டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
படம் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் தற்போது கார் ரேஸில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் தொடர்ந்து பிஸியாக கார் ரேஸில் இருந்து வரும் அஜித் சமீபத்தில் டிரைவராகவே தொடர விரும்புவதாக கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அஜித் சினிமாவில் இருந்து விலகுகிறாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். இது அஜித் ரசிகர்களிடையே சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.