Browsing category

Tamil Cinema News

தென்னிந்திய ஓ.டி.டி தயாரிப்பாளர்கள் சங்கம் – நடிகை ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார்

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் முக்கியமான முன்னெடுப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளைச் சேர்ந்த தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து ‘தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. நான்கு மொழிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளில் செயல்பட்டு வந்த அமைப்புகள் ஒரே குடையின் கீழ் இணைந்துள்ளதால், தென்னிந்திய தயாரிப்பாளர்களின் நலன்களுக்காக வலுவான ஒருங்கிணைந்த அமைப்பு உருவாகியுள்ளது. தொலைக்காட்சி துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு […]

ஃபஹத் பாசில் அந்த கேரக்டராகவே மாறிடுவார்! – நடிகர் சூர்யா

‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படக்குழுவினர் பேச்சு – சூர்யா, ராஜமௌலி, ஃபஹத் பாசில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்! எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும், ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். இதன் சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய […]

பிக் பாஸ் 10-ல் ஆட்டமே மாறப்போகுது! வந்தாச்சு புதிய திருப்பம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்கி மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், போட்டி தற்போது புதிய திருப்பத்தை நோக்கி நகர்கிறது. இன்றைய எபிசோடில் லட்சுமி பிரியா, சவின்யா மற்றும் ஜாவேத் ஷெரிப் ஆகிய மூன்று புதிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளனர். ‘திருப்புமுனை’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ப்ரோமோவில் தொகுப்பாளர் விஜய் சேதுபதியுடன் வனிதா விஜயகுமாரும் இடம்பெற்றுள்ளார். இதனால் இன்றைய எபிசோடு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. புதிய போட்டியாளர்கள் ஏற்கனவே வீட்டில் […]

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்! பிரம்மாண்டமாக நடைபெற்ற சூர்யா ரசிகர்களின் ஃபோட்டோஷூட்

அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட ஃபோட்டோஷூட் நிகழ்வில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா ரசிகர்களை நேரில் சந்தித்தார். ஒவ்வொரு ரசிகரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களின் நலன் குறித்து கேட்டறிந்த சூர்யா, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என அன்புடன் அறிவுறுத்தினார். ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து நலம் விசாரித்த சூர்யாவின் எளிமையான அணுகுமுறை, அங்கு […]

எனது விருப்பப் பட்டியலில் இருந்த ஒன்று! – சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்த விக்கி கௌஷல்!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘Love & War’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இப்படம், பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வருகிறது. ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது விக்கி கௌஷலின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. ஒரு […]

ராவணனாக ராக்கிங் ஸ்டார் யஷ்… வெளியானது ராமாயணம் படத்தின் பிரம்மாண்ட போஸ்டர்!

இந்திய சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராக்கிங் ஸ்டார் யஷின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தங்கக் கிரீடம், முத்து மாலைகள் மற்றும் பிரம்மாண்டமான தங்க ஆபரணங்களுடன் ராஜ கம்பீரமாக காட்சியளிக்கும் யஷ், தனது தீவிரமான பார்வையால் போஸ்டரில் கவனம் ஈர்க்கிறார். டிரெய்லர் வெளியானது முதலே யஷின் ராவணன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை […]

ஜெம் வீரமணி விவகாரத்தில் அமீர் – வெற்றிமாறன் அறிக்கை

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக இயக்குநர்கள் வெற்றி மாறன் மற்றும் அமீர் தெரிவித்துள்ளனர். உலகத்தைப் பற்றியே முழுமையாக அறியாத பிஞ்சுச் சிறுமிகளை குறிவைத்து பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றிருந்தால், அது மன்னிக்க முடியாத மிகப்பெரிய குற்றம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், வீரமணியை பாதுகாக்க முயன்றதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் அல்லது அதிகாரமிக்க நபர்கள் என அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். […]

சினிமா துறையின் முக்கிய பிரச்சினைகள்… அமைச்சர் முன் வைத்த தயாரிப்பாளர்கள்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள ஹோட்டல் ஆதித்யாவில் நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தமிழ் திரையுலகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும், திரைப்படத் துறையின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு, […]

அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமியின் லவ் வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியானது!

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கியுள்ள ‘லவ் (Love)’ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நவீன காதல், டேட்டிங் மற்றும் உறவுகளின் மாற்றங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடரில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்றைய டிஜிட்டல் உலகில் காதல் மற்றும் உறவுகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் இந்தத் தொடர் பேசுகிறது. குறிப்பாக, டேட்டிங் ஆப்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள கதையில், காதலுக்கு […]

சிவகார்த்திகேயனின் 27-வது படம் தொடக்கம்

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK27 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிரட்டலான போஸ்டருடன் வெளியாகியுள்ளது. ‘அமரன்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், இப்படத்தில் புதிய அவதாரத்தில் நடிக்கிறார். ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்றுள்ள இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாது லோகர் நடிக்கிறார். இருவரும் இணையும் […]