‘ஹனுமான்’ பட நாயகன் தேஜா சஜ்ஜாவுக்கு கோலாகலமாக நடைபெற்ற நிச்சயதார்த்தம்!

‘ஹனுமான்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுக்கும், மௌரியாவுக்கும் இன்று (நவம்பர் 17) ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இருவீட்டாரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

இந்த விழாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, தெலங்கானா ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா, மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, தெலங்கானா திரைப்படத் துறை அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, அமைச்சர் சீதக்கா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஹரீஷ் ராவ், கண்டா ஸ்ரீனிவாச ராவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இயக்குநர் கே. ராகவேந்திர ராவ், தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், சுரேஷ் பாபு, தில் ராஜு, டி.ஜி. விஸ்வ பிரசாத், சுஷ்மிதா கொனிடேலா, சாஹு கரபதி, வெங்கட் போயனப்பள்ளி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்றனர்.

- Advertisement -

நடிகர்கள் ஸ்ரீகாந்த், ரவி தேஜா, நானி, ராணா டகுபதி, அதிவி சேஷ், சுதீர் பாபு, வரலட்சுமி சரத்குமார், நிதி அகர்வால், நிஹாரிகா கொனிடேலா, ரித்திகா நாயக், இமான்வி உள்ளிட்டோரும் நேரில் வந்து வாழ்த்தினர். இயக்குநர்கள் பி. கோபால், அனில் ரவிபுடி, பிரசாந்த் வர்மா, சிவா நிர்வாணா, நந்தினி ரெட்டி, கார்த்திக் கட்டம்னேனி, மாருதி, சந்து மொண்டேட்டி, சைலேஷ் கொலானு, பி.வி.எஸ். ரவி உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

ஏராளமான திரைப்பிரபலங்களும், முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தாலும், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் அன்பும் பாசமும் நிறைந்த குடும்ப விழாவாகவே இந்த நிச்சயதார்த்த நிகழ்வு அமைந்தது.

அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த இந்தத் தருணத்தில் தேஜா சஜ்ஜா – மௌரியா ஜோடி தங்களது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர். இவர்களது திருமணம் வரும் டிசம்பர் மாதம் பிரம்மாண்டமான டெஸ்டினேஷன் வெட்டிங் முறையில் நடைபெற உள்ளது.

புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் தேஜா சஜ்ஜா – மௌரியா ஜோடிக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Engagement Ceremony of Hanuman Actor Teja SajjaTeja Sajja