திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரியா பவானி சங்கர்.. நெகிழ்ச்சிப் பதிவு

நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்டகாலக் காதலரான ராஜை இன்று (நவம்பர் 11) திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தனது திருமணம் குறித்த மகிழ்ச்சியான செய்தியைப் பிரியா பவானி சங்கர் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நவம்பர் 11-ம் தேதி, எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எனக்கும் ராஜுக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது.

இத்தனை ஆண்டுகளாக எனது பயணத்தில் அன்பும் ஆதரவும் அளித்து, வாழ்வின் முக்கியமான தருணங்களில் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக்கொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

- Advertisement -

நெருங்கியவர்கள் சூழ ஒரு சிறிய நிகழ்வாகத் திருமணத்தைக் கொண்டாடியதால், உங்கள் அனைவரையும் நேரில் அழைக்க இயலவில்லை. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் எதிர்பார்க்கிறோம். உங்கள் அன்பு என்றும் எங்களுடன் இருக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாகக் காதலித்து வந்த பிரியா பவானி சங்கர் – ராஜ் ஜோடி திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில், இவர்களுக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Priya bhavani shankarPriya Bhavani Shankar Officially Announces Her Wedding with an Emotional Note