திட்டம் போட்டு முத்துவை பழிவாங்கிய அருண்,கோபப்பட்ட அண்ணாமலை,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

திட்டம் போட்டு முத்துவை பழிவாங்கியுள்ளார் அருண்.

siragadikka asai serial today episode update 13-05-25

siragadikka asai serial today episode update 13-05-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜிடம் இப்படியே போனால் நம்ம பிரிஞ்சிடுவோமா இதுக்கு ஒரு முடிவே இல்லையா நீ என்ன முடிவு எடுக்கப் போற என்று கேட்க நீ முதல்ல அம்மாவை சமாதானப்படுத்து என்று சொல்லுகிறார் அப்ப நீ எதுவும் பண்ண மாட்டியா என்று கேட்க நீதான பொய் சொன்னேன் என்று சொல்லுகிறார் நான் மட்டும் தான் பொய் சொன்னனா நீ எந்த பொய்யும் சொல்லலையா என்று கல்யாண மண்டபத்தில் இருந்து ஓடியது ஜீவாவுடன் சேர்ந்து பணத்தை எடுத்துட்டு போனது என்று நீ பண்ணதுக்கு பேர் எல்லாம் என்ன என்று கேட்க உன் தப்ப மறைக்க அடுத்தவங்க தப்ப சொல்லாத என்று பேசிக் கொண்டிருக்கும்போது ரோகிணிக்கு ஒரு வீடியோ வருகிறதா பார்த்துவிட்டு நான் பண்றது தான் உனக்கு தப்பா தெரியுது பண்றது எல்லாம் உன்கிட்ட தப்பா தெரியாது என்று முத்துவின் வீடியோவை காட்டுகிறார்.

இவனை எதுக்கு போலீஸ் அரஸ் பண்றாங்க என்று மனோஜ் பார்த்துக் கொண்டிருக்க மறுபக்கம் ஸ்ருதி ரவி இடம் வீடியோவை காட்டுகிறார் விஜயாவுக்கும் வீடியோ வந்து விட அருணாச்சலத்திடம் காட்டி உங்க பையன் என் மானத்தை வாங்கறான்னு தெரியல, எப்படி தான் வந்து பொறந்தானு தெரியல என்று திட்டிக்கொண்டே இருக்க அருணாச்சலம் என்ன நடந்துச்சு தெரியாமல் நீ பாட்டுக்கு பேசிட்டு இருக்காங்க நான் நேர்ல போய் பாக்குறேன் என்ன சொல்ல சம்மந்தி என்ன நினைப்பாங்க எனக்கு அசிங்கமா இருக்கும் இவன் ஒரு தடவை போலீஸ் ஸ்டேஷன் போறான் சின்ன வயசுலே தப்பு பண்ணிட்டு போனா என்று ஆரம்பிக்க அண்ணாமலை கோபப்பட்டு அதட்டுகிறார்.அவன் பண்ணாத தப்புக்கு என ஆரம்பித்து சில விஷயங்களை மனசோட வச்சுக்கிறது தான் நல்லது என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். மறுபக்கம் மீனா ஒருவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு அவர் கிழிந்த புடவை போட்டு இருப்பதால் முத்துவுக்கு போன் போட்டு புடவை கேட்க கான்ஸ்டபிள் எடுத்து பேசுகிறார் முத்து அவரிடம் நான் என் பொண்டாட்டி கிட்ட பேசிக்கிறேன் என்று சொல்லியும் அவர் போனை கொடுக்க மறுக்கிறார்.

பிறகு மீனாவிடம் கான்ஸ்டபிள் நடந்த விஷயத்தை சொல்ல சரி நான் நேர்ல வரேன் என்று மீனா போனை வைக்கிறார். உடனே கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டர் வந்தவுடன் முத்து காரில் பிரேக் இல்லாத விஷயத்தை ஸ்கூல் பசங்க மேல மோதி இருப்பேன் ஆனா திருப்பும் போது இவர் ஒன்றில் இடிச்சது நான் பார்க்கல என்று சொல்லுகிறார் ஆனால் இன்ஸ்பெக்டரும் ஏற்கனவே உனக்கும் அருணுக்கும் பிரச்சனை இருந்தது அதனால நீ அவரோட வண்டியை மோதி இருக்க என்று அவர்களும் நம்புகின்றனர்.

உன் லைசென்ஸ் கேன்சல் பண்ண போறோம் என்று முடிவு எடுக்க அருணிடம் என்ன பண்ணலாம் என்று கேட்க அதை சொல்லிட்டீங்க இல்ல அப்படியே பண்ணிடுங்க என்று சொல்லுகிறார் இன்ஸ்பெக்டர் சென்றவுடன் அவரிடம் முத்து நேரம் பார்த்து பழி வாங்குறீங்களா சார் என்று கேட்கிறார் நீ எப்படி வேணா வச்சுக்கோ என்று சொல்ல அவரை வெளியில் போக சொல்லுகின்றனர் உடனே மீனா வர நடந்த விஷயங்களை மீனாவிடம் சொல்லுகிறார் பிறகு வெளியில் வந்த கான்ஸ்டபிள் போனை கொடுத்துவிட்டு வீட்டுக்கு போக சொல்ல கார் இல்லாமல் எப்படி போக முடியும் என்று கேட்கிறார் அது கோர்ட்ல கேஸ் வரும்போது பார்த்துகோ லைசன்ஸ் கேன்சல் பண்ண போறாங்க நீ கார் எடுத்துட்டு போய் என்ன பண்ண போற என்று கேட்கிறார். அருண் மீது முத்து கோபப்பட மீனா அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்று விடுகிறார்.

மறுபக்கம் காரை ஓட்டி வந்தவருக்கு கையில் அடிபட்டு இருக்க அருண் என்னாச்சு என்று கேட்க கார்ல நிஜமாவே பிரேக் பிடிக்கலதான் அதனாலதான் நான் ஒரு செவத்துல மோதி கையில் அடிபட்டுருச்சு அங்க இருக்குற மெக்கானிக் வச்சு சரி பண்ணி எடுத்துட்டு வந்தேன் என்று சொல்ல அருண் உண்மை தெரிந்தும் இதை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் அவன் லைசென்ஸ் கேன்சல் பண்ணியாச்சு இப்ப திருப்பி ஏதோ சொன்னா அவன் ஓவரா ஆடுவான் ஆறு மாசம் லைசென்ஸ் இல்லாம அலையட்டும் என்று சொல்லுகிறார் அவன் மேல தப்பே இல்லையேப்பா என்று சொல்ல அதற்கு அருண் இதுக்கு முன்னாடி நிறைய தப்பு பண்ணி இருக்கான் அதுக்கான தண்டனையா இருக்கட்டும் இதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க என்று சொல்லி அனுப்புகிறார்.

பிறகு ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வந்து என்ன பேசுகிறார்?அதற்கு விஜயா என்ன சொல்லுகிறார்? முத்துமீனா வந்தவுடன் மீனா என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 13-05-25

siragadikka asai serial today episode update 13-05-25