்று சொல்லுகிறார். டாடிக்கு என் மேல தான் பாசம் அதிகமாக இருக்கும் என நான் அவர் பெத்த பொண்ணு என்று சொல்லுகிறார். இது மட்டும் இல்லாமல் நீங்க எனக்கு எவ்வளவு நல்லது பண்ணி இருக்கீங்க வீட்டுக்கு வந்தா அப்போ நல்லா தான் பாத்துக்கிட்டீங்க ஆனா இப்போ எங்களோட சந்தோஷத்தை கெடுக்காதீங்க நீங்க என்னோட அப்பாவ டைவர்ஸ் பண்ணிடுங்க என்று சொல்லுகிறார். இதனால் அதிர்ச்சி அடைய ராதிகா இப்படி எல்லாம் பேசாத இனியா கஷ்டமா இருக்கு என்று சொல்லியும் என் அம்மா ப்ரெண்டுக்கு துரோகம் பண்ண கூடாதுன்றதுனால தான் விலகி போறாங்க. நீங்க டைவர்ஸ் பண்ணிட்டீங்கன்னா நாங்க சந்தோஷமா இருப்போம் என்று சொல்லுகிறார். இதைக் கேட்டு ராதிகா வீட்டுக்கு சென்று உட்கார ராதிகாவின் அம்மா என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

உடனே ராதிகா வீட்டு ஹவுஸ் ஆனதுக்கு போன் போட்டு இன்னும் ரெண்டு நாள்ல நாங்க வீடு காலி பண்ணிடுவோம் என்று சொல்லுகிறார். எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று ராதிகாவின் அம்மா கேட்க அங்கு நடந்த விஷயங்களை சொல்ல நான் போய் அவளை ரெண்டு கேள்வி கேட்டுட்டு வரேன் என்று கிளம்புகிறார் ஆனால் ராதிகா அவரை தடுத்து நிறுத்தி இதுக்கு மேல யாரையும் எதையோ கேட்க வேணாம் அவர் என்ன கடத்தியெல்லாம் வைக்கல அவரா தான் விருப்பப்பட்டு அங்க இருக்காரு இனிமே கோபி பத்தி நான் யோசிக்கல நினைக்கவும் மாட்டேன் எனக்கு என் பொண்ணு இருக்கா நான் வளர்த்தேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் ராதிகா.

மறுபக்கம் பாக்கியா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க பேசாம உன்னோட ஜாதகத்தை எடுத்துட்டு போய் காட்டி ஜோசியர் கிட்ட உன் வாழ்க்கையில் சந்தோஷம் என்கிறதே இல்லை என்று சொல்ல அதுக்கே அவர்கிட்ட போகணும் நானே சொல்றேன் என்று பாக்யா சொல்லுகிறார். மத்தவங்க விஷயத்துல தலையிடாம இருந்தாலே என்னோட வாழ்க்கை நல்லா தான் இருக்கும் என்று சொல்ல அப்ப நீங்க தெரிஞ்சத அப்படி பண்றீங்களே ஆண்டி என்று ஜெனி கேட்கிறார். அந்த நேரம் பார்த்து கோபி வர சாம்பார் வாசனை சூப்பரா இருக்கு பாக்கியா என்று சொல்லுகிறார். டேபிளில் சாம்பார் எடுத்துக்கொண்டு வந்து பாக்கியா வைக்க அதை ஸ்பூனில் டெஸ்ட் பார்த்துவிட்டு சூப்பரா இருக்கு என்று சொல்லுகிறார். பாக்யா டென்ஷன் ஆகி அங்கே வந்து எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க உங்க கிட்ட வந்து கேட்டனா சாம்பார் எப்படி இருக்குன்னு காபி போடுறதே இந்த மாதிரி சாப்பாடு புகழ்ந்து நீங்க பேசணும்னு அவசியம் இல்ல நான் சமைக்கிறவங்க மட்டும் சொன்னா போதும் இதுக்கு மேல இது மாதிரி பண்ணா அவ்வளவுதான். உங்களை இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு சொன்ன ஆனா இங்க இந்த வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் என் கையகட்டி போட்டுட்டாங்க. தயவுசெய்து கிச்சனுக்கு மட்டும் வராதீங்க நான் எல்லா நேரமும் வரவேணான்னு சொல்லல நான் இருக்கிறப்போ வராதீங்க என்று சொல்லி கோபப்படுகிறார். உடனே கோபி அங்கிருந்து செல்ல கோபியின் ஹவுஸ் ஓனர் கால் பண்ணுகிறார்.

ராதிகா வீடு காலி பண்ண போகும் விஷயத்தை சொல்ல,கோபி அதிர்ச்சி அடைந்து நான் ராதிகா கிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன் என்று சொல்லி போனை வைக்கிறார் இந்த விஷயத்தை கேட்டு பாக்யாவும் அதிர்ச்சியாகி நிற்கிறார்.

கோபி ராதிகாவிடம் என்ன பேசுகிறார்?அதற்கு ராதிகாவின் பதில் என்ன? ராதிகா வீட்டை காலி செய்வாரா? இல்லையா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 19-12-2024
baakiyalakshimi serial today episode update 19-12-2024