Browsing category

Latest News

கனத்த இதயத்துடன்… ராகவை வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லும் விஜய் சேதுபதி!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், ராகவின் உடல்நிலை காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, ராகவின் காலுக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். உடல்நலனுக்கு முன்னுரிமை அளித்து, வீட்டிலிருந்து வெளியேறுமாறு ராகவிடம் அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். இந்த அறிவிப்பைக் கேட்டு பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்தனர். குறிப்பாக, லக்ஷ்மி பிரியா தனது வேதனையை […]

ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக அரங்கேறும் ‘ராமாயணா’அக்டோபர் 27-ல் உலகளாவிய பிரீமியர் காட்சி!

ரன்பீர் கபூர், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் காட்சி, அக்டோபர் 27-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸின் டேவிட் கெஃபென் திரையரங்கில் மாலை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி, அழைப்பின் பேரில் மட்டுமே பங்கேற்கக்கூடிய சிறப்பு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஹாலிவுட் பிரபலங்கள், திரைப்பட இயக்குநர்கள், சர்வதேச ஊடகத்தினர் […]

மெர்சல் படக் கடன் வழக்கு – ஸ்ரீபிரியாவிற்கு சாதகமாக உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்துக்காக வழங்கப்பட்ட கடன் தொடர்பான வழக்கில், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் சேதுபதியின் மெரினா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்குச் சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. குமரேஷ் பாபு, கடந்த அக்டோபர் 16-ம் தேதி, மெரினா ஹோல்டிங்ஸ் மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என். ராமசாமி ஆகியோருக்கு எதிராக சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் தாக்கல் செய்த உரிமைக் […]

160 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற ‘சம்பராலா ஏடி கட்டு’ படப்பிடிப்பு நிறைவு!

மெகா சூப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிப்பில், இயக்குநர் ரோஹித் கே.பி. இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட பான் இந்தியத் திரைப்படமான ‘சம்பராலா ஏடி கட்டு’ (SYG) படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 160 நாட்களுக்கும் மேலாக, 10-க்கும் மேற்பட்ட கட்டங்களாக நடைபெற்ற படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இப்படம் 2027 ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘ஹனுமேன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் […]

பிக்பாஸ் சீசன் 10: எவிக்‌ஷன் ஃப்ரீ பாசை தட்டிச் செல்லும் TTF வாசன்!

வைரத்தைத் திருடி விமலின் பாராட்டைப் பெற்ற TTF வாசன்… Eviction Free Pass-ம் கிடைத்தது! பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடைபெற்ற கிரேட் டைமண்ட் ஹீஸ்ட் டாஸ்க்கில் வைரத்தைத் திருடி அசத்திய TTF வாசனுக்கு, நடிகர் விமலின் பாராட்டும், Eviction Free Pass-ம் கிடைத்துள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் மேடையில் சுவாரஸ்யமான நிகழ்வு அரங்கேறுகிறது. நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, தனது நண்பர் ஒருவர் நிகழ்ச்சியைக் காண வந்திருப்பதாகக் கூறி அவரை மேடைக்கு அழைக்கிறார். அவர் […]

கோலாலம்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஒன்றா ரெண்டா – GVM-இன் 25 ஆண்டுகள்’ இசை நிகழ்ச்சி!

இந்தியத் திரையுலகில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகாலத் திரைப்பயணத்தைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற ‘ஒன்றா ரெண்டா – GVM-இன் 25 ஆண்டுகள்’ இசை நிகழ்ச்சி, மலேசியாவின் கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அக்டோபர் 10, 2026 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது சர்வதேச அளவில் இந்த இசை நிகழ்ச்சி விரிவடைந்துள்ளது. கௌதம் […]

நடிகர் துல்கர் சல்மானின் ஏஒடி படத்தின் டீசர்!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஒடி (AOT)’ திரைப்படம், அவரது பான் இந்திய ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் படைப்பாக உருவாகி வருகிறது. தனித்துவமான கதை சொல்லும் பாணிக்குப் பெயர் பெற்ற இயக்குநர் பவன் சாதினேனி இப்படத்தை இயக்கியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் (Geetha Arts) மற்றும் ஸ்வப்னா சினிமா (Swapna Cinema) வழங்கும் இப்படத்தை, லைட்பாக்ஸ் மீடியா (Lightbox Media) சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் […]

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slum Dog: 33 Temple Road) திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. பூரி கனெக்ட்ஸ் (Puri Connects) நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஏற்கெனவே வெளியான விளம்பரக் காணொளிகள் மற்றும் முன்னோட்டங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

ஜெயிலர் 2 இரண்டாவது நாள் வசூல் தெரியுமா?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,200 திரையரங்குகள் உள்பட உலகம் முழுவதும் சுமார் 14,000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. படம் வெளியானது முதலே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பல்வேறு திரையரங்குகளிலும் ரசிகர்களின் கொண்டாட்டம் […]

தேனிசைத் தென்றல் தேவா மறைவு: முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், கானா பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு, தமிழக முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தேவாவின் மறைவுச் செய்தி தமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் ரசிகர்களைக் கவர்ந்தவர் […]