
சூர்யாவை திருத்த களத்தில் இறங்கிய நந்தினி, அர்ச்சனா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் உனக்கு இங்க சந்தோஷமா இருக்கவே தெரியாது சின்ன வயசுல இருந்தே ரெஸ்பான்சிபிலிட்டி உனக்கு அதிகமாயிடுச்சு. ஏதாவது வேலைய பாத்துட்டு இருந்தா தான் உனக்கு திருப்தி அதுதான் உன்னோட சந்தோஷம் என்று சொல்லுகிறார். உன்ன மாதிரி நான் நிறைய பேரை பார்த்து இருக்கேன் தேவையில்லாத விஷயத்துக்கு அதிகமா குற்ற உணர்ச்சி படுவாங்க எனக்கு தெரியும் அதே கேட்டகிரி தான் நீயும் என்று சொல்ல, இவ்வளவு தெரிஞ்ச உங்களுக்கு உங்க அம்மாவ வெறுப்பேத்த என்ன பயன்படுத்துவது தப்புன்னு தெரியலையா என்று கேட்கிறார். நீங்க எதுக்கு என்னோட பிறந்த நாளை அங்க கொண்டாடுனீங்க அப்படியே கொண்டாட இருந்தாலும் இந்த ரூம்ல கேக் வெட்டி இருக்கலாம் ஆனா உங்க அம்மாவோட ஃபங்ஷன்ல எதுக்கு அப்படி பண்ணனும் என்று கேட்கிறார்.
எல்லாரும் நீங்க என் மேல அக்கறையா இருக்குறீங்க நினைச்சுப்பாங்க ஆனா எனக்கு மட்டும் தானா அதுக்கான காரணம் தெரியும் உங்களுக்கு அது குற்ற உணர்ச்சியா இல்லையா என்று கேட்கிறார். நீ ஒரு நிமிஷம் இரு நான் உனக்கு ஒன்னு தரணும் இல்லனா நான் மறந்திடுவேன் என்று சொல்லி சூர்யா கிப்ட் பாக்ஸை கொடுக்கிறார். அதுதான் அப்பவே கொடுத்துட்டீங்களே என்று சொல்ல அது வேற இதைப் பிரிச்சு பாரு என்று சொல்லுகிறார். ஆனால் நந்தினி இதிலேயே ஏதாவது வில்லங்கமா இருக்கும் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல இது கண்டிப்பா உனக்கு பிடிக்கும் பிடிச்சு இருக்கும் பாரு என்று சொல்லுகிறார். இதைப் பார்த்து நீ எவ்வளவு சந்தோஷப்பட போறேன்னு மட்டும் பாரு என்று நந்தினி பிரித்து பார்க்க அதில் காபி கப் இருக்கிறது. அதில் நந்தினி தங்கைகளுடன் இருக்கும் புகைப்படம் இருக்க நந்தினி சந்தோஷப்பட்டு சிரிக்கிறார்.
நான் தான் சொன்னேன்ல நீ சந்தோஷப்படுவேன்னு என்று சொல்ல நந்தினி தேங்க்யூ சார் என்று சொல்லுகிறார். என்ஜாய் பண்ணு டெய்லி இதுல டீ குடி என்று சொல்லிவிட்டு சூர்யா கிளம்பி விடுகிறார். கிச்சனில் நந்தினியும் கல்யாணமும் வேலை பார்த்துக் கொண்டிருக்க கல்யாணம் நேற்று ஐயா கிரீடம் வச்சு அசத்திபுட்டாரு என்று பேசிக்கொண்டிருக்க, உடனே நான் வேலைக்காரி தான் அப்படின்னு பேச ஆரம்பிச்சுடாத கொன்னு புடுவேன் கொன்னு என்று சொல்லுகிறார். சுந்தர வள்ளி அருணாச்சலம் உட்கார்ந்து கொண்டிருக்க அருணாச்சலம் உன்ன பத்தி நியூஸ் பேப்பர்ல வந்திருக்கு என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்கிறார் அவார்ட் கொடுத்ததை பற்றி போட்டு இருக்காங்க என்று சொல்ல அதை மட்டும் போட்டு இருக்காங்களா அடுத்து நடந்ததையும் போட்டு இருக்காங்களா என்று சொல்ல அவார்ட் வாங்கியது மட்டும்தான் போட்டு இருக்காங்க என்று சொல்ல சந்தோஷம் என்று சொல்லுகிறார்.
எவளோ ஒருத்திக்கு பொறந்தநாளுன்னு என்ன ஆட்டம் ஆடுறான் அவன் அடிச்ச கூத்துல எனக்கு தலைவலி நைட்டு புல்லா தூக்கம் வரல அவ ஒரு ஆளு அவளுக்கு பிறந்தநாள் கொண்டாடுறான் என்று கோபப்படுகிறார். ஆட்டம் பாட்டம் மட்டுமில்லாம அந்த கிரீடம் வேற, என் பையனையே எனக்கு எதிரா தூண்டி விடுறா என்று சொல்ல உன் பையன அவ தூண்டிவிடுகிறாளா என்று சொல்லி அருணாச்சலம் கேட்க அந்த நேரம் பார்த்து சூர்யா வந்துவிடுகிறார். ஏதோ நந்தினிக்கு பிறந்தநாள் கொண்டாடியத பத்தி திட்டின மாதிரி கேட்டுச்சு என்று சொல்ல அதற்கு சூர்யா நந்தினி என்னோட பொண்டாட்டி அவளுக்கு நான் எல்லாமே பண்ணுவேன் அதுக்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு என்று சொல்லுகிறார். அத பாக்க இங்க யாருக்கும் பிடிக்கலனா அவங்கள ரூமுக்குள்ள போய் கதவை சாத்திக்க சொல்லுங்க என்று சொல்ல, நான் எதுக்கு ரூமுக்குள்ள போகணும் என்று சுந்தரவல்லி கோபப்பட தாத்தாவோட சொத்து பேரனுக்கு தான் என்று சொல்ல, சுந்தரவல்லி இது ஒரு விஷயத்துனால தான் இவன் ஆடிக்கிட்டு இருக்கான் எல்லா அவர சொல்லணும் எனக்கு அப்பாவும் சரி இல்ல புருஷனும் சரியில்ல பெத்தது மட்டும் எப்படி சரியா இருக்கும் என்று கோபப்பட அதற்கு சூர்யா இந்த பிறந்தநாள் மட்டும் இல்ல இனி வரப்போற பிறந்தநாள் எல்லாமே நான் ரொம்ப கிராண்டா கொண்டாடுவேன் என்று சொல்ல சுந்தரவல்லி எப்படியாவது போங்க என்று கத்திவிட்டு சென்று விடுகிறார்.
சூர்யா தனியாக நின்று கொண்டிருக்க நந்தினி கூப்பிட்டு எதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க. நீங்க பண்றது எல்லாம் உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்ல என் மேல தான் எல்லா கோபமும் திரும்பும். நீங்க ஊர்ல எங்க குடும்பத்தை காப்பாத்துனதுக்கு உங்களுக்கு நன்றி சொல்றதா இல்ல உங்க அம்மாவை வெறுப்பேத்தறத்துக்காக இப்படி பண்றீங்களே அதுக்கு வருத்தப்படுறதா என்று கேட்க புரியலல்ல நீ போ என்று சொல்லுகிறார். நீங்க உங்க அம்மாகிட்ட இப்படி பேசாதீங்க என்று சொல்ல எனக்கு யார்கிட்ட எப்படி பேசணும்னு தெரியும் நீ போய் வேலையை பாரு என்று அனுப்பி வைக்கிறார்.
ஜெயிலில் இருக்கும் சுதாகர் நந்தனிக்கு போன் போட்டு என்ன ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு உன் செல்ல புருஷன் கூட ஜொள்ளு விட்டுன்னு கிட்டு இருக்கியா என்று கேட்கிறார். உன்ன சாதாரணமா விடமாட்டேன் என்று சொல்ல நீயா என்று நந்தினி கேட்கிறார். இன்னும் 90 நாள்ல நான் வெளியே வந்துருவேன் வந்து உடனே உங்க குடும்பத்தையே சீரழிச்சு உன்ன அசிங்கப்படுத்தி இந்த ஊரைவிட்டு துரைக்கிறேன் இது நடக்குதா இல்லையா என்று மட்டும் பாருடி என்று சவால் விடுகிறார். உடனே நந்தினி பதறிப் போகிறார். பிறகு மாடியில் தனியாக சுதாகர் மிரட்டியதை நினைத்த நந்தினி நம்ம எப்படியாவது நம்ம குடும்பத்து கிட்ட போய் சேர்ந்திடனும் வாழ்வோ சாவோ நம்ம குடும்பத்துக்கு கூட போயிடனும் என்று யோசிக்கிறார். எல்லாம் இந்த கல்யாணத்தால வந்தது என்ன இருந்தாலும் அன்னைக்கு நைட்டே நான் போயிருக்கணும் என்று யோசித்துக் கொண்டே அருணாச்சலம் சூர்யாவ குடியிலிருந்து நீதாமா வெளியில கொண்டு வரணும் என்று சொன்னதையும் யோசிக்கிறார். அப்போ சூர்யா சார எவ்வளவு சீக்கிரம் குடியிலிருந்து நிறுத்த முடியுமோ நிறுத்திட்டா நம்ப இந்த வீட்ல இருந்து சீக்கிரமாவே வெளியே போயிடலாம் என்று முடிவெடுத்து இதை ஒரு தாட்டி அருணாச்சலம் ஐயா கிட்ட சொல்லி உறுதியாக கேட்டுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.
அருணாச்சலம் உட்கார்ந்து கொண்டிருக்க நந்தினி வந்து நிற்க, என்ன விஷயம் என்னமா டல்லா இருக்க என்று கேட்கிறார். நீ நல்லா இருக்கணும் சந்தோஷமா இருக்கணும் அதுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன் என்று சொல்லுகிறார். ஆனா ஊருக்கு போனோம்னு மட்டும் சொல்லாத என்று சொல்ல நான் அதைப் பற்றி தான் உங்ககிட்ட பேச வந்தேன் என்று சொல்ல என்னம்மா சொல்ற என்று கேட்க சுதாகர் போன் பண்ண விஷயத்தையும் மிரட்டிய விஷயத்தை அருணாச்சலத்திடம் சொல்லுகிறார். நீ கவலைப்படாத நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். நான் அதுக்கு சொல்லலையா நான் எங்க குடும்பத்துக்கூட என் தங்கச்சி கூட நான் இருக்கணும் வாழ்வோ சாவோ நான் அங்க இருக்கணும் என்று சொல்கிறார். இப்பதான் உங்களுக்குள்ள புரிதல் வந்து இருக்குன்னு ஆசைப்பட்டம்மா என்று சொல்ல உங்க பையனுக்கு நீங்க அம்மா அக்கா தங்கச்சிங்கன்னு எல்லாருமே இருக்காங்க ஆனா எங்க குடும்பத்துக்கு யாருமே இல்ல என்று சொல்லுகிறார். அதுக்கு என்னமா நீ இப்பவே போக போறியா என்று சொல்ல நான் அப்படி சொல்லல ஐயா நீங்க சொன்னத காப்பாத்துனா போதும் என்று சொல்லுகிறார். என்ன என்று கேட்க, நீங்க சூர்யா சார் குடியிலிருந்து மீட்டுட்டு வந்துட்டா நீ இங்க இருந்து போயிடலாம் என்று நீங்க சொன்னீங்க இல்ல நான் சீக்கிரமாவே சூர்யா சார் குடியிலிருந்து நிறுத்திடுவேன் நீங்க என்ன ஊருக்கு அனுப்பி விடுவிங்களா என்று கேட்க சூர்யா குடியை நிறுத்தினால் அதை விட சந்தோஷம் எனக்கு வேற எதுவும் கிடையாது ஆனால் நந்தினி ஊருக்கு போக கூடாதே என்று யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி இடம் உன்னை யாரு காபி எல்லாம் எனக்கு கொண்டுட்டு வர சொன்னது உன் வேலையை நீ பார்க்க வேண்டியதுதானே என்று கேட்கிறார்.
மறுபக்கம் அர்ச்சனா மினிஸ்டர் இடம் சூர்யாவும் நந்தினி இன்னும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா வாழ ஆரம்பிக்கலன்னு தோணுது அப்பா என்று சொல்லுகிறார். கல்யாணம் நந்தினியிடம் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க, அவரை எப்படியாவது குடியிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துடனும் அண்ணே இன்று நந்தினி சொல்லுகிறார் யாரு நீயா என்று கேட்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
