Browsing category

Latest News

ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, ‘சிக்மா’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் தமிழ்குமரன், ஜேசன் சஞ்சய்யை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் லைகா நிறுவனத்திற்கு இருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்தின் […]

ஹபீபி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

காதல் கடிதங்கள், ஆடியோ கேசட்டுகள், நீண்ட தொலைபேசி அழைப்புகளுக்கான காத்திருப்பு என காதல் தனக்கென ஒரு தனி உலகத்தை கொண்டிருந்த காலத்தை மீண்டும் நினைவூட்டும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹபீபி’. மீரா கதிரவன் இயக்கியுள்ள இந்த தமிழ் காலகட்ட காதல் திரைப்படம், செப்டம்பர் 25 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திருநெல்வேலி அருகே உள்ள ஒரு சிறிய நகரத்தை பின்னணியாகக் கொண்டு, நான்கு தசாப்தங்களைக் கடந்து பயணிக்கும் காதல் கதையாக ‘ஹபீபி’ உருவாகியுள்ளது. குடும்பம், […]

புதுச்சேரி முதல்வர் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ படத்தின் இரண்டாவது பார்வை!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். சீயோன் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி வெளியிட்டார். மேலும், படக்குழுவினரை வாழ்த்திய அவர், திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளையும் பார்வையிட்டு படக்குழுவினரின் பணியைப் பாராட்டினார். பொதுநலன் சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள தக்க்ஷன் விஜய்யையும் […]

பத்தா இசை வெளியீட்டு விழா – ரசிகர்கள் முன்னிலையில் அசத்திய விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஸ்டார் ஸ்டுடியோ18 மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர். அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் […]

ஆஸ்கரை நோக்கி இசைஞானி இளையராஜா!

கலைவளரி சக இரமணதாஸ் மற்றும் சுகந்தினி இரமணதாஸ் தயாரிப்பில், கயல் வின்சன்ட், TJ. பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘அந்தோனி’. சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் மூன்று மொழிகளில் உருவான இப்படம், சமீபத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ, OTT Plus, Shortflix, Tentkotta, Roopahala உள்ளிட்ட […]

சந்தீப் பிரதாப் நடிக்கும் “பிக்னிக்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

பாவனா ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பாக உருவாகும் ‘பிக்னிக்’ (Picnic) திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிரேமலு’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ உள்ளிட்ட படங்களில் இணை எழுத்தாளராகப் பணியாற்றிய கிரண் ஜோசி, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் பிரதீப், இந்திரஜித் சுகுமாரன், திலீஷ் போத்தன், சுஜினா ஸ்ரீதரன் மற்றும் அக்ஷதா அஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். குடும்ப நகைச்சுவை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், 2027 ஜனவரி 14-ம் […]

வெளியில் உள்ள யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை – நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கடந்த வாரம் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்றைய எபிசோடில் அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார். தான் கடந்த வாரம் கூறிய கருத்துகள், பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள், அங்கு நடைபெறும் விளையாட்டு மற்றும் வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என விஜய் சேதுபதி தெளிவுபடுத்துகிறார். நிகழ்ச்சிக்கு வெளியே இருக்கும் யாரையும் குறிப்பிட்டு அந்த கருத்துகள் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் […]

காதலாக தொடங்கி ஆக்‌ஷனாக மாறும் அன்பில் அவன் டிரெய்லர் வெளியானது

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் கதைக்களம் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. காதலை மையமாகக் கொண்டு தொடங்கும் டிரெய்லரில், குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்க முயற்சிக்கும் காதலர்களின் பிரச்சனைகள் காட்டப்படுகின்றன. காதல், உறவு மற்றும் குடும்ப எதிர்ப்பு என இயல்பான […]

24-ம் தேதி திரையரங்குகளில் தரமான சம்பவம் காத்திருக்கிறது! – நானி நம்பிக்கை

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படக்குழுவினர் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கியுள்ள இப்படத்தில் நானியுடன் கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்புத் தோற்றத்தில் […]

”ஒன்றா ரெண்டா” திரைத்துறையில் 25 ஆண்டு கால பயணத்தை கொண்டாடும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, அவரது திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, தற்போது இந்த இசைக் கொண்டாட்டம் மலேசியாவின் கோலாலம்பூருக்கு பயணிக்கிறது. ‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி வரும் அக்டோபர் 10, 2026 அன்று கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களுடன் […]