‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களை இயக்கிய வாலி மோகன் தாஸ், தற்போது தனது அடுத்த திரைப்படமான ‘புரொடக்ஷன் நம்பர் 01’ படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் தேஜய் அருணாசலம் கதாநாயகனாக நடிக்க, திவிஜா பிரபாகர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை வாலி மோகன் தாஸ் தயாரித்து இயக்குகிறார். வாலி மோகன் தாஸ் மற்றும் உமர் எஸ். இணைந்து திரைக்கதை மற்றும் வசனப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சாம் சி.எஸ். இசையமைக்க, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.
- Advertisement -
இந்தியா ஃபிலிம் கம்பெனி, ஸ்ரீ சுமனோஹரா புரொடக்ஷன்ஸ் மற்றும் கிராட்டிட்யூட் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ரங்கோலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வாலி மோகன் தாஸ், தொடர்ந்து ஷேன் நிகம், நிஹாரிகா கொனிடேலா மற்றும் கலைராசன் நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்காரன்’ படத்தை இயக்கியிருந்தார்.
இந்த இரு படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கும் புதிய திரைப்படம் என்பதால், ‘புரொடக்ஷன் நம்பர் 01’ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.