ஈஸ்வரியை கேள்வி மேல் கேள்வி கேட்ட பாக்யா, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ஈஸ்வரியை பாக்யா கேள்வி மேல் கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் நின்றுள்ளார் ஈஸ்வரி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி அவதா நல்லவ மாதிரி வேஷம் போட்டு கோபியை அவளவே வர வைக்கணும்னு முடிவு பண்ணி இப்படி போயிருக்க இவன் எதுக்கு போகணும் நானே இப்பதான் அவ இப்படி சொன்னாலே நிம்மதியா இருந்தேன் என்று பேசிக்கொண்டு இருக்க கடுப்பான பாக்கியா கிச்சனிலிருந்து வந்து நானும் கொஞ்சம் நாலா பார்த்துக்கிட்டு இருக்கேன் நீங்க ரொம்ப ஓவரா பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல ஈஸ்வரி கொஞ்ச நாளா நீயும் மரியாதை இல்லாம தான் பேசிகிட்டு இருக்க என்று சொல்லுகிறார் நான் உன்னோட வயசுல பெரியவ மதிச்சு பேசு என்று சொல்ல அதையேதான் நானும் சொல்றேன் ஆனா வயசில பெரியவங்க தப்பு பண்ணும் போது அதை சொல்றதுல தப்பில்லை என்று பாக்யா பேசுகிறார்.
உங்க பையனும் வரும்போது உங்களுக்கு எந்த ஒரு நியாயமோ கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குது உங்க பையன் என்ன டைவர்ஸ் பண்ணும்போது என்கிட்ட கேட்காமயே சொல்லாமையே ஒரு பேப்பர்ல கையெழுத்து போட சொன்னாரு. கோர்ட் வரைக்கும் கூட்டிட்டு போனாரு அதுக்கெல்லாம் தெரிஞ்ச உங்க பையனுக்கு இது தெரியாதா? அன்னைக்கும் நீங்க உங்க பையனுக்கு மட்டும் தான் சப்போர்ட் பண்ணி பேசுனீங்க. 50 வயசுலயும் உங்க பையன் உங்க பேச்சைக் கேட்கணும்னு என்ன அவசியம் இருக்கு. எது கேட்டாலும் உங்க பயனை முந்தானையில் வைத்து முடிந்து கொள்ளாதீங்க. இரண்டாவது கல்யாணம் பண்ணாரு அதுலயாவது ஒழுங்கா வாழ்ந்தாரா அதுவும் இல்ல அதுலயும் பிரச்சனை, உங்க பையன் சந்தோஷமா இருக்குறதுக்காக இதெல்லாம் பண்றீங்கன்னு, நீங்க நினைக்கலாம் அது உண்மை இல்ல உங்க பையன் உங்க கண்ட்ரோல்ல இருக்குறதுக்காக தான் நீங்க இவ்வளவு பண்றிங்க.
உங்க பையன உங்க கண்ட்ரோல்லே வச்சிருக்கணும்னா எதுக்கு கல்யாணம் பண்றீங்க எதுக்கு ராதிகாவோட வாழ்க்கையை கெடுக்குறீங்க நீங்க பண்ற ஒவ்வொரு விஷயத்துக்கும் நாளைக்கு பதில் சொல்லியே ஆகணும். அவர் இப்ப அவங்க வைஃப் பார்க்க போயிருக்கிறார் அங்க போய் அவங்க முடிவு எடுத்து லைஃபை எப்படி வாழனும்னு முடிவு எடுக்கட்டும் நீங்க தயவு செஞ்சு எதிலும் தலையிடாதீங்க என்று கோபப்பட்டு பேசி விட்டு பாக்கியா செல்ல ஈஸ்வரி அதிர்ச்சியாகி நிற்கிறார்.
மறுபக்கம் சந்துருவிடம் ராதிகாவின் அம்மா பாக்யாவின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு ராதிகாவை துரத்தியது போல் பேச ராதிகா ஃபோனை வாங்கி அப்படியெல்லாம் ஒண்ணுமே நடக்கல எல்லாமே நானே விருப்பப்பட்டு வந்தது தான் இதுக்காக எல்லாம் எதுவும் வர வேண்டாம் என்று சொல்லி போனை வைக்கிறார். கொஞ்ச நேரத்தில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு ராதிகாவின் அம்மா கதவை திறக்க கோபி நிற்கிறார். உள்ளே வாங்க என்று ராதிகாவின் அம்மா கூப்பிட உள்ளே வந்த கோபி நீ வந்ததிலிருந்து நீ பேசின எல்லா விஷயமும் என் மனசிலையோ என் மைண்ட்லயே இருக்கு எனக்கு ஒண்ணுமே புரியல நீ வேணா அங்க வா என்று கூப்பிட உடனே வேணாம் வேணாம் நீ அங்க வர வேணாம் நான் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு இங்க வந்துடறேன் என்று சொல்லுகிறார். எதுவும் வேண்டாம் எங்கேயும் வர வேண்டாம் உங்களை நான் காட்டில விட்டுட்டு வரல உங்க வீட்ல தானே விட்டுட்டு வந்து இருக்கேன் உங்க மனநிம்மதிக்காக தான் நான் இந்த முடிவு எடுத்திருக்கேன் என்று சொல்லுகிறார்.
ராதிகா கிளம்புங்க என்று சொல்லிக் கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் கோபி இந்த முடிவு நிரந்தரமானதா? இல்லை தற்காலிகமானதா? என்று கேட்க இதுக்கான பதில் உங்களுக்கே தெரியும் என்று சொல்லுகிறார் எனக்கு எதுவுமே புரியல என்று சொல்ல இங்கிருந்து போயிடுங்க நீங்க வரவே வேண்டாம் என்று சொல்லுகிறார். ஏன் ராதிகா இப்படி பேசுற உன்னை விட்டுட்டு நான் எப்படி இருப்பேன் அடிக்கடி உன்னையும், மயூவையும் வந்து பார்க்கலாமா என்று கேட்க வரவே வேண்டாம் நீங்க எதுக்கு வரணும் வரத் தேவையில்லை என்று உறுதியாக ராதிகா சொல்லிவிட கோபி அதிர்ச்சியாகிறார். பிறகு அங்கிருந்து கோபி சென்றுவிட ராதிகாவின் அம்மா மாப்பிள உனக்காக தானே வந்தாரே நீ எதுக்கு இப்படி பேசுற என்று கேட்கிறார். இனிமேலும் காயப்பட எங்களால முடியாது நாங்க சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சேன்னா எங்களை தயவு செய்து இப்படியே விட்டுடு என்று சொல்லிவிட்டு ராதிகா சென்று விடுகிறார்.
பிறகு கோபி பாருக்கு சென்று குடித்துக் கொண்டிருக்க செந்தில் வருகிறார் அவரிடம் கோபி என்ன சொல்லுகிறார்? செந்திலின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
