அச்சம் என்பது மடமையடா படத்திற்கு 10 ஆண்டுகள்.. மஞ்சிமா மோகன் நெகிழ்ச்சிப் பதிவு!

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மஞ்சிமா மோகன். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். இப்படம் வெளியாகி தற்போது 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நடிகை மஞ்சிமா மோகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “திரும்பிப் பார்க்கும்போது பல நினைவுகளும், கடந்து வந்த பாதைக்கு நன்றியுணர்வும் மேலோங்குகிறது. இத்தனை ஆண்டுகளில் […]

புத்தாண்டுக்கு மீண்டும் வெளியாகிறது ‘பைரவா’

2027 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2017-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இப்படம், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2027 ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு விருந்தாக ரசிகர்களைச் சந்திக்கவுள்ளது. விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027 புத்தாண்டை முன்னிட்டு […]

F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட் படத்தின் போஸ்டர் வெளியீடு

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் ஹாரர் திரில்லர் திரைப்படமான ‘F6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், திகில் மற்றும் மர்மம் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. ஹாரர், திரில்லர் அம்சங்களுடன் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு அம்சங்களையும் […]

ஃபேமிலி பாய் படத்தின் முதல் பாடல் தீராகணம் வெளியீடு!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகர்களில் ஒருவரான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஃபேமிலி பாய்’ (Family Boy). இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான ‘தீராகணம்..’ பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளன. இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள்தாஸ், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் […]

‘கிங் 100’ படத்தில் கர்ணாவாக அசோக் செல்வன்!

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ படத்தில் அசோக் செல்வன்.. ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! நடிகர் நாகார்ஜுனா அக்கினேனியின் திரைப்பயணத்தில் 100-வது திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘கிங் 100’ (King 100). ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கிய ர. கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். அவரது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும். இப்படத்தில் நாகார்ஜுனாவுடன் இணைந்து பல திறமையான நடிகர்கள் நடித்து வருகின்றனர். அந்த வகையில், இப்படத்தில் […]

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கும் பொலிமேரா 3 முதல்பார்வை வெளியீடு

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்த ‘பொலிமேரா’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகமாக ‘பொலிமேரா 3’ உருவாகி வருகிறது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஏற்றுள்ள ‘வீராவி’ கதாபாத்திரத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. வம்சி நந்திபாடி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் வம்சி நந்திபாடி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. (ஏசியன் குழுமம்) சார்பில் பரத் நரங் இணைந்து […]