Browsing category

Latest News

ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிக்கும் “ராமாயணா” படத்தின் 3வது பாடல் வெளியானது

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராமாயணா’ படத்தின் இசைப் பயணத்தில் புதிய மைல்கல்லாக ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியாகியுள்ளது. ராமர் – சீதையின் அன்பு, திருமணம் மற்றும் வாழ்க்கைப் பயணத்தை அழகிய காட்சிகளுடன் வெளிப்படுத்தும் இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். அரண்மனையின் பிரம்மாண்டம், ராமர் – சீதையின் திருமண நிகழ்வுகள், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் […]

நடிகை ‎தேவயானி மகள் பிரியங்கா நடிக்கும் புதிய திரைப்படம் ’பிளாக் நைட் பாய்ஸ்’

Arul Murugann Picture மற்றும் Dream Runway 26th Century நிறுவனங்கள் சார்பில் க.இ. மணிகண்டன் என்கிற விமல் G இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’. அமல் அஜித் கதாநாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், தனது சமூக வலைதள வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தற்போது […]

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நயன்தாரா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகை நயன்தாரா இப்படத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்கின்றனர். இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களையும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் இப்படத்தில் நயன்தாரா இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. பிரம்மாண்டமான திரை அனுபவம், விறுவிறுப்பான […]

பிரபுதேவா, சிம்ரன் நடிக்கும் கமல் ஸ்ரீதேவி

சீயோன் பிலிம்ஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபுதேவா மற்றும் சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சீயோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் இணைந்து நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குடும்பத்துடன் இணைந்து […]

‘தாரா’வாக அறிமுகமாகும் ருக்மிணி வசந்த்!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’, ‘காந்தாரா: சாப்டர் 1’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ருக்மிணி வசந்த், ‘கணம்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்குடன் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில், ருக்மிணி வசந்த் ‘தாரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, சாய் கிருஷ்ணா கட்வால் இணைந்து தயாரிக்கிறார். […]

யோகி பாபுவின் ‘சிங்காரம்’ படத்திற்கு வெளியீட்டுத் தேதி குறிச்சாச்சு!

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ள இப்படத்தை ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 30-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், வரலாற்றுப் பின்னணி, சமூகப் புறக்கணிப்புகள் […]

ஜி.வி. பிரகாஷ் – கயாடு லோஹரின் ’இம்மார்ட்டல்’ ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

காதல், மர்மம் மற்றும் அமானுஷ்ய திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படம், வரும் அக்டோபர் 30, 2026 அன்று Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. சென்னையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதையில், அச்சகத்தில் பணிபுரியும் […]

முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியானது

செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. SSR Entertainment சார்பில் K. I. சுரேஷ் தயாரிக்கும் இப்படத்தில், முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார். வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடர் நீல நிற லெதர் ஜாக்கெட் அணிந்தபடி முகேன் ராவ் கம்பீரமாக நிற்க, அவருக்கு அருகில் தங்க நிறத்திலான செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியையும் […]

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி முன்னோட்டம் வெளியீடு!

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான பீரியட் ஆக்‌ஷன் திரைப்படம் ‘ஃபௌஜி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஃபைல் நம்பர் 25’ என்ற பெயரில் படத்தின் புதிய முன்னோட்டத்தைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படம் 2027 மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நவீன் […]

பிரபாஸ் பிறந்தநாளில் அடுத்தடுத்து வந்த படங்களின் அப்டேட்ஸ்

இந்திய சினிமாவின் ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ்: பாக்ஸ் ஆபீஸ் சாதனைகள் முதல் அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள் வரை! ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தியவர், ‘சலார்’ படத்தின் மூலம் பான் இந்திய ரசிகர்களைக் கவர்ந்தவர், ‘கல்கி 2898 ஏ.டி.’ மூலம் அறிவியல் புனைகதை உலகில் புதிய அனுபவத்தை வழங்கியவர் எனத் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகர் பிரபாஸ். ‘ரெபெல் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர், தனது அடுத்தடுத்த […]