Browsing tag

Anirudh

அரசன் படத்திலிருந்து அனிருத் விலகலா? – தயாரிப்பாளர் தாணு பதில்!

‘அரசன்’ திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகிவிட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பதிலளித்துள்ளார். ‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் யானை மாதிரியைத் தமிழகம் முழுவதும் சுற்றி வரும் நிகழ்வைத் தொடங்கி வைத்த தாணு, அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ‘அரசன்’ படத்தின் முன்னோட்டக் காட்சி விமர்சனங்களைச் சந்தித்தது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அந்த வீடியோ யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, அனிருத் ‘அரசன்’ […]

15 ஆண்டுகால இசைப் பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட அனிருத்!

இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் தனுஷ் பாடிய ‘Why This Kolaveri Di’ பாடல் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்தின் முதல் பாடலான இது, வெளியான காலகட்டத்திலேயே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், ஆங்கிலம் கலந்த வித்தியாசமான வரிகளுடன் உருவான இப்பாடல், மொழிகளைக் கடந்து ரசிகர்களைக் கவர்ந்ததுடன், இணையத்திலும் மிகப்பெரிய வைரல் ஹிட்டானது. தற்போது வரை யூடியூபில் 622 […]

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் அனிருத்!

சிலம்பரசன் TR நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டபடி எந்தவிதத் தொய்வும் இன்றி படப்பிடிப்பு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசன் TR, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சந்தித்து, படத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ரசிகர்கள் […]

முதலமைச்சர் விஜய்யுடன் பயணித்தது குறித்து இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சி பதிவு!

நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு சிக்கல்களை கடந்து கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இதன் காரணமாக திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது […]

அனிருத்துடன் இணைந்த வேடன்

இசைப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளதாக பாடகர் வேடன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். முதல் முறையாக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உடன் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வரவிருக்கும் ‘DC’ திரைப்படத்திற்காக சமீபத்தில் சென்னை நகரில் பாடல் பதிவு நடைபெற்றதாகவும், அந்த அனுபவம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்ததாகவும் வேடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முதல் முறையாக ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் சாருடன் இணைந்து ஒரு பாடல் […]