இனியாவுக்கு தெரிந்த உண்மை.. பாக்கியா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
இனியாவுக்கு உண்மை தெரிய வர பாக்யா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவும், நித்தீஷும் விருந்து முடித்துவிட்டு வர இனியா எதுவும் பேசாமல் இருப்பதால் சாப்பாடு சூப்பரா இருந்துச்சு இல்ல இனியா என்று சொல்ல,ஆமா என்று சொல்லுகிறார் ஆனாலும் அமைதியாக இருக்க என்ன ஆச்சு என்று கேட்க எனக்கு எங்க அம்மாவோட ரெஸ்டாரன்ட்க்கு போய் இருக்கலாம் தோணுது என்று சொல்லுகிறார் நான் ஒன்னு கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க அவங்க அடுத்த வாரம் தான் யுஎஸ் போறாங்க ஆனா நீங்க நாளைக்கு சொல்றீங்க என்று கேள்வி கேட்க உடனே நித்திஷ் எனக்கு அப்படித்தான் சொன்னாங்க அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரியும் அதுவும் இல்லாம டாடி என் கிட்ட அங்க போகணும்னு சொல்லிட்டாங்க டாடி பேசுவதை மீறி என்னால ஒன்னும் பண்ண முடியாது நீயும் அப்படித்தான் இருக்கணும் புரிஞ்சுதா என்று கோபப்படுகிறார் உடனே காரை வேகமாக ஓட்டுகிறார். மறுபக்கம் இனியா எழிலுடன் பாக்கியாவின் ஹோட்டலுக்கு வர ஹோட்டலை பார்த்து அதிர்ச்சியாகி எழில் இடம் கேள்வி கேட்கிறார்.
என்னண்ணே இது அம்மா ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ண பண்ண போறேன்னு சொன்னாங்க இதுதான் அந்த ரெஸ்டாரன்ட்டா என்று கேட்க நீ எல்லாத்தையும் அம்மாகிட்ட கேட்டுக்கோ என்று சொல்லுகிறார் உடனே பாக்யா இனியாவை பார்த்தவுடன் உள்ளே அழைத்து பேச அதெல்லாம் இருக்கட்டும் நீ ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ண போறேன்னு சொன்ன ஆனா இது மாதிரி ஒரு சின்ன இடமா இருக்குனு நான் நினைக்கல இதுக்கு முன்னாடி இருந்த ரெண்டு ரெஸ்டாரண்ட விட இது பெருசா இருக்குன்னு தான் நினைச்சேன் இப்போ இந்த இடத்துல ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணனும்னு என்ன அவசியம் என்று கேட்டுக் கொண்டிருக்க செல்வி வருகிறார். உடனே செல்வியிடம் என்ன ஆச்சு ஆன்ட்டி எதுக்கு அம்மா இங்க ஓபன் பண்ணி இருக்காங்க என்று கேட்க சூழ்நிலை சரியில்லை என்று சொல்லுகிறார் என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்க செல்வி சொல்ல வர ஆனால் பாக்கியா அவரை சொல்லவிடாமல் வேலை செய்ய சொல்லுகிறார்.
உடனே பாக்கியா இனியாவை சமாளித்து விட்டு சென்றுவிட இனியா எழிலிடம் வண்டியில் வரும்போது அவர்களை நிற்க வைத்து அம்மா எதுக்கு இப்போ இந்த ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணி இருக்காங்க அவங்களுக்கு வீட்ல என்ன பிரச்சனை என்ன விஷயம் என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல இனியா என்று சொல்ல உடனே அது டெவலப்மெண்ட் ஏரியா இல்ல அதனால தான் என்று சொல்ல அம்மா சொன்னதே நீயும் சொல்லாத என்ன நடந்தது உண்மையா சொல்லு என்று கேட்கிறார். அப்ப எந்த பிரச்சனையும் இல்லன்னா என் மேல சத்தியம் பண்ண என்று சொல்ல வெளியில் சத்தியம் பண்ண மறுக்கிறார் என்ன நடந்தது என்ற விஷயத்தை இனியாவிடம் சொல்ல அப்போ அம்மா முதல்ல இருந்து பிசினஸ் ஆரம்பிச்சு இருக்காங்களா ஏன் யாருமே என்கிட்ட எதுவுமே சொல்லல நான் இன்னும் சின்ன பொண்ணு நினைக்கிறேன் இல்ல கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா சொல்ல கூடாதுன்னு நினைக்கிறீங்களா? நான் இப்பவே அம்மாவை பார்த்து பேசணும் கூட்டிட்டு போ என்று சொல்லுகிறார்.
பாக்கியா ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருப்பது பார்த்து இனியா கண்கலங்கி நிற்கிறார் உடனே பாக்யா இனியா என்னாச்சு என்று கேட்க கட்டிப்பிடித்து அழுகிறார் எனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருச்சு நீ எதுக்கு ரெஸ்டாரன்ட் விட்டுட்டு இந்த சின்ன ஹோட்டல் ஆரம்பிச்சிருக்கன்னு எனக்கு எல்லாமே தெரிஞ்சிருச்சு என்று சொல்ல அ சத்தியம் பண்ணி கேட்டம்மா என்னால சத்தியம் பண்ண முடியாம விஷயத்தை சொல்லிட்டேன் என்று சொல்லுகிறார் உடனே இனியா அங்கிள் ரெஸ்டாரன்ட் எழுதி கொடுக்கவில்லை என்றால் கல்யாணம் நடக்காதுன்னு சொன்னாரா என்று கேட்க யாரும் என்கிட்ட எதுவும் சொல்லல நானா விருப்பப்பட்டு என் பொண்ணுக்காக மட்டும்தான் ரெஸ்டாரன்ட் எழுதிக் கொடுத்தேன் என்று சொல்லுகிறார். பிறகு முதல் ரெஸ்டாரன்ட் குறித்து கேட்க எதுக்கு இனியா எல்லாமே கேட்டுகிட்டு இருக்கேன் நீ சந்தோஷமா இரு என்று சொல்ல, நீ சொல்ற விஷயத்தை எதுவுமே என்னால மண்டையில ஏத்துக்கவே முடியல திருப்பி திருப்பி உன்ன ஏமாத்தி வாங்கிட்டாங்களா என்பது போலவே இனியா பேசிக் கொண்டிருக்க நித்திஷ் போன் பண்ண பாக்கியா என்ன சொல்லுகிறார்? இனியா என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
