Browsing category

Latest News

மாரி செல்வராஜ் – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘மாகாளி’ பூஜையுடன் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட தனித்துவமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். சமூகத்தின் முக்கியமான ஒரு பிரச்சினையை அழுத்தமாகவும் தாக்கமிக்க வகையிலும் பேசும் படைப்பாக ‘மாகாளி’ உருவாகி வருகிறது. இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி […]

கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கும் ‘சித்தா’ இயக்குநர் எஸ்.யு.அருண்குமார்

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ சமீபத்தில் நடைபெற்றது. அதன் காட்சிகள் இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே வேகமாகப் பரவி வருவதுடன், கமல்ஹாசனின் புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. வழக்கம்போல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, தனது தோற்றத்திலும் நடிப்பிலும் புதுமையை வெளிப்படுத்தி […]

திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ முதல் பார்வை!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி, நடிகைகள் பூனம் பாஜ்வா, இனியா, நந்திதா ஸ்வேதா மற்றும் அஷ்மிதா சிங் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் தங்களது […]

‘ஹாய்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த படக்குழுவினர்!

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து படத்தின் வெற்றிக்கு ஆதரவு அளித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், நடிகர்கள் அம்ருதா சீனிவாசன், குரேஷி, காவ்யா, ராதிகா […]

என்ன விலை படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய ஜி.வி. பிரகாஷ் குமார்!

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமார், திரைப்படப் பணிகளுடன் புதிய இசைப் படைப்புகளையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். தனது சொந்த இசை நிறுவனத்தின் வாயிலாக திறமையான இசைக் கலைஞர்களின் படைப்புகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்று வரும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் […]

தமிழ் ரசிகர்களுக்காக ரெடியாகும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’!

பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் கிரீஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமீதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. மலையாளத்தில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து, இப்படத்தின் தமிழ் பதிப்பு செப்டம்பர் 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் ரசிகர்களுக்கு படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் […]

“எல்லோரும் கார்த்தியை ‘சர்தார்’ ஆகவே பார்க்கிறார்கள்..!” – சூர்யா பாராட்டு!

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா தயாரிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். ‘சர்தார் 2’ படத்தில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், […]

நடிகை த்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது

நடிகை த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி இணைந்து நடிக்கும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. ‘ஏர்லிஃப்ட்’, ‘செஃப்’, ‘பிப்பா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ண மேனன் இப்படத்தை இயக்குகிறார். பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபலுடன் இணைந்து தயாரிக்கும் இப்படம், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பாக உருவாகிறது. இன்னும் தலைப்பு சூட்டப்படாத இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகி வருவதுடன், முழுக்க முழுக்க பெண்களை […]

துல்கர் சல்மானின் ‘I Am Game’ – சென்னையில் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா!

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘I Am Game’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில், திரைப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அவரது திரைப்பயணத்தின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ஃபேண்டஸி த்ரில்லர் மற்றும் […]

ராஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்தை அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ராஷ்மிகா, கோண்ட் பழங்குடியின பெண்ணாக மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாபாத்திரத்தின் தன்மையை திரையில் இயல்பாக வெளிப்படுத்துவதற்காக ராஷ்மிகா கடுமையாக உழைத்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பார்வை ஏற்கனவே ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது ‘மைசா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு […]