Pushpa 2

காணாமல் போன ஸ்ருதி, பதற்றத்தில் ரவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ஸ்ருதி காணாமல் போக ரவி பதற்றத்தில் இருக்கிறார்.

siragadikka asai serial today episode update 01-02-2025
siragadikka asai serial today episode update 01-02-2025

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி தூங்கப் போக மனோஜ் பிரம்பை எடுத்து அடிக்க எடுக்கிறார். உடனே ரோகினி அதல வேணாம் மனோஜ் எனக்கு ஒன்னும் இல்ல என்று சொல்லிருந்தாலும் நான் உன்னை அடிக்கின்ற ரோகினி உங்கப்பாவா அடிக்கிற அதுவே எனக்கு கஷ்டமா தான் இருக்கு என்று சொல்லி ஒரு அடிக்கிறார் ஒரு அடி அடித்த பிறகு இதெல்லாம் வேலைக்காகாது என்று முடிவெடுத்த ரோகினி பெட்டில் இந்த பக்கமும் அந்த பக்கமும் கத்தி மனோஜ் இழுத்து கொஞ்ச நேரம் டிராமா போட்ட பிறகு இப்ப நான் ரீலிபா ஃபீல் பண்றேன் எங்க அப்பா ஆவி என்ன விட்டு போயிடுச்சுன்னு நினைக்கிறேன் என்று சொல்லி மனோஜ் நம்ப வைக்கிறார்.

சாமியார் சொன்னது தான் கரெக்ட்டா இருக்கு அப்போ இப்படி பண்ணதுனால தான் உங்க அப்பாவ உன்ன விட்டு போய் இருக்காரு என்று சொல்ல ஆமாம் மனோஜ் தேங்க்ஸ் மனோஜ் என்று சொல்லுகிறார். மறுபக்கம் ரவி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க நீத்து வருகிறார். நீங்க ஒன்னும் உங்க ஃபங்ஷனுக்கு கிளம்பலையா என்று சொல்ல இன்னும் ஒரு ஆர்டர் மட்டும் இருக்கு எடுத்துட்டு போற என்று சொல்லுகிறார். என்று பேசிக் கொண்டிருக்க வேலை செய்யும் ஒருவர் உணவைக் கீழே கொட்ட நீத்து டென்ஷனாகி அவரை திட்டுகிறார்.

உடனே கிளீன் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு ரவியிடம் இதை முடிச்சிட்டு நீங்க வீட்டுக்கு போங்க என்று சொல்லிக் கொண்டே வர தண்ணீர் வழுக்கி காலில் அடிபடுகிறது. நடக்க முடியவில்லை என்று சொன்னவுடன் ரவி அவரை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு போக நிற்க உடனே சுருதி இதை பார்த்துவிட்டு கோபமாக சென்று விடுகிறார்.நீத்து நீங்க வேணா ஸ்ருதி போய் பாருங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்ல நான் ஈவினிங் போயிட்டு இருக்கேன் நீங்க ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று அவரை தூக்கி கொண்டு செல்கிறார். மறுபக்கம் மீனா கிளம்பி தயாராக இருக்க முத்து நாளுக்கு நாள் உனக்கு வயசு குறைஞ்சுகிட்டே போகுது மீனா அழகா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஸ்ருதி வீட்டில் இல்லாததால் ரூமில் ரவி டென்ஷன் ஆக இருக்கிறார். மீனாவின் சேலையை முத்து சரி பண்ணிக் கொண்டிருக்க அண்ணாமலை வருகிறார் எல்லாரும் ரெடியாயிட்டீங்களா என்று கேட்டேன் எல்லாரும் ரெடியாயிடுச்சுப்பா நீங்க ரெடியா இருக்கீங்களா என்று கேட்க நான் ரெடி ஆயிட்டா உங்க அம்மா தான் பெயிண்ட் அடிச்சிட்டு இருக்க என்று சொல்லி கிண்டல் பண்ணுகிறார். கொஞ்ச நேரத்தில் விஜயாவுக்கு ரோகினி மேக்கப் போட்டு முடிக்க நீங்க நேச்சுரலாவே ரொம்ப அழகா இருக்கீங்க ஆன்ட்டி என்று சொல்லுகிறார். எல்லாரும் என்ன அப்படி தான் சொல்லுவாங்க என்று விஜயாவும் பெருமையாக பேசிக் கொள்கிறார். அனைவரும் வெளியே வந்து கிளம்பி தயாராக இருக்க எல்லாரும் இங்க இருக்கோம் ஆனா இருக்க வேண்டியவர்கள் எங்கே என்று கேட்க விஜயா ரவி ரவி என்று கூப்பிடுகிறார் உள்ளே இருந்து வந்த ரவியிடம் ஸ்ருதி எங்க என்று கேட்க டப்பிங் போயிருப்பதாக சொல்லி சமாளித்து விடுகிறார். நீங்க போங்க நான் ஸ்ருதியை கூட்டிட்டு வரேன் என்று சொல்லுகிறார் பிறகு அனைவரும் கிளம்ப முத்துக்கு மீனாவும் ரவியிடம் வந்து என்ன பிரச்சனை என்று கேட்கின்றனர்.

முதலில் ஒன்னும் இல்லை என்று சொன்ன ரவி பிறகு நடந்த விஷயங்களை சொல்ல உன் மேல எந்த தப்பும் இல்லை இது கூட ஏன் பல குரலால புரிஞ்சுக்க முடியல என்றுமுத்து கோபப்படுகிறார். சரி நீ போய் யார்கிட்டயும் ஏதோ சொல்லிக்காத நான் போய் பல குரலை தேடி கூட்டிட்டு வருவோம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றன.

அனைவரும் பார்ட்டி நடக்கும் இடத்துக்கு வந்துவிட ரவி ஸ்ருதிக்கு போன் பண்ணி கொண்டே இருக்கிறார். உடனே அங்கு வந்த விஜய் இந்த ஸ்ருதி ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா நான் உனக்கு அப்பவே சொன்னேன் அவளை அடக்கி வை என்று என ரவியிடம் சொல்லுகிறார். அவ இஷ்டத்துக்கு இருக்கிறாய் என்று விஜயா கோபப்படுகிறார். பிறகு ரவி எப்படி சமாளிக்கிறார்? ஸ்ருதி அம்மா அப்பா என்ன கேட்கின்றனர்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 01-02-2025
siragadikka asai serial today episode update 01-02-2025