நந்தினி பார்த்து முகத்தை மறைத்துக் கொண்ட சிங்காரம், அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி ரஞ்சிதாவை அழைத்துக் கொண்டு சுந்தரவல்லி வீட்டுக்கு பணத்துடன் வருகிறார். நந்தினி பணத்தை எடுத்து டேபிளில் வைக்க சூர்யாவும் வந்து நிற்கிறார். இதுல ரெண்டு லட்சம் ரூபா இருக்கு ஐயா இந்த வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு கட்டுன பணம் என்று சொல்ல சுரேகா இதெல்லாம் நல்ல பணமா இல்ல ஜெராக்ஸா என்று சுரேகா சொல்ல சூர்யா அமைதியாக உட்கார சொல்லுகிறார். உடனே மாதவி உனக்கு ரெண்டு லட்சத்தை திருப்பி கொடுக்க சாமர்த்தியம் இருக்குனா அப்ப எதுக்கு இந்த வீட்ல திருடன என்று கேட்க,சூர்யா நீ பார்த்தியா என்று கேட்க மாதவி அமைதியாகிறார். என் மேல திருட்டு பழி போட்டாங்க ஆனா எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் அதே ஸ்கூல்ல என் தங்கச்சி படிக்கணும் அதுக்காக இந்த பணத்தை திருப்பி கொடுத்துட்டேன் எடுத்துக்க சொல்லுங்க என்று சொல்லுகிறார். அதற்கு சுந்தரவல்லி பணக்கார வீடு ஆச்சே இரண்டு லட்சம் காணாமல் போச்சுன்னா கேக்க மாட்டாங்கன்னு நினைச்சிருப்பா இப்ப கேட்டதுனால பிச்சை எடுத்து வாங்கிட்டு வந்திருப்பா என்று சொன்னவுடன் நான் வட்டிக்கு வாங்கி தான் எடுத்துக்கிட்டு வந்து இருக்கேன் என்று நந்தினி சொல்ல அருணாச்சலம் பதறுகிறார்.
நீங்க எதுக்கு இவ்வளவு பதரிங்க என்று கேட்க, நந்தினி ரஞ்சிதாவை கீழே படுக்க சொல்லுகிறார் எதற்குமா என்று அருணாச்சலம் கேட்க சொல்ற வார்த்தையில உண்மை இருந்தா துண்டு போட்டு தாண்டுவாங்க அதே மாதிரி தான் என் உயிருக்கு உயிரா நினைக்கிற என் தங்கச்சியை பண்ற நான் பொய் சொன்னா அவ உயிருக்கு ஆபத்து வரும் என்று சொல்லுகிறார். சூர்யா தாண்டும் டாடி என்று சொல்ல ரஞ்சிதாவும் படுத்து விட நந்தினி தாண்டுகிறார். உடனே சூர்யா என்ன எல்லாரும் மூஞ்சியும் செத்த நாத்தம் புடிச்ச எலி மாதிரி இருக்கு என்று கேட்கிறார். உங்க மூஞ்சியெல்லாம் எங்க எடுத்துக்கிட்டு போய் வைப்பீங்க ரொம்ப வெளிப்படையா கேவலமா நந்தினியை டார்கெட் பண்றீங்க இல்ல, இப்போ நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன் என்று மாதவி அசோகன் இடம் டெண்டர் விசயத்துல நீங்க தப்பு பண்ணலன்னு படுக்க வச்சு தான்றிங்களா என்று கேட்க மாதவி முழிக்கிறார். உடனே சுரேகாவிடம் உன் ரூமுக்குள்ள நீ சொல்லாம தான் அவன் வந்தான்னு உங்க அம்மாவை கீழே போட்டு படுக்க வச்சு நீ தாண்டரியா என்று சொல்ல சொல்லி கேட்க, யாரும் வாய் பேச முடியாமல் அமைதியாக நிற்கின்றனர். நீ ஜெயிச்சிட்ட நந்தினி, இந்த மூஞ்சிங்களுக்கு எல்லாம் கரிய பூசுற அளவுக்கு ஜெயிச்சுட்ட உடனே கல்யாணத்தை கூப்பிட்டு பட்டாசுலா எங்க வச்சிருக்க போ எடுத்துட்டு வா நந்தினி ஜெயிச்சதை கொண்டாடணும் என சொல்லி பட்டாசு வெடித்து கொண்டாட அருணாச்சலம் சந்தோஷப்படுகிறார்.
பிறகு நந்தினி கல்யாணத்திடம் இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு என்று சொல்ல, யாரும் தெரியாத ஊர்ல வந்து ஒரு ஆம்பளயால் கூட சமாளிக்க முடியாதத நீ சமாளிச்சுருக்க அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா உனக்கு மனசுல எவ்வளவு வைராக்கியம் இருந்தா உன்னால் அதை பண்ணி இருக்க முடியும் என்று சொல்லுகிறார். எனக்கு வந்த பிரச்சனை பெருசு பணமும் பெருசு ஏதாவது பண்ணி ஆகணும் போது முயற்சி பண்ண வட்டிக்கு வாங்கி கொடுத்து இருக்கேன் அதை திருப்பிக் கொடுக்கணும் என்று சொல்ல,கல்யாணமும் அதையெல்லாம் நீ பண்ணிடுவம்மா என்று சொல்லுகிறார். இந்த வீட்ல எல்லாரும் படிச்சிருக்காங்க பணத்துல வசதியா இருக்காங்க ஆனா குணத்துல என் தங்கச்சிய அசச்சுக்க முடியாது. இந்த வீட்ல எல்லாரும் பண திமிர்ல ஆடுறாங்க அதனால உன்னோட அருமை பெருமை இவங்களுக்கு தெரியல எல்லாம் தெரியறதுக்கான நேரம் சீக்கிரம் வரும் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சிங்காரம் செக்யூரிட்டி வேலைக்கு போன இடத்தில் என்ன வயசான மாதிரி இருக்காங்க என்று கேட்க, அதெல்லாம் சொன்னா எல்லா வேலையும் செய்வேன் என்று சொல்ல அவரை நைட் டூட்டிக்கு அனுப்ப சொல்லுகிறார். கிளம்பறதுக்கு முன்னாடி என் பொண்ணு கிட்ட ஒரு போன் பேசுகிறேன் என்ன சிங்காரம் வருகிறார். மறுபக்கம் சூர்யா போதையில் இருக்க நந்தினி பாலுடனும் ரூமுக்கு வர சூர்யா சந்தோஷத்தில் வாடி ராசாத்தி என்று நந்தினியை பாராட்டி தள்ளுகிறார். நீ பாக்குறதுக்கு தான் நந்தினி இப்படி இருக்க ஆனா புயல் மாதிரி திருப்பி அடிக்கிற என்று சொல்கிறார். பிரச்சனை சின்னதா வரும்போது இப்படி எதிர்த்து பேசினா வாழ்க்கையில் பிரச்சனையே வராது இந்த உலகம் எப்படி நம்மள நடத்தணும்னு நம்ப தான் நினைக்கணும் என்று சொல்லிவிட்டு இந்த பணத்தை உனக்கு யார் கொடுத்தது என்று கேட்கிறார். இந்த ஊர்லயும் கொஞ்சம் நல்லவங்க இருக்காங்க அவங்க தான் கொடுத்தாங்க என்று சொல்லுகிறார். டாடியோ இல்ல தாய்க்குலமோ கொடுத்து இருந்தா நீ வாங்க தேவையில்லை என்கிட்ட எதுக்கு வாங்கல என்று கேட்கிறார்.அது யாரோட காசு இல்ல அது என்னோட டாடி ஓட காசும் கிடையாது என்னோட ஓன் மணி அது எதுக்கு வேண்டாம்னு சொல்ற காரணம் என்ன என்று கேட்க நந்தினி வேண்டாம் என சொல்ல அதுதான் ஏன்னு கேட்கிறேன் என்று சொல்லுகிறார். யாரோ ஒருத்தர் கிட்ட தேடிப் போய் கடன் வாங்குற என்கிட்ட வாங்க மாட்ற ஏன் என்று கேட்கிறார். அதுக்கு என்ன தகுதி இருக்குனு எனக்கு தெரியல என்று சொல்லுகிறார்.
சூர்யா என் பணத்தை வாங்க எதுக்கு தகுதி வேணும் என்று கேட்க, உங்க கல்யாணத்துக்கு வேலை செய்ய வந்த என்ன என்னோட விருப்பம் இல்லாம தாலி கட்டினீங்களே அந்த உரிமையில் வாங்க சொல்றீங்களா? இல்ல நீங்க கட்டின இந்த தாலியை சுமந்துகிட்டு இந்த வீட்ல வேலைக்காரியா இருக்கேனே அந்த உரிமையில வாங்க சொல்றீங்களா? உங்க அம்மாவ பழி வாங்க ஒரு மஞ்ச கயிறைகட்டி அத வச்சு அவங்கள அப்பப்ப அவமானப் படுத்துறீங்களே அந்த உரிமையா? என்ற கேள்வி மேல் கேள்வி கேட்க சூர்யா வாய் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார். ஏன் சார் அமைதியா இருக்கீங்க ஒரு நாள் இந்த கேள்விக்கு எல்லாம் உங்களுக்கு பதில் தெரிந்தது என்றால் அன்னைக்கு சொல்லுங்க நான் உங்க உதவியை ஏத்துக்கிறேன் என்று சொல்லி விட்டு சூர்யாவிடம் பாலை கொடுத்துவிட்டு நந்தினி படுக்கச் சென்று விடுகிறார். பிறகு சிங்காரத்தை செக்யூரிட்டி வேலைக்கு சுந்தரவல்லி வீட்டில் வந்து இறக்கி விடுகின்றனர் என்ன செய்வது என புரியாமல் சிங்காரம் நிற்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கோலம் போட வெளியே வர சிங்காரம் குல்லா போட்டு முகத்தை மூடி கொள்கிறார். என் புள்ள என்ன பார்த்தா மனச உடைஞ்சு போயிடுமே என்று மனதில் நினைக்கிறார் மறுபக்கம் நந்தினி அவருக்கு காபி எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க உங்கள பாத்தா எங்க அப்பாவ பாக்கற மாதிரி இருக்கு அவரும் இன்னைக்கு தான் முதல் நாள் செக்யூரிட்டி வேலைக்கு போயிருக்காரு என்று சொல்லுகிறார்.
நந்தினி அருணாச்சலத்திடம் இன்னைக்கு மட்டும் இல்ல டெய்லியும் போற மாதிரி இருக்கும் என்று சொல்ல ஆபீஸ் வேலைக்கு போற மாதிரி சொல்றியேமா என்று சொல்லு வேலைக்கு தான் போறேன் என்று நந்தினி சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
