Browsing category

Latest News

நடிகர் பரத் நடிக்கும் புது படம் பூஜையுடன் தொடக்கம்

ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம், பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் எம். குரு எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகர் பரத் மற்றும் மலையாள நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இணைந்து நடிக்கின்றனர். அக்டோபர் 21 அன்று நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். பரத், ராஜேஷ் மாதவன், சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் […]

அப்பா குட்டி படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய விஜய் ஆண்டனி மியூசிக்!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை விஜய் ஆண்டனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மு. மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படம், தந்தை – மகள் இடையேயான பாசம், அன்பு, தியாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆக்‌ஷன் குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாகும். குடும்ப உணர்வுகள், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் மற்றும் அழுத்தமான திரைக்கதை என […]

தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தசரா பண்டிகையை முன்னிட்டு, ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் 2027-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘பலேகம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வேணு யெல்தண்டி இப்படத்தை இயக்குகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தில்ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘எல்லம்மா’ […]

தயிர் வடை கொடுத்த பள்ளிப் பருவ நினைவுகள்.. கண்கலங்கிய நடிகை சமந்தா

எண்டமோல் ஷைன் இந்தியா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில், நடிகை சமந்தா ரூத் பிரபு தனது பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு கண்கலங்கிய தருணம் பார்வையாளர்களை நெகிழச் செய்துள்ளது. சில உணவுகளின் சுவை, நம்மைக் கடந்து வந்த காலத்திற்கே அழைத்துச் செல்லும் வல்லமை கொண்டது. அப்படியொரு உணர்ச்சிகரமான அனுபவத்தைச் சமந்தா இந்த நிகழ்ச்சியில் எதிர்கொண்டுள்ளார். பள்ளிப் பருவத்தில் தனக்கு மிகவும் பிடித்த உணவாக, பல்லாவரத்தில் உள்ள துர்கா ஹோட்டலின் புகழ்பெற்ற தயிர் வடையை […]

இசையமைப்பாளரான பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ்

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், பின்னணிப் பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது இசையமைப்பாளராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். 25-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ள ஜனனி, ‘அசல்’ படத்தின் ‘Tottadaing’, ‘ஐயா’ படத்தின் ‘Athiri Pathiri’, ‘பள்ளிக்கூடம்’ படத்தின் ‘Indha Nimidam’, ‘பிறப்பு’ படத்தின் ‘Ulaga Azhagi Naan Dhan’ உள்ளிட்ட பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். தற்போது கனடாவில் வசித்து வரும் ஜனனி, பின்னணிப் பாடகியாகத் தனது திறமையை வெளிப்படுத்தியதுடன், சுயாதீன […]

லோன் வாங்கி கார் வாங்காதீங்க… மாட்டிக்குவீங்க! – நடிகர் அப்புக்குட்டி அட்வைஸ்!

‘பண்டமாற்று’ குறும்பட விழாவில் பேசிய நடிகர் அப்புக்குட்டி, கார் வாங்குவதற்காகக் கடன் பெறுவது மற்றும் வட்டிக்குப் பணம் வாங்குவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் பேசுகையில், “‘பண்டமாற்று’ படத்தின் கதை வட்டிக்குப் பணம் வாங்குவது, கார் அடமானம் வைப்பது, அதனால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. நானும் எனது காரை அடமானம் வைத்து அவதிப்பட்டிருக்கிறேன். எல்லா நடிகர்களும் வசதியானவர்கள் கிடையாது. 10 சதவீத நடிகர்கள் மட்டுமே வசதியாக இருக்கிறார்கள். […]

நடிகை சைத்ரா ஆச்சார் நடிக்கும் ‘418’ அக்டோபர் 23-ல் ரிலீஸ்!

இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திகில் மற்றும் மர்மம் நிறைந்த திரைப்படம் ‘418’. கீர்த்தன் நடாகௌடா இயக்கியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 23-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தில் சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்ய ராஜ் வீரபதினி, ப்ரீத்தி […]

இளையராஜா இசையில் உருவாகும் புதிய படம்… முதல் காட்சியைப் படமாக்கிய பாலா!

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ மற்றும் அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனம், தனது அடுத்த திரைப்படத்தைத் தொடங்கியுள்ளது. கணேஷ் ரகு தயாரிப்பில், இயக்குநர் அமீரின் உதவி இயக்குநரான இராம்.நா இப்படத்தை இயக்குகிறார். அமெரிக்காவில் வசித்து வரும் தயாரிப்பாளர் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ […]

காந்தாரா படத்தைத் தொடர்ந்து தெய்வீக மர்மத் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் ‘ஆதி ருத்ரா’

‘காந்தாரா’ திரைப்படத்தைத் தொடர்ந்து தெய்வீகம், ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் மற்றுமொரு பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படமாக ‘ஆதி ருத்ரா’ உருவாகிறது. ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை Trishul Entertainments நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை பிரசாந்த் G. ருத்ரப்பா தயாரிக்கிறார். ‘டண்டுபால்யா’, ‘கிருஷ்ண பிரணய சகி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த அனுபவம் கொண்ட இவர், இயக்குநர் நவரசன் எழுதி இயக்கும் ‘ஆதி ருத்ரா’ திரைப்படத்தைப் பிரம்மாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். […]

பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில் 5,000 பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். தனது பிறந்தநாளான அக்டோபர் 29-ம் தேதி, தான் வளர்ந்த ராயபுரத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். லாரன்ஸ் அறக்கட்டளை தனது 20 ஆண்டுகால சேவையை நிறைவு செய்துள்ள நிலையில், இந்தப் புதிய சமூகநலத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாகக் குழந்தைகளின் கல்வி, இதய அறுவை சிகிச்சைகளுக்கான உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு, […]