அரசன் படத்திலிருந்து அனிருத் விலகலா? – தயாரிப்பாளர் தாணு பதில்!

‘அரசன்’ திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகிவிட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பதிலளித்துள்ளார்.

‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் யானை மாதிரியைத் தமிழகம் முழுவதும் சுற்றி வரும் நிகழ்வைத் தொடங்கி வைத்த தாணு, அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார்.

- Advertisement -

அவரிடம் ‘அரசன்’ படத்தின் முன்னோட்டக் காட்சி விமர்சனங்களைச் சந்தித்தது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அந்த வீடியோ யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அனிருத் ‘அரசன்’ படத்திலிருந்து விலகிவிட்டதாகப் பரவும் தகவல் குறித்துக் கேட்கப்பட்டபோது, “யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது” எனச் சுருக்கமாகப் பதிலளித்தார்.

இதனால், அனிருத் விலகல் குறித்த தகவலுக்கு தயாரிப்பாளர் தாணு நேரடியாக விளக்கம் அளிக்காமல் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார்.

AnirudhArasanIs Anirudh Out of Arasan Producer Kalaipuli S Thanu RespondsKalaipuli S. ThanuSilambarasan TR